
மட்டன் கிரேவி ரெசிபி செய்வது எப்படி
மட்டன் கறி என்பது மிகவும் சுவையான ரெசிபி. பலருக்கு உடனடியாக செய்து சாப்பிடுவது கடினமாக இருக்கும். இதைச் செய்வதும் ஈஸி தான். இதை சுவையாக எளிதாக சமைக்கலாம். அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
மட்டன் கிரேவி அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். வீட்டில் நீங்கள் எப்போதும் செய்வது போல இல்லாமல் இந்த வீக் எண்ட் இந்த மாதிரி ஸ்டைலில் மட்டன் கிரேவி சமைத்து பாருங்கள். வீட்டில் உள்ளவர்கள் மீண்டும் மீண்டும் கேட்பார்கள். இந்த ரெசிபி செய்வதும் மிகவும் ஈஸிதான். இதோ மட்டன் கிரேவி எப்படி செய்வது என்பது குறித்து இதில் பார்க்கலாம்
மட்டன் கிரேவி செய்ய தேவையான பொருட்கள்
மட்டன் – 1/2 கிலோ
பெரிய வெங்காயம் – 4
தக்காளி -2
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
மல்லித்தூள் -1 டீஸ்பூன்
தேவையான அளவு உப்பு
தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா – 1/4 டீஸ்பூன்
நல்லெண்ணெய் – 5 டேபிள் ஸ்பூன்
செய்முறை
மட்டன் கறி என்பது மிகவும் சுவையான ரெசிபி. பலருக்கு உடனடியாக செய்து சாப்பிடுவது கடினமாக இருக்கும். இதைச் செய்வதும் ஈஸி தான். இதை சுவையாக எளிதாக சமைக்கலாம். அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
முதலில் ஒரு குக்கரை எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதை கேஸ் ஸ்டவ்வில் வையுங்கள். முதலில் குக்கரில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இஞ்சி பூண்டு பேஸ்ட் பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கி கொள்ளுங்கள். அது நன்கு வதங்கியதும் சுத்தம் செய்து வைத்துள்ள மட்டனை சேர்த்து நன்கு வதக்குங்கள்.
மட்டன் நன்கு வதங்கியதும் அந்த மட்டனில் மஞ்சத்தூள். மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு, கரம் மசாலா, தயிர் என அனைத்தையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். மசாலா அனைத்தும் மட்டனில் ஓரளவுக்கு இறங்கிய பின்பு சிறிதளவு தண்ணீர் சேர்த்து நான்கு விசில் வரும் வரை மட்டனை நன்கு வேக விட வேண்டும்.
நான்கு விசில் வந்ததும் விசில் அடங்கிய பிறகு குக்கரை திறந்து பார்த்தால் கம கம என மட்டன் ரெடியாக இருக்கும். கடைசியாக நீங்கள் கொத்தமல்லி இலை தூவி பரிமாறலாம். இந்த மட்டன் கிரேவியை நீங்கள் இட்லி தோசை அல்லது சாதம் என அனைத்திலும் வைத்து சாப்பிடலாம். நீங்கள் வழக்கமாக வைக்கும் மட்டன் கிரேவியை விட இந்த ஸ்டைலில் செய்து பார்த்தால் இன்னும் சுவை அருமையாக இருக்கும். எனவே இந்த வாரம் இந்த மாதிரி முறையில் மட்டன் கிரேவி செய்து சாப்பிட்டு பாருங்கள். வீட்டில் உள்ளவர்கள் மீண்டும் மீண்டும் கேட்பார்கள். அந்த அளவிற்கு இந்த மட்டன் கிரேவி சுவையாக இருக்கும்.