
விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன்
அதிமுகவை விழுங்குவது தான் பாஜகவின் உடனடி திட்டம் இதை அதிமுகவினர் எப்பொழுது உணரப்போகிறார்கள் என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் திருச்சி செல்வதற்காக வந்த விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “ அதிமுக கூட்டணியை பொறுத்த அளவில் பாஜக தான் வழி நடத்துகிறது என்பதை அமித்ஷாவை வைத்து அவ்வப்போது பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்னைப் பொருத்தவரையில் அதிமுக அமைதியாக இருக்கிறது பாஜக தான் சுறுசுறுப்பாக செயல்படுகிறது அதனால் அந்த கூட்டணியை பாஜக தான் வழி நடத்துகிறது என்ற பார்வை உள்ளது. தமிழ்நாட்டில் பாஜக நிலை கொள்வதை எப்படி அனுமதிக்க முடியும். தமிழ்நாட்டில் சமூக நீதிக்கான குரல் கடந்த அரை நூற்றாண்டாக வலுவாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.
அதிமுகவை விழுங்குவது தான் பாஜகவின் திட்டம்
அதிமுக என்ற எம்ஜிஆர் ஜெயலலிதா போன்ற திராவிட தலைவர்கள் வந்த திராவிட கட்சியிலிருந்து சென்றவர்தான் பாஜகவின் தலைவர் நயினார் நாகேந்திரன். அப்படி தெரிந்துதான் அவரை தலைவர் ஆக்கி இருக்கிறார்கள் பாஜகவினர். அதிமுகவை விழுங்குவது தான் பாஜகவின் உடனடி திட்டம். இதை எப்பொழுது அதிமுக உணரப்போகிறது? பெரியார், அண்ணா என்னும் இரு தலைவர்கள் குறித்து முருகர் மாநாட்டில் வீடியோ வெளியிட்டுள்ளார்கள். அவர்களுடன் எப்படி பயணிக்கிறார்கள் பெரியாரையும், அண்ணாவையும் கொச்சைப்படுத்தும் பாஜக சங்க பரிவார அமைப்புகளோடு அதிமுக பயணிப்பது தற்கொலைக்கு சமமானது.
திமுக கூட்டணியில் 2011 தேர்தலில் பாமகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இருந்திருக்கிறது. அதன்பிறகு பாமகவின் நடவடிக்கைகளால் தான் நாங்கள் பல அவதூர்களுக்கு ஆளாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. தனிப்பட்ட முறையில் என்னை குறிவைத்து கூலிப்படையினர் சுற்றி வளைக்கும் நிலை ஏற்பட்டது. அதன் பிறகு நாங்கள் எடுத்த நிலைப்பாடுதான்.
மேலும் படிக்க : காதை வெட்டியதால் ஆத்திரம்.. நாட்டு வெடிகுண்டு வீசி ஒருவர் படுகொலை.. சிறுவர்கள் உட்பட்ட ஐந்து பேரை தேடும் போலீஸ்!
சமூகநீதிக்கு எதிராக பாஜக பேசுகிறது
பாஜகவினர் பேசும் வலதுசாரி அமைப்புகள் குறித்து பேசும் பொழுது அவர்களின் பி டீம் என குறிப்பிட வேண்டிய நிலை ஏற்படுகிறது. பாஜகவின் கொள்கைகள் அண்ணா பெரியார் கழகங்கள் இல்லாத ஆட்சி என்பது போன்ற கொள்கைகள். இதுபோன்ற அரசியலை பேசினால் பி டீம் என்று கூறாமல் வேறு எப்படி சொல்ல முடியும். இது திமுகவை மட்டும் எதிர்பது கிடையாது சமூகநீதிக்கு எதிராக பாஜக பேசுகிறது. அதே அரசியலை வேறு பெயரில் பேசினால் அது அப்படித்தான் கூற முடியும்.
கமலஹாசன் திமுகவுடன் வந்திருக்கிறார் என்றால் அவர் தொடக்கத்தில் பேசிய அரசியலுக்கும் இப்போது பேசும் அரசியலுக்கும் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் பிஜேபி எதிர்ப்பு, வலதுசாரி எதிர்ப்பு என்ற கொள்கைகளை கையில் எடுக்கும் பொழுது திமுகவில் இணைந்திருக்கலாம். மைய வாதம் பேசி நடுநிலையாக இருந்து கொண்டிருக்க முடியாது ஏதாவது ஒரு சார்பு எடுத்து தான் அரசியல் பண்ண வேண்டிய தேவை இருக்கிறது என மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என உணர்ந்து இருக்கலாம்.
விஜய் பெரியாரை முழுமையாக ஏற்று கொண்டாரா?
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பெரியார் குறித்து அவதூறாக வீடியோ வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும் அல்லது அவரைச் சார்ந்தவர்கள் அவருக்கு கூறி இருக்க வேண்டும். பெரியாரைப் பற்றி அவதூறு பரப்பிய பிறகும் அவர் அதற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை என்றால் உண்மையாகவே பெரியாரை ஏற்றுக் கொண்டாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.