
மான்செஸ்டர் சிட்டி கிளப் வரலாறு
Manchester City: உலகின் செல்வாக்கான மான்செஸ்டர் சிட்டி கால்பந்து அணியின் வரலாறு ஏன் என்று தெரிந்தால், நீங்கள் அசந்து போவீர்கள். அசால்டாக தொடங்கி, இன்று அசால்டு செய்து கொண்டிருக்கும் அந்த அணியைப் பற்றி அறிவோமா?
Manchester City: கால்பந்து பிரியர்களும், கால்பந்தே தெரியாதவர்களும், அது தொடர்பான செய்திகளை பார்க்கும் போது, அதிகம் தென்படும் வார்த்தை, ‘மான்செஸ்டர் சிட்டி’ என்கிற வார்த்தை. நிறைய பேருக்கு, அது நாடா? அணியா? கிளப்பா? வாரியமா? என்கிற பல்வேறு சந்தேகம் இருந்திருக்கலாம். இதோ அந்த சந்தேகங்களை தீர்க்கும் ஒரு தெளிவான விளக்கம். மான்செஸ்டர் சிட்டி என்பது ஒரு கால்பந்து கிளப். அது இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் அமைந்துள்ள ஒரு தொழில்முறை கால்பந்து கிளப் ஆகும். இந்த கிளப்பிற்கு நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது. அது பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம்.
Manchester City: கிளப்பின் தொடக்கமும்.. காரணமும்!
மான்செஸ்டர் சிட்டி அணி, 1880ஆம் ஆண்டில் வெஸ்ட் கோர்டனில் உள்ள செயின்ட் மார்க்ஸ் தேவாலயத்தின் உறுப்பினர்களால் தொடங்கப்பட்டது. அந்த சமயத்தில், அப்பகுதியில் நிறைய கோஷ்டி பூசலும், மது போதை கலாசாரமும் பரவி இருந்தது. வேலையின்மையும் அதற்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தது. அதிலிருந்து, அவர்களை கட்டுப்படுத்தவும், திசை மாற்றவும், பொழுதுபோக்கை உருவாக்கித் தர வேண்டும் என்கிற நோக்கில் உருவானது தான், மான்செஸ்டர் சிட்டி கிளப். கிளப் ஆம்பிக்கு போது, “செயின்ட் மார்க்ஸ் (வெஸ்ட் கோர்டன்)” என்று தான், இந்த கிளப் அறியப்பட்டது. அதன் பின், 1887 இல் “ஆர்ட்விக் அசோசியேஷன் ஃபுட்பால் கிளப்” என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில், 1894 ஆம் ஆண்டில் “மான்செஸ்டர் சிட்டி ஃபுட்பால் கிளப்” என்றும் மீண்டும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மான்செஸ்டர் நகரிலிருந்து முதல் பெரிய கோப்பையை வென்ற அணி என்ற பெருமையை 1904 இல் மான்செஸ்டர் சிட்டி பெற்றது. FA கோப்பையின் இறுதிப் போட்டியில் போல்டன் வாண்டரர்ஸை 1-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்த அந்த அணி, கோப்பையை வென்று சாதித்தது.

மேலும் படிக்க | நெட் பிராக்டிசில் உடைந்த சிராஜின் பேட்.. 2வது டெஸ்டில் பும்ரா விளையாடுவாரா?
Manchester City: நடுவுல கொஞ்சம் முன்னேற்றம்..
- கிளப் தொடங்கியது முதல், அதன் வரலாற்றின் பெரும் பகுதியில், முதல் மற்றும் இரண்டாம் நிலைப் பிரிவுகளுக்கு இடையில் ஏற்ற இறக்கங்களைக் கண்டது.
- 1930 களில், 1934 இல் FA கோப்பையை வென்றது. மேலும் 1936-37 இல் முதல் முறையாக ஆங்கில லீக் சாம்பியன்ஷிப்பை வென்றது போன்ற சில வெற்றிகளைக் கண்டது.
- 1960 களின் பிற்பகுதியும், 1970 களின் முற்பகுதியும் கிளப்பின் பொற்காலம். அமைந்தது. இந்த காலகட்டத்தில் 1967-68 இல் மீண்டும் லீக் சாம்பியன்ஷிப், 1969 இல் FA கோப்பை, 1970 மற்றும் 1976 இல் லீக் கோப்பை, மற்றும் கிளப்பின் முதல் கண்ட கோப்பையான 1970 இல் ஐரோப்பிய கோப்பையாளராக கிளப் வென்றது.
- 1980 களின் பிற்பகுதியிலும் 1990 களின் முற்பகுதியிலும், கிளப் சில சரிவுகளை சந்தித்தது. அதே போல, 1998 இல் முதல் முறையாக மூன்றாவது நிலைப் பிரிவுக்குத் தள்ளப்பட்டது.
Manchester City: 2008 தொடங்கிய எழுச்சி..
மான்செஸ்டர் சிட்டியின் வரலாற்றில் ஒரு திருப்புமுனை என்றால், அது 2008 ம் ஆண்டு தான். அந்த ஆண்டில் தான் அபுதாபி யுனைடெட் குரூப் என்கிற நிறுவனம், அந்த கிளப்பை வாங்கியது. ஷேக் மன்சூர் பின் சயீத் அல் நஹ்யான் தலைமையிலான அந்த நிறுவனத்திடம் வந்த பிறகு, கிளப்பின் எழுச்சி உயரத் தொடங்கியது. அதன் உள்கட்டமைப்பு, பயிற்சி வசதிகள் மற்றும் உலகத் தரம் வாய்ந்த வீரர்களை தேர்வு செய்வது என, அதிரடி மாற்றங்களை சந்தித்தது. இந்த மாற்றங்களின் காரணமாக, மான்செஸ்டர் சிட்டி கிளப், இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவில் ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. 44 ஆண்டுகளுக்குப் பிறகு, 2011-12 சீசனில் முதன் முறையாக பிரீமியர் லீக் பட்டத்தையும் வென்றது. அதன் பின், கிளப்பின் புயல்வேக வெற்றியை, யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. அதுமட்டுமின்றி, தொடர்ந்து 4 பிரிமீயர் லீக் பட்டங்களை வென்ற முதல் அணி, என்கிற சாதனையையும் படைத்தது. 2023-24 சீசனில் இதை சாத்தியமாக்கியது.
மேலும் படிக்க | வாட்ஸ்அப் அன்இன்ஸ்டால்; மொபைல் போன் சுவிட்ச் ஆப்: தனக்கு தானே தண்டனை கொடுத்த ரிஷப் பந்த்!
அதே போல, 2022-23 சீசன்களில், யூஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை பெற்று, வரலாற்று சாதனை படைத்தது. 2022-23 சீசனில் பிரீமியர் லீக், FA கோப்பை மற்றும் UEFA சாம்பியன்ஸ் லீக் ஆகிய மூன்றையும் வென்றது. இதன் மூலம் ட்ரிபிள் என்ற சாதனைக்கு சொந்தக்காரன் ஆனது கிளப். அதற்கெல்லாம் உச்சமாக, எப்ஐஎப்ஏ கிளப் உலகக் கோப்பையை வென்று, உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. தொடக்கத்தில் எப்படி சரிவுகளை மட்டுமே சந்தித்ததோ, அதே போல தான், அதன் எழுச்சிக்குப் பின், பெரும்பாலும் வெற்றிகளையே சுவைத்து வருகிறது மான்செஸ்டர் சிட்டி அணி. புகழ்பெற்ற கால்பந்து வீரர்களை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்த இந்த அணி, ஏற்ற இறக்கங்களை கடந்து , இன்று கால்பந்தில் அசைக்க முடியாத சக்தியாக உள்ளது.