
100 கோடி ரூபாய் வசூல் கிளப்பில் இணைந்த குபேரா திரைப்படம்..
தனுஷ், நாகார்ஜுனா,ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவான குபேரா திரைப்படம் வெளியான 5 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளது.
நடிகர் தனுஷ் மற்றும் நாகார்ஜுனா முக்கிய வேடங்களில் நடித்த ‘ குபேரா’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வருகிறது. சேகர் கம்முலா இயக்கிய இந்த திரைப்படம் கலவையான வரவேற்பைப் பெற்றுள்ளது. ஜூன் 20 அன்று வெளியான இந்த திரைப்படம், சிறப்பான வரவேற்போடு அதிரடியாக வசூலைக் குவித்து வருகிறது. இந்த நிலையில், ‘ குபேரா’ திரைப்படம் ஒரு முக்கியமான மைல் கல்லை எட்டியுள்ளது.
100 கோடி வசூல் கிளப்
‘குபேரா’ திரைப்படம் உலகளவில் 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளது.இந்தப் படம் வெளியான ஐந்து நாட்களில் இந்த மைல் கல்லை எட்டி உள்ளது. இந்த தகவலை திரைப்படக் குழு இன்று (ஜூன் 25) அறிவித்துள்ளது. உலகளவில் 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளதாக ஒரு போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. இயக்குனர் சேகர் கம்முலா முதல் முறையாக 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளார்.
தமிழில் மந்தமான வசூல்..
குபேரா’ திரைப்படம் தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளில் வெளியாகியுள்ளது. ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் ஆரம்பத்திலிருந்தே தெலுங்கில் நல்ல வசூலைப் பெற்று வருகிறது. சூப்பர் ஹிட் பாதையில் பயணித்து வருகிறது. ஆனால், தனுஷுக்கு அதிக ரசிகர்கள் உள்ள தமிழ்நாட்டில் எதிர்பார்த்த அளவுக்குச் செயல்படவில்லை. தமிழில் வசூல் சற்று மந்தமாக உள்ளது. தெலுங்கில் அதிக வசூல் கிடைத்துள்ளது. மற்ற மொழிகளில் மிதமான வசூல் உள்ளது.
குவியும் பாராட்டுகள்..
‘குபேரா’ திரைப்படம் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தை உருவாக்கிய இயக்குனர் சேகர் கம்முலாவுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. பெரிய அளவிலான மோசடி, ஒரு பணக்காரருக்கு எதிராக ஒரு ஏழை போராடுவது போன்ற சுவாரஸ்யமான கதையை அவர் உருவாக்கியுள்ளார். திகில் காட்சிகளுடன் சமூகத்தில் உள்ள சூழ்நிலைகளையும் வலுவாகக் காட்டியுள்ளார்.
Wealth. Wisdom. And now… ₹100+CR worth of WAVE 🌊#Kuberaa rules with a grand century at the box office.🔥
— Kuberaa Movie (@KuberaaTheMovie) June 25, 2025
Book your tickets now: https://t.co/4LlzXfPwzT #Kuberaa#BlockBusterKuberaa #SekharKammulasKuberaa #KuberaaInCinemasNow pic.twitter.com/xKr1UYXP60
தனுஷிற்கு தேகிய
இந்த திரைப்படத்தில் தனுஷின் நடிப்பு மீண்டும் அசத்தலாக உள்ளது. ஏழையின் பாத்திரத்தில் உயிர் கொடுத்துள்ளார். அவருக்கு மற்றுமொரு தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிங் நாகார்ஜுனா வித்தியாசமான வேடத்தில் அசத்தியுள்ளார். நாயகி ரஷ்மிகா மந்தனா முக்கிய வேடத்தில் கவர்ந்துள்ளார். ஜிம் சர்ப் எதிர்மறை வேடத்தில் நடித்துள்ளார்.
‘குபேரா’ திரைப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு இந்த திரைப்படத்திற்கு மற்றொரு சிறப்பம்சமாக அமைந்துள்ளது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி, அமிக்கோஸ் க்ரியேஷன்ஸ் பட நிறுவனங்கள் சார்பில் சுனில் நாரங், புஷ்கர் ராம் மோகன் ராவ், அஜய் கைக்காலா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.