
நெத்திலி கருவாட்டு குழம்பு
கிராமத்து ஸ்டைலில் அட்டகாசமான நெத்திலி கருவாட்டு குழம்பு செய்ய தேவையான பொருட்களையும் செய்முறையையும் இங்கு பார்க்கலாம்.
சிலருக்கு கருவாட்டு குழம்பு என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் கிராமத்து ஸ்டைலில் இந்த மாதிரி கருவாட்டு குழம்பு சமைத்து பாருங்கள். ருசி அட்டகாசமாக இருக்கும். அதிலும் மழை பெய்யும் போதும் குளிருக்கு இதமா சூடான சாதத்தில் கருவாட்டு குழம்பு சேர்த்து சாப்பிட்டு பாருங்கள். திரும்ப திரும்ப சாப்பிட தோன்றும்.
கருவாட்டு குழம்பு செய்ய தேவையான பொருட்கள்
நெத்திலி கருவாடு – 100 கிராம்
எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
சீரகம் – அரை தேக்கரண்டி
சின்ன வெங்காயம் – 100 கிராம்
பூண்டு பற்கள் – 50 கிராம்
பச்சை மிளகாய் – இரண்டு
இஞ்சி பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
தக்காளி – இரண்டு
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி தூள் – ஒரு தேக்கரண்டி
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
கறிவேப்பிலை – ஒரு கொத்து
கொத்தமல்லி இலை – ஒரு தேக்கரண்டி
நெத்திலி கருவாட்டு குழம்பு செய்முறை
நெத்திலி கருவாட்டை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து கழுவி எடுக்க வேண்டும். நீங்கள் அதை சூடான நீரில் ஊற வைத்தால், அதற்கு 10 நிமிடம் போதுமானது.
மேலும் படிக்க | கொங்கு நாட்டு ஸ்டைலில் பச்சை பயறு கடையல் எப்படி செய்யணும் தெரியுமா.. சூடான சாதத்துடன் சாப்பிட்டு பாருங்க
இப்போது ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்க்க வேண்டும். அதில் கடுகு மற்றும் சீரகத்தை எண்ணெயில் சேர்த்து தாளிக்க வேண்டும். அதன் பிறகு வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கும் போது, அதில் பூண்டையும் சேர்த்து கொள்ள வேண்டும். பச்சை மிளகாயையும் சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் நன்றாக நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
பின்னர் நறுக்கிய தக்காளி துண்டுகளைச் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். சுவைக்கு தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும். முதலில் கொஞ்சமாக சேர்த்து கொள்ள வேண்டும். கருவாட்டில் இருக்கும் உப்பையும் நியாபகம் வைத்து கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க | சண்டே ஸ்பெஷல் கமகமக்கும் மட்டன் பிரியாணி எப்படி செய்வது பாருங்க.. ருசி அட்டகாசம் தா!
தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும். அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் கொத்தமல்லி தூள் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பின்னர் அதில் ஊற வைத்த புளியையை வடி கட்டி சேர்த்து எடுத்து கொள்ள வேண்டும். புளி தண்ணீர் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குழம்பு பச்சை வாடை போகும் வரை கொதிக்க விட வேண்டும்.குழம்பு கெட்டியாக ஆரம்பிக்கும் போது அதில் கழுவிய கருவாட்டை சேர்த்து கொதிக்க விட வேண்டும். அவ்வளவுதான் குழம்பில் எண்ணெய் பிரிந்து வர ஆராம்பிக்கும் போது அதில் சிறிதளவு மல்லி இலைகளை சேர்த்து அடுப்பை அணைத்து விட வேண்டும். அவ்வளவு தான் ருசியான கருவாட்டு குழம்பு ரெடி. சூடான சாதம், இட்லி தோசையுடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்க ருசி வேற லெவலில் இருக்கும்.