
2025ல் அதிர்ஷ்டம் பெற்ற 4 ராசிகள் இதோ!
2025 ஆம் ஆண்டில், போர் பதற்றங்களுக்கு மத்தியிலும் பல ராசிக்காரர்களுக்கு முன்னேற்றம், செழிப்பு உள்ளது என பாபா வங்கா கணித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்கள் கடந்து விடும் தருவாயில் இருக்கிறோம். இதற்கிடையில், உலகம் ஒன்றன் பின் ஒன்றாக மற்றும் இரத்தக்களரிப் போர்களைக் கண்டது. பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்திய பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி பேச்சு வார்த்தையை தொடர்ந்து போர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. உக்ரைன்-ரஷ்யா போர், இஸ்ரேல்-ஈரான் மோதல் நடந்து கொண்டிருந்தது, அதன் நடுவில், இஸ்ரேல் ஈரானைத் தாக்கியது. அமெரிக்காவும் இதில் இணைந்தது. இந்த 2025 ஆம் ஆண்டில், இந்த மோதல்கள் அனைத்தையும் மீறி, பல ராசிக்காரர்களின் விதியில் மிகப்பெரிய முன்னேற்றம், செழிப்பு மற்றும் நல்ல காலம் உள்ளது என பாபா வங்கா கணித்துள்ளார். அந்த ராசிக்காரர்கள் யார் என்பதை இங்கு விரிவாக பார்க்கலாம்.
2025ல் அதிர்ஷ்டம் பெற்ற 4 ராசிகள்
ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு கடின உழைப்பின் பலன்கள் 2025 ஆம் ஆண்டில் கிடைக்கும். அவர்கள் இந்த ஆண்டு மகிழ்ச்சியாக இருப்பார்கள், பதற்றம் இருந்தாலும் அது கடந்து மனநிலை மகிழ்ச்சியாக இருக்கும். பணம், சொத்து, ஸ்திரத்தன்மை மற்றும் காதலில் அதிர்ஷ்டம் ஆகியவற்றில் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள்! பல ஏற்ற தாழ்வுகளுக்குப் பிறகு, ஸ்திரத்தன்மை அடையப்படலாம். பல வாய்ப்புகள் வந்து குவியலாம் என்று பாபா பங்க்ரா கணித்துள்ளார்.
மிதுனம்: பல சவால்களை நீங்கள் சமாளிக்க முடியும். நிதி பாதுகாப்பின் அடிப்படையில் இந்த ஆண்டு உங்களுக்கு நல்லது.நிதி சிக்கல்களையும் சமாளிப்பீர்கள். வேலைக்கான உற்சாகம் இந்த ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து வரக்கூடும். பல வாய்ப்புகள் வரும். ஆனால் மிதுன ராசிக்காரர்கள் செய்ய விரும்பும் வேலையில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும் என பாபா வங்கா கணித்துள்ளார்.
சிம்மம்: சிம்ம ராசியினரை பொறுத்தவரை வெற்றி, அறிமுகங்கள் மற்றும் புதிய உறவுகளின் ஆண்டு என பாபா வங்கா கணித்துள்ளார். அதே சமயம் நேர்மறையான கண்ணோட்டத்தைத் தக்க வைத்துக் கொள்ள முயற்சிப்பார்கள். வியாபாரத்தில் சில நல்ல முடிவுகள் லாபத்தைத் தரும். நீண்டகால நிதி அம்சங்களும் லாபத்தைத் தரும்.இந்த ஆண்டு நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். தனிப்பட்ட அம்சத்தில் நேரம் நன்றாக செல்ல வாய்ப்புகள் வரும்.
மேலும் படிக்க | பாரம்பரியமிக்க புரி ஜகன்னாதர் ரத யாத்திரை வரலாறு தெரிஞ்சிப்போம் வாங்க!
கும்பம்: சில விஷயங்களை முன்கூட்டியே உணரும் தன்மை கொண்ட கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த குணம் 2025 ஆம் ஆண்டில் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 2025 ஆம் ஆண்டின் மே மாதத்திலிருந்து திடீரென வேலை இடத்தில் முன்னேற்றம் அவர்களின் நிதி நிலையை உச்சத்தில் வைத்திருக்கலாம். எந்தவொரு முதலீட்டிலிருந்தும் லாபம் பெறலாம். படைப்பு வேலைகளில் பெரும் முன்னேற்றம் அடையலாம். பல வாய்ப்புகள் வரலாம். ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து எந்தவொரு தலைமைப் பதவியிலும் இருக்கலாம் என பாபா வங்கா கணித்துள்ளார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.