
ரசிகர்களை வைப் ஆக்கும் சிகிட்டு பாடல்..!
கூலி படத்தின் சிகிட்டு பாடலின் மியூசிக் வீடியோவை வெளியிட்டு ரஜினி ரசிகர்களை வைப் ஏற்ற வைத்துள்ளது படக்குழு.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாயகனாக நடிக்கும் கூலி திரைப்படம் மீதான ஆர்வம் மக்களிடம் நாளுக்கு நாள் அதிகமாக உள்ள நிலையில் இன்று ஜூன் 25 ஆம் தேதி கூலி படத்தில் இருந்து சிகிட்டு பாடலின் மியூசிக் வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு.
வைப் கொடுத்த அப்டேட்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்திற்கான அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் சிகிட்டு பாடலின் மியூசிக் வீடியோவை வெளியிட்டு வைப் ஆக்கியுள்ளது.
சிகிட்டு பாடல்
சுமார் 4 நிமிடங்களுக்கு மேல் உள்ள இந்தப் பாடலின் வீடியோவில், ரஜினிக்காக மாஸ் கன்டென்ட்கள் உள்ளது. இந்தப் பாடலுக்கு அனிருத் இசையமைத்தது உடன் பாடவும் செய்திருக்கிறார். அவருடன் சேர்ந்து நடிகரும் இயக்குநருமான டி.ராஜேந்தரும் பாடியுள்ளார். தெருக்குரல் அறிவு இந்தப் பாடலை எழுதியுள்ளார்.
இந்தப் பாடலில், ‘ஏய்.. சவுண்ட ஏத்து.. தேவா வரான்டே..’ போன்ற வரிகள் ரசிகர்களை ஹைப் ஏற்றி உள்ளது. பாடலை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். பலரும் ரஜினியையும் அவரது நடனத்தையும் சிலாகித்து வருகின்றனர்.
சிலாகிக்கும் ரசிகர்கள்
“தலைவர் ரஜினிகாந்த் ரசிகராக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி, அவர் தனது 74+ வயதிலும் தனது ரசிகர்களை மகிழ்விக்க தன்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறார் என ஒருவர் புகழ்ந்துள்ளார். மற்றொருவர், “மஜா வைப் பா, டி.ஆர் குரல் (இதயக் கண் ஈமோஜி) தலைவர் மாஸ்” என்று எழுதினார். ஒரு ரசிகர் இதை ‘அற்புதமான பரிசு’ என்றும், மற்றொருவர் ‘எதிர்பாராதது’ என்றும் அழைத்தார். சிலர் பாடலுக்காக அனிருத் மற்றும் லோகேஷுக்கு நன்றி தெரிவித்தனர். “தலைவா யுவர் லுக்கிங் சோ யங்” என்று ஒரு ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
கூலி படம்
கூலி ரஜினியின் 171-வது படம். அவருடன் நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன், சத்யராஜ் மற்றும் ரெபா மோனிகா ஜான் ஆகியோரும் நடித்துள்ளனர். லோகேஷின் முந்தைய படங்களைப் போலல்லாமல், கூலி லோகேஷ் கனகராஜ் சினிமாட்டிக் யுனிவர்ஸின் (எல்.சி.யு) ஒரு பகுதியாக இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.