
ருசியான பனீர் புர்ஜி
ஒரு முறை பனீர் புர்ஜியை முயற்சி செய்து பாருங்கள். அதை எப்படி சுவையாகவும் எளிதாகவும் செய்வது என்பதை இங்கு பார்க்கலாம்.
பனீர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும் நல்லது. ஆனால் பனீர் என்றாலே பனீர் பட்டர் மசாலா அல்லது பாலக் பனீர் என்றுதான் பலரும் சமைக்கின்றனர். ஒரு முறை பனீர் புர்ஜியை முயற்சி செய்து பாருங்கள். இது ரொட்டி அல்லது சப்பாத்தியுடன் சாப்பிடும்போது இது அருமையாக இருக்கும். அதை எப்படி சுவையாகவும் எளிதாகவும் செய்வது என்பதை இங்கு பார்க்கலாம்.நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.
பனீர் புர்ஜி செய்ய தேவையான பொருட்கள்
துருவிய பனீர் – ஒரு கப்
எண்ணெய் – மூன்று கப்
வெண்ணெய் – ஒரு ஸ்பூன்
சீரகம் – ஒரு ஸ்பூன்
வெங்காயம் – இரண்டு
இஞ்சி பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்
பச்சை மிளகாய் – இரண்டு
கடலை மாவு – ஒரு ஸ்பூன்
தக்காளி – 1
மஞ்சள் – கால் ஸ்பூன்
உப்பு – சுவைக்க போதுமான
மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்
கொத்தமல்லி தூள் – ஒரு ஸ்பூன்
சீரக தூள் – அரை ஸ்பூன்
கசூரி மேத்தி – ஒரு ஸ்பூன்
தண்ணீர் – அரை கிளாஸ்
கொத்தமல்லி இலை – இரண்டு ஸ்பூன்
புதினா இலை – ஒரு ஸ்பூன்
பனீர் புர்ஜி செய்முறை
பனீர் புர்ஜி செய்ய, முதலில் பனீரை மெல்லியதாக நறுக்கி ஒதுக்கி வைக்கவும். பின்னர் ஒரு காடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் வெண்ணெய் சேர்க்கவும். அதில் சீரகம் சேர்த்து வறுக்க வேண்டும். பின்னர் வெங்காய விழுது மற்றும் பச்சை மிளகாய் விழுது சேர்த்து நன்கு கலக்க வேண்டும். வெங்கயாம் நிறம் மாற ஆரம்பிக்கும் போது இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக கலக்கவும். கடலை மாவு மற்றும் கசூரி மேத்தி சேர்த்து நன்றாக கலக்கவும்.
மேலும் படிக்க | இஞ்சி பூண்டு வாசம் இருக்கே.. இஞ்சி பூண்டு விழுதை பதமாக அரைத்து நீண்ட நாட்கள் சேமித்து வைப்பது எப்படி பார்க்கலாமா!
பின்னர் அதில் தக்காளி விழுது சேர்த்து கொதிக்க விடவும். இதில் சுவைக்கு தேவையான அளவு உப்பு மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
தக்காளி மென்மையாக வதங்கிய பின்னர் அதில் கொத்தமல்லி தூள் மற்றும் சீரகத் தூள் சேர்த்து நன்கு கலக்கவும். கரம் மசாலா சேர்த்து நன்றாக கலக்கிய பின்னர் அரை கிளாஸ் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து கொதிக்க விட வேண்டும்.
பின்னர் மூடியை அகற்றி, அதில் துருவிய பனீர் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பின்னர் அதை மூடி வைத்து பத்து நிமிடங்கள் வரை வேக விட வேண்டும். அப்போது அடுப்பை மிதமான தீயில் வைக்க வேண்டும். புர்ஜி கெட்டியானதும், கொத்தமல்லி மற்றும் புதினா இலையை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
அவ்வளவு தான் ருசியான பனீர் புர்ஜி தயார். இதை சூடான சப்பாத்தி மற்றும் ரொட்டியுடன் சேர்த்து ருசித்தால் அருமையாக இருக்கும். நீங்கள் ட்ரை பண்ணுங்க