
உஸ்மான் கவாஜா (image source : x -@CallMeSheri1)
பீட்டர் லாலாரை வேலையிலிருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உஸ்மான் கவாஜா ஆஸ்திரேலிய வானொலி நிறுவனத்திற்கு பேட்டி அளிக்க மறுத்துள்ளார்.
ஆஸ்திரேலிய ஒளிபரப்பு நிறுவனமான SEN வானொலியில் பேட்டி அளிக்க அந்நாட்டு கிரிக்கெட் அணி வீரர் உஸ்மான் கவாஜா மறுத்துள்ளார். இது, அந்த நிறுவனம் மூத்த கிரிக்கெட் பத்திரிகையாளர் பீட்டர் லாலாரை வேலையிலிருந்து நீக்கியதற்கு எதிரான அமைதியான ஆனால் நேரடியான எதிர்ப்பாகும். சிட்னி மார்னிங் ஹெரால்டு பத்திரிகையின் கூற்றுப்படி, வெஸ்ட் இண்டீஸ் எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் 47 ரன்கள் எடுத்த கவாஜா, நாள் முடிவுக்குப் பிறகு அணி ஊடக மேலாளர் கோல் ஹிட்ச்காக்கால் SEN விளக்க உரை வல்லுநர்கள் ஆடம் காலின்ஸ் மற்றும் பாரத் சுந்தரேசன் ஆகியோருடன் பேட்டி எடுக்க அணுகப்பட்டார்.
ஆனால், கவாஜா மரியாதையுடன் அதை மறுத்துவிட்டார். இந்த முடிவு, 2025 பிப்ரவரியில் இலங்கை சுற்றுப்பயணத்தின் போது SEN இன் கிரிக்கெட் செய்தி கவரேஜில் இருந்து லாலாரை திடீரென நீக்கியதற்கு எதிரான கவாஜாவின் எதிர்ப்பினால் ஏற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. லாலாரின் நீக்கம், அவரது சமூக ஊடக நடவடிக்கைகள் குறித்த உள்நாட்டு கவலைகளின் பின்னணியில் நடந்ததாக சொல்லப்படுகிறது.
இதில், கஜாவில் இஸ்ரேலின் வான் தாக்குதல்கள் மற்றும் பாலஸ்தீன சிறைச்சாலைகளில் இருந்து சிறைவாசிகளை விடுவித்தல் ஆகியவற்றை பற்றிய பதிவுகளை மீண்டும் பகிர்ந்தது அடங்கும். அந்த நேரத்தில், கவாஜா உட்பட பலர் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். இன்ஸ்டாகிராமில் லாலாரை துணிச்சலாக பாதுகாத்து, “மக்களுக்காக நிற்பது என்பது யூத விரோதமல்ல, அது ஆஸ்திரேலியாவில் உள்ள என் யூத சகோதர சகோதரிகளுடன் எந்த சம்பந்தமும் இல்லை, ஆனால் இஸ்ரேல் அரசாங்கத்தின் மோசமான செயல்களுடன் சம்பந்தப்பட்டது… பீட் ஒரு நல்ல மனிதர், நல்ல இதயம் கொண்டவர். அவருக்கு இன்னும் நல்லது நடக்க வேண்டும்” என்று எழுதினார்.
இதையும் படிங்க | அனைத்து டெஸ்டிலும் பும்ரா விளையாடுவாரா?-கோச் கம்பீர் அளித்த பதில் இதோ
புதன்கிழமை SEN உடன் பேச மறுத்தது கவாஜாவின் அந்த நிலைப்பாட்டின் தொடர்ச்சியாக இது கருதப்படுகிறது. பேட்டியை மறுத்தாலும், நேரடியாக மன்னிப்பு கேட்டதாகவும், அவரது பிரச்சினை விளக்க உரை வல்லுநர்களுடன் இல்லை, ஆனால் லாலாரின் நீக்கத்தை நிறுவனம் கையாண்ட முறையுடன்தான் என்று தெளிவுபடுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கவாஜாவுக்கு எதிராக நடவடிக்கை பாயுமா?
கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிடமிருந்து கவாஜாவுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. போட்டி நேரத்திலோ அல்லது போட்டிக்குப் பிறகோ ஊடக கடமைகள் விருப்பமானவை, விளையாட்டு வீரர்கள் அவற்றை மறுக்க அனுமதிக்கப்படுவதால், கவாஜாவுக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிடமிருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட சாத்தியமில்லை என்று அந்த அறிக்கை சொல்கிறது. தற்போது கிரிக்கெட் எட் ஆல் நிறுவனத்திற்காக இந்த தொடரை கவரேஜ் செய்து வருகிற லாலார், இந்த செயலுக்கு நன்றி தெரிவித்தார்.
“என்னை வேலையிலிருந்து நீக்கியபோது எனக்கு மிகவும் உதவியாக இருந்தவர் உஸ்மான் கவாஜா. அவரது தொடர் ஆதரவுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்” என்று லாலார் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.