
பூண்டில் ருசியான சட்னி
ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த பூண்டில் ருசியான சட்னி செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
பூண்டில் பாக்டீரியா எதிர்ப்பு தன்மை உள்ளது. இந்த மூலப்பொருள் சளி, இருமல் போன்ற நோய்களைத் தடுக்கிறது. மேலும், தொற்று எளிதில் நுரையீரலுக்கு பரவ அனுமதிக்காது. இதன் விளைவாக, நுரையீரல் நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமாக இருக்கும். பூண்டில் அல்லிசின் என்ற பெரிய வேதிப்பொருள் உள்ளது. இந்த மூலப்பொருள் இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை வெகுவாகக் குறைக்கிறது. இதன் விளைவாக, இதய நோய் அபாயம் வெகுவாகக் குறைக்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி, இந்த மூலப்பொருள் உணவை செரிப்பதிலும் நன்றாக வேலை செய்கிறது. தொடர்ந்து மசித்து, தேநீரில் கலந்து குடித்து வந்தால், செரிமானத்திற்கு தேவையான பொருட்களின் உற்பத்தி அதிகரிக்கும். இந்த செரிமான சாறு உணவை ஜீரணிக்கும் இவ்வளவு நன்மைகள் நிறைந்த பூண்டில் சட்னி செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
பூண்டு சட்னி செய்ய தேவையான பொருட்கள்
- பூண்டு – 2
- வெங்காயம் – 1
- தக்காளி – 1
- காய்ந்த மிளகாய் – 4
- உப்பு
பூண்டு சட்னி செய்வது எப்படி?
- கடாயில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.
- பின்னர் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். அதில் காய்ந்த மிளகாயையும் சேர்க்கவும்.
- பின்னர் கேஸ் அணைத்துவிட்டு ஆறியதும் உப்பு சேர்த்து பேஸ்ட் போல் மிக்சியில் போட்டு அரைக்கவும். இறுதியாக எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- இப்போது சுவையான பூண்டு சட்னி ரெடி. குடும்பத்துடன் பரிமாறி மகிழுங்கள்.சூடான சாதம், இட்லி, சப்பாதி, தோசை என பல வித உணவுகளோடு வைத்து சாப்பிடலாம்.
மேலும் படிக்க : கம கமன்னு.. இந்த மாதிரி சுண்டைக்காய் வத்தல் குழம்பு செய்து கொடுங்க.. திரும்ப திரும்ப கேட்பாங்க!
இந்த பூண்டு சட்னி கடந்த பிக் பாஸ் சீசனில் அதிகம் செய்யப்பட்ட ஒரு ரெசிபி ஆகும். இந்த சட்னி மிகவும் சுவையாக இருக்கும். குறிப்பாக இட்லி, தோசைக்கு அருமையாக இருக்கும். சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் போது இன்னும் ருசி அதிகமாக இருக்கும். எனவே ஈசியாக செய்ய வேண்டும் என நினைத்தால் இனி நீங்கள் இந்த பூண்டு சட்னியை செய்யலாம். ஐந்து நிமிடத்தில் இந்த சட்னியை நீங்கள் செய்துவிடலாம். எனவே நேரமும் மிச்சம். எனவே இந்த சிம்பிள் ரெசிபியை நீங்கள் இனி வீட்டில் வாரம் ஒரு முறையாவது செய்து சாப்பிடுங்கள். ஏனென்றால் பூண்டில் அதிக ஆரோக்கிய நன்மைகள் உண்டு எனவே உடலுக்கும் இது மிகவும் ஆரோக்கியமானது என்பதால் வாரத்திற்கு ஒருமுறை செய்து சாப்பிடலாம்.