
மகளுக்கு உடலுறவு பயிற்சி அளித்த தாயிடம் விசாரணை நடந்து வருகிறது
9ம் வகுப்பு மாணவியான தன் மகளுக்கு, உடலுறவு குறித்து பயிற்சி அளித்த தாயிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெங்களூருவில் நடந்த இந்த சம்பவத்தின் பின்னணி என்ன?
பெங்களூருவில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இங்கு, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தனது சொந்த தாய் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மாணவி தனது தாய், தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக புகார் அளித்துள்ளார். தனது தாய் தனக்கு உடலுறவு கொள்ள பயிற்சி அளிப்பதாக மாணவி குற்றம் சாட்டியுள்ளார். திருமணத்திற்குப் பிறகு கணவருடன் உறவை உருவாக்க இந்த பயிற்சி பயனுள்ளதாக இருக்கும் என்று தாய் கூறியதாக மாணவி குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் படிக்க | ‘இப்படி ஒரு பிள்ளையை பெற்று விட்டேனே..’ சவுக்கு சங்கர் நேர்காணலில் டாக்டர் ராமதாஸ் வருத்தம்!
ஒரு வருடமாக தொடரும் பயிற்சி
ஆனால், தனது மகள் கூறிய குற்றச்சாட்டை அந்த பெண் மறுத்துள்ளார். தற்போது இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மாணவி வடக்கு பெங்களூருவில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இவர் தனது 45 வயதான தாய் மற்றும் மூத்த சகோதரியுடன் வசித்து வருகிறார். தாயுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பெண்ணின் தந்தை குடும்பத்தை விட்டு பிரிந்து வசித்து வருகிறார். கடந்த ஒரு வருடமாக இந்த பயிற்சியை தன் தாய் தனக்கு அளித்து வருவதாக மாணவி கூறுகிறார். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவரின் அறிக்கையை போலீசார் இன்னும் பதிவு செய்யவில்லை என்று டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க | லாப்ரடார் நாயை ‘தாந்த்ரீக பலி’ கொடுத்த பெண்.. 2 நாய்கள் மீட்பு.. போலீஸ் வலை!
ஆலோசகர் மூலம் வெளிச்சத்துக்கு வந்த புகார்
இதேவேளை, மாணவனின் தாயாரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார். கடந்த காலங்களில் தனது மகளை திட்டியதாகவும், அடித்ததாகவும் அந்த பெண் கூறினார். ஆனால் அவர் ஒருபோதும் தனது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்யவில்லை என்று கூறுகிறார். ஒரு பெண் ஆலோசகர் பள்ளிக்கு வந்தபோது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளத. அந்த பெண் ஆலோசகர் அடிக்கடி இந்த பள்ளிக்கு வந்துள்ளார். இந்த வார தொடக்கத்தில் கவுன்சிலிங்கின் போது மாணவி அதைப் பற்றி தன்னிடம் கூறியதாக ஆலோசகர் கூறினார். இதையடுத்து பெண் ஆலோசகர் போலீசில் புகார் அளித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தார். பின்னர் சாதாரண உடை அணிந்த ஒரு பெண் போலீஸ் அதிகாரியோடு பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்குச் சென்று, அங்கு விசாரணை நடத்தியுள்ளார். இது தொடர்பாக சிறுமியின் மூத்த சகோதரியிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால், அவர் குற்றச்சாட்டு பற்றி எதுவும் கூறவில்லை என்று கூறப்படுகிறது.
புகார்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரிகள்:
098 – குழந்தை உதவி எண் (Childline India Foundation) 24×7 இலவச சேவை. குழந்தைகள் தொடர்பான எந்தவொரு அவசர நிலைக்கும் இந்த எண்ணை அழைக்கலாம்
- National Commission for Protection of Child Rights (NCPCR)
இணையதளத்தில் புகார் அளிக்கலாம். - POSCO e-Box
குழந்தைகள் நேரடியாக அல்லது பெற்றோர், ஆசிரியர்கள் மூலம் பாலியல் துன்புறுத்தல் புகார்களை பதிவு செய்யும் பாதுகாப்பான ஆன்லைன் தளம்.