
கோவக்காயில் பொரியல் எப்படி செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.
ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் கோவக்காயில் பொரியல் எப்படி செய்வது என்பது குறித்து பார்க்கலாம். இதில் அவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் உள்ளது
கோவக்காய் என்றால் பொதுவாக பலரும் விரும்ப மாட்டார்கள். ஏனென்றால் அது கசக்கும் என்ற எண்ணம் அவர்களுக்கு உண்டு. ஆனால் கோவக்காய் இந்த மாதிரி சமைத்துக் கொடுத்தால் திரும்பத் திரும்ப இனி கேட்டு சாப்பிடுவார்கள். முக்கியமாக தயிர் சாதம், சாம்பார் சாதம் என அனைத்து சாதத்திற்கும் இதனை வைத்து சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும். கோவக்காய் பிடிக்காதவர்களுக்கு கூட இனி கோவக்காய் பிடிக்க ஆரம்பிக்கும். அதற்கு நீங்கள் இந்த மாதிரியான ஸ்டைலில் கோவக்காய் பொரியலை செய்து கொடுங்கள். அவர்கள் இனி விரும்பி சாப்பிடுவார்கள். இந்த கோவக்காய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது எனவே வாரம் ஒரு முறையாவது கோவக்காய் பொரியல் செய்து கொடுங்கள். ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் கோவக்காயில் பொரியல் எப்படி செய்வது என்பது குறித்து பார்க்கலாம். இதில் அவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் உள்ளது.
கோவக்காய் பொரியல் செய்ய தேவையான பொருட்கள்
- கொத்தமல்லி விதைகள் – 2 டீஸ்பூன்
- கோவக்காய்
- சன்னா தால் – 1 டீஸ்பூன்
- உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
- வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
- காய்ந்த மிளகாய் – 5
- சீரகம்- 1 டீஸ்பூன்
- எள் விதைகள் – 1 டீஸ்பூன்
- கடலை – 1 டீஸ்பூன்
- எண்ணெய் – 2 டீஸ்பூன்
- கறிவேப்பிலை
- உப்பு
செய்முறை
மேலே சொன்ன கொத்தமல்லி விதைகள், சன்னா தால், உளுத்தம் பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாய்,சீரகம்,எள் விதைகள்,வேர்க்கடலை என அனைத்து பொருட்களையும் வறுத்து பொடியாக அரைக்கவும்.
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பின்னர் கோவக்காய் சேர்த்து மிதமான தீயில் 10 முதல் 15 நிமிடங்கள் வரை சமைக்கவும். காய்கறி நன்கு வெந்ததும் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து நன்றாக கலக்கவும்.
2 முதல் 3 நிமிடங்கள் வரை வதக்க வேண்டும். வதங்கியதும் அடுப்பை அனைத்து கோவக்காய் பொரியலை எடுத்து சூடாக பரிமாறவும். சாதத்திற்கு அற்புதமாக இருக்கும்.
கோவைக்காய் உடலுக்கு மிகவும் நல்லது. கோவைக்காய் தொப்பை, சர்க்கரை நோய், சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை, சிறுநீரகத்தில் கல் போன்ற பல நோய்களுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது. கோவைக்காயில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலை தடுக்கிறது.
கோவைக்காயில் இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. இவை எலும்பு வளர்ச்சி, இதயம், ரத்தம், நரம்புகளின் சீரான இயக்கத்திற்கு துணை புரியும். கோவைக்காயில் உள்ள பொருட்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன, குறிப்பாக நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு. வாய்ப்புண், குடல் புண் மற்றும் உடல் புண்களை குணப்படுத்த உதவுகிறது.