
உங்கள் கூந்தல் அடர்த்தியாகவும், பளபளப்பாகவும் இருக்க டிப்ஸ்
கருமையான நீண்ட கூந்தல் என்பது பல பெண்களின் ஆசை. இதற்கு நீங்கள் பலவிதமான எண்ணெய்கள் மற்றும் கிரீம்களுக்கு ஆயிரக்கணக்கான ரூபாய்களை செலவிட வேண்டியதில்லை. இரண்டு பொருட்கள் போதும். அது என்ன பொருள் அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம்.
கருமையான நீண்ட கூந்தல் இருக்க வேண்டும் என பெண்கள் விரும்புகிறார்கள். நீளமான கூந்தல் பெண்களின் அழகை மேலும் கூட்டுகிறது. இதற்காக, சந்தையில் கிடைக்கும் பல்வேறு எண்ணெய்கள் மற்றும் ஷாம்புகளை ஆயிரக்கணக்கான ரூபாய் கொடுத்து வாங்குகிறார்கள். இவை அனைத்தும் வெள்ளை முடி மற்றும் முடி உதிர்தல் பிரச்சினைக்கு வழிவகுக்கிறது.முடி வளர்ச்சியும் நின்று விடும். தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களை சந்தையில் வாங்கி பயன்படுத்துவதே இதற்குக் காரணம். இதில் இருந்து தப்பிக்க என்ன வகையான பொருட்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதை பார்க்கலாம்.
நீண்ட, பளபளப்பான, கருப்பு கூந்தலுக்கு என்ன செய்ய வேண்டும்
உங்கள் தலைமுடி அழகாகவும், ஆரோக்கியமாகவும், அடர்த்தியாகவும், நீளமாகவும், கருப்பாகவும் இருக்க விரும்பினால் எப்போதும் இயற்கையாக தயாரிக்கப்படும் பொருட்களை தேர்ந்தெடுப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். எனவே சோம்பல் இல்லாமல் வீட்டிலேயே உங்கள் முடி பராமரிப்பு தயாரிப்புகளை செய்யுங்கள். இவை உங்கள் தலைமுடியை எப்போதும் பாதுகாக்கும். இவை முடி உதிர்தல் முதல் வெண்மையாக்குதல் வரை பல்வேறு பிரச்சனைகளை இயற்கையாகவே குணப்படுத்தும். உங்கள் நீண்ட, பளபளப்பான, கருப்பு கூந்தலுக்கு இயற்கையான முறையில் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.
இந்த ஒரு தீர்வு மூலம், பெண்களின் நீண்ட கூந்தலைப் பெறுவதற்கான ஆசை நிறைவேறும். மேலும் முடி வெள்ளை நிறமாக மாறாது, உதிராது. முடி அடர்த்தியாகவும் கருப்பாகவும் இருக்கும். இந்த இரண்டு வகையான பொருட்கள் மட்டுமே பயன்படுத்தினால் போதும். அது என்ன பொருள் அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம்.
மேலும் படிக்க : உங்க அன்பான உறவு எப்படி முடிந்தது என யோசிக்கிறீர்களா – ஆய்வு தரும் தகவல் இதோ!
தேவையான பொருட்கள்
கறிவேப்பிலை – 1 கப்
வெந்தயம் – 1/2 கப்
செய்முறை
நீண்ட, அடர்த்தியான, கருமையான கூந்தலுக்கு, வெந்தயத்தை முதலில் 6-8 மணி நேரம் ஊற வைக்கவும் (அதை ஒரே இரவில் ஊறவைப்பது நல்லது). மேலும், கறிவேப்பிலையை எடுத்து கழுவி தனியாக வைக்கவும். மறுநாள் வெந்தயம் மற்றும் கறிவேப்பிலையை எடுத்து மென்மையான பேஸ்ட் போல் அரைத்து கொள்ளுங்கள். பின்னர் ஒரு பருத்தி துணியை எடுத்து இந்த விழுதைக் கொண்டு ஒரு சிறிய வடையை போல தட்டி வைக்கவும். ஒரு உருண்டை சுமார் 10 கிராம் எடையுள்ளதாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அவை நன்றாக உலரும் வரை அவற்றை வெயிலில் வைக்கவும். அவற்றை விசிறி காற்றில் உலர வைக்கலாம்.
சில நாட்களில் தலைமுடியில் மாற்றம்
இந்த நன்கு உலர்ந்த உருண்டையில் ஒன்றை எடுத்து 100 மில்லி எண்ணெயில் ஊற வைக்கவும். (மீதமுள்ளவற்றை ஒரு பெட்டியில் சேமித்து வைக்கவும், நீங்கள் விரும்பும் போதெல்லாம் பயன்படுத்தவும்). எண்ணெய்யில் 15 நாட்கள் ஊற வைத்த பிறகு, இரண்டு நாட்களுக்கு ஒரு முறை எண்ணெயை உச்சந்தலையில் தடவவும். எண்ணெயைப் பயன்படுத்திய பிறகு குறைந்தது ஒரு மணி நேரம் விட்டுவிட்டு, பின்னர் வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில் கழுவவும்.
மேலும் படிக்க : மனச்சோர்வால் அவதியா.. இப்படி யோசித்துப் பாருங்க.. மனச்சோர்வை வெல்ல உதவும் சூப்பர் டிப்ஸ் இதோ!
இந்த எண்ணெயை பயன்படுத்தினால், சில நாட்களில் தலைமுடியில் மாற்றம் காண்லாம். வெள்ளை முடி இருக்காது, முடி கொட்டாது. கூந்தல் அடர்த்தியாகவும், பளபளப்பாகவும் இருக்கும். உங்கள் தலைமுடியைப் பார்த்து அனைவரும் ஆச்சரியப்படுவார்கள். அனைத்து வகையான முடி உள்ளவர்களுக்கும் இது ஒரு நல்ல தீர்வாக இருக்கும். எனவே இதை பயன்படுத்தி பாருங்கள்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.