
ருசியான இட்லி சாம்பார் எப்படி செய்வது?
ருசியான சாம்பார் எப்படி வைப்பது என்பதில் குழப்பமாக இருக்கிறதா? இனி அந்த குழப்பம் வேண்டாம். ருசியான இட்லி தோசை சாம்பார் செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
இட்லி தோசை என்பது யாருக்குத்தான் பிடிக்காது அனைவருக்கும் மிகவும் விருப்பமான உணவுகளில் இந்த இட்லி தோசை என்பது இருக்கும் இந்த இட்லி தோசைக்கு முக்கியமானது சாம்பார் அந்த சாம்பார் ருசியாக இருந்தால் தான் இதனை அனைவரும் ருசித்து சாப்பிடுவார்கள். அப்படி ருசியான சாம்பார் எப்படி வைப்பது என்பதில் குழப்பமாக இருக்கிறதா? இனி அந்த குழப்பம் வேண்டாம். ருசியான இட்லி தோசை சாம்பார் செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
இட்லி , தோசை சாம்பார் செய்ய தேவையான பொருட்கள்
- எண்ணெய் – 1 டீஸ்பூன்
- கடுகு – 1/2 டீஸ்பூன்
- கறிவேப்பிலை
- வெங்காயம் – 1/2 கப்
- தக்காளி
- விருப்பமான காய்கறிகள்
- புளி தண்ணீர்- 1 கப்
- 2.5 டீஸ்பூன் – சாம்பார் பொடி
- 1/2 டீஸ்பூன் – மிளகாய் தூள்
- 1/3 கப் – துவரம் பருப்
செய்முறை
இட்லிக்கு அதற்கு ஏற்றார் போல ருசியான சாம்பார் அமைந்தால் போதும் நான்கு இட்லி சாப்பிடுபவர்கள் கூட எட்டு இட்லி சாப்பிடுவார்கள். அப்படி இட்லிக்கு ஏற்றவாறு ருசியான இட்லி சாம்பார் எப்படி செய்வது என்பது குறைத்து பார்க்கலாம்.
முதலில் சாம்பார் செய்வதற்கு ஏற்றவாறு பாத்திரம் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் எண்ணெய் 1 டீஸ்பூன், கடுகு 1/2 டீஸ்பூன், கறிவேப்பிலை சேர்த்துக்கொள்ளுங்கள். பின்னர் கடுகு பொறிந்ததும் வெங்காயம் 1/2 கப் சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும்.
அதன் பிறகு தக்காளி, மற்றும் உங்களுக்கு விருப்பமான காய்கறிகளைச் சேர்க்கவும். நான் பூசணி, கேப்சிகம் (முருங்கை, உருளைக்கிழங்கு மற்றும் உங்கள் விருப்பப்படி வேறு எந்த காய்கறிகளையும் சேர்க்கலாம்) பயன்படுத்தினேன். காய்களை போட்ட பிறகு நன்றாக வதக்க வேண்டும்.
அதன்பிறகு ஒரு எலுமிச்சை அளவு புளி தண்ணீர் 1 கப் சேர்த்து காய்கறிகளை நன்கு வேக விடவும். இப்போது நாம் எடுத்து வைத்த 2.5 டீஸ்பூன் சாம்பார் பொடி மற்றும் 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பின்னர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். 1/3 கப் வேகவைத்த துவரம் பருப்பை சேர்க்கவும். நிலைத்தன்மையை சரிசெய்ய தண்ணீர் சேர்க்கவும். உப்பு 1.5 தேக்கரண்டி சேர்த்து நன்கு கலக்கவும். கடைசியாக அதன் மேல் கொத்தமல்லி தழை தூவி, சாதம் அல்லது இட்லி தோசையுடன் பரிமாறவும். இந்த சாம்பார் மிகவும் ருசியாக இருக்கும். இந்தமுறை வீட்டில் வழக்கமான முறையைல் சாம்பார் செய்யாமல் இந்த மாதிரி ஸ்டைலில் செய்து பாருங்க. வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.