
மழைக்கு இதமாக பூண்டு சாதம் செய்யலாமா.. ருசி அட்டகாசமா இருக்கும் பாருங்க!
இனிமேல் மீதமாகும் சாதம் வீணாகும் என்ற கவலை உங்களுக்கு வேண்டாம். மீதமாகும் சாதத்தை பயன்படுத்தி சுவையான பூண்டு சாதம் செய்யலாம். வீட்டில் எளிதாகவும், சுவையாகவும் செய்யக்கூடிய இந்த பூண்டு சாதம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு எப்படி செய்வது என்று பார்ப்போம்.
பொதுவாக வீடுகளில் மதியத்திற்கு சமைக்கும் சாதம் சிறிது மீதமாகுவது வழக்கம்தான். ஆனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வைர் சாப்பிட்ட மீதமுள்ள உணவை மறுபடியும் இரவில் சாப்பிட சற்று தயக்கம் காட்டுவார்கள். ஒவ்வொரு நாளும் புதிய உணவு இருந்தால் நன்றாக இருக்கும் என்று விரும்புவார்கள். ஆனால் சில நேரங்களில் சாதம் அதிகமாகிவிடும், அப்போது அதை வீணாக்கிவிடுவோம். ஆனால், இனிமேல் மீதமாகும் சாதம் விணாகும் என்ற கவலை உங்களுக்கு வேண்டாம். மீதமாகும் சாதத்தை பயன்படுத்தி சுவையான பூண்டு சாதம் செய்யலாம். வீட்டில் எளிதாகவும், சுவையாகவும் செய்யக்கூடிய இந்த பூண்டு சாதம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு எப்படி செய்வது என்று பார்ப்போம்.
மேலும் படிக்க | கோயில் பிரசாதம் டேஸ்ட்டில் தித்திக்கும் சர்க்கரை பொங்கல் செய்யலாமா?
பூண்டு சாதம் செய்ய தேவையான பொருட்கள்:
பூண்டு பற்கள் – 100 கிராம்
சிகப்பு மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
அம்சூர் தூள் – 1 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் – – 1 தேக்கரண்டி
கரம் மசாலா – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
பெருங்காய தூள் – 1/4 ஸ்பூன்
சீரகம் – 1/2 தேக்கரண்டி
கடுகு உளுந்தம் பருப்பு – 1/2 தேக்கரண்டி
தேவையான அளவு – உப்பு
எண்ணெய் – 3 தேக்கரண்டி
எலுமிச்சை – 1
புதிய கொத்தமல்லி இலைகள் – சிறிதளவு
மண மணக்கும் பூண்டு சாதம் செய்முறை
முதலில் பூண்டு பற்களை தோலுரித்து எடுத்து கொள்ளவும். அதை சிறிய துண்டுகளாக வெட்டவோ அல்லது நசுக்கவோ செய்யலாம். பின்னர் அனைத்து மசாலா பொருட்களையும் சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு பேஸ்ட் போன்று தயார் செய்ய வேண்டும். ஒரு வாணலியி ல் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்க்க வேண்டும். பின்னர் அதில் கடுகு உளுந்து சேர்த்து தாளிக்க வேண்டும். மேலும் அதில் சீரகம் சேர்த்து பொரிய விட வேண்டும். அதில் ஒரு கொத்து கறிவேப்பிலையை சேர்க்க வேண்டும். அதில் பெருங்காய்த்தை சேர்க்க வேண்டும். அதில் பூண்டு பேஸ்ட்டை சேர்க்க வேண்டும். உடனடியாக அடுப்பை மிதமான தீயில் வைத்து வதக்க வேண்டும். பூண்டு வெந்ததும் அடுப்பை அணைக்கவும்.
மேலும் படிக்க | உடல் எடையை அதிகரிக்குமா உருளைக்கிழங்கு: நிபுணர் கூறும் 5 ஆரோக்கியமான உணவுகள் இதோ!
மற்றொரு வாணலியில் எண்ணெய் சேர்த்து சாதத்தை சேர்த்து கலந்து சிறிது நேரம் வதக்க வேண்டும். பின்னர் தயார் செய்து வைத்த பூண்டு பேஸ்ட்டை சேர்க்க வேண்டும். கடைசியாக அதில் புதிய கொத்தமல்லி சேர்த்து, எலுமிச்சை சாறு சேர்த்து பரிமாற வேண்டும். பூண்டு சாதத்தை தயிர் அல்லது வெங்காய ரைத்தாவுடன் சேர்த்து சாப்பிடலாம். நீங்கள் விரும்பினால் வறுத்த வேர் கடலை பருப்பையும் சேர்க்கலாம்.
குறிப்பு : பூண்டு சாதத்தை சமைக்கும் போது நீங்கள் அதில் வெங்காயம் சேர்த்து வதக்கினால் ருசி அட்டகாசமாக இருக்கும்.