
ஊழியர்களுக்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்ட இன்போசிஸ் நிறுவனம்
Narayana Murthy: இன்போசிஸ் நிறுவனம், அதன் ஊழியர்களுக்கு அனுப்பியிருக்கும் மெயில், பேசுபொருளாக மாறியுள்ளது. அப்படி என்ன இருந்தது மெயிலில்?
Narayana Murthy: இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி, வாரத்திற்கு 70 மணி நேர வேலை என்கிற திட்டத்தை முன்மொழிந்திருந்தார். அது பரவலாக பேசப்பட்டது, விமர்சனமும் செய்யப்பட்டது. நிறுவனர் அப்படி சொல்லியிருக்க, இன்போசிஸ் நிறுவனமோ, அதற்கு நேர்மாறாக ஒரு அறிவிப்பை, தங்கள் ஊழியர்களுக்கு அறிவித்துள்ளது. இன்போசிஸ் நிறுவனம் அதன் பணியாளர்களுக்கு “வேலை மற்றும் வாழ்க்கை சமநிலை” (work-life balance) முக்கியம் என தெரிவித்து, அதிக நேரம் வேலை செய்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது. ஹைப்ரிட் வேலை முறை (அதாவது வீட்டிலிருந்தும், அலுவலகத்திலிருந்தும் வேலை செய்வது) அமலுக்கு வந்த பிறகு, நிறுவன HR குழு தனிநபருக்கென மின்னஞ்சல் அனுப்பி, அவர்களின் வேலை நேரத்தைக் கவனிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. அந்த மின்னஞ்சலில் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்ன?
மேலும் படிக்க | Apollo Hospital Share Price: 4% அதிகரித்த அபோல்லோ மருத்துவமனை பங்குகள்.. 52 வார உச்சத்தை அடைய காரணம் என்ன?
Narayana Murthy: இன்போசிஸ் மின்னஞ்சலில் இருப்பது என்ன?
- வாரத்திற்கு ஐந்து நாட்கள், நாள்தோறும் 9.15 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்.
- வீட்டில் இருந்து வேலை செய்யும் போதும் இந்த நேரத்தை மீறக்கூடாது.
- கடந்த மாதத்தில் நீங்கள் இந்த நேரத்தை மீறியிருந்தால், அதை குறைக்கும் முயற்சி செய்ய வேண்டும்.
- வேலை நேரத்தில் இடையிடையே ஓய்வெடுக்கவும்.
- வேலை வேகமாக செல்கிறது என்றால் மேலாளருடன் ஆலோசனை செய்யவும்.
- பொறுப்புகளை பிறருடன் பகிர்ந்துகொள்ள பரிந்துரைக்கவும்.
- வேலை நேரத்திற்கு வெளியே முற்றிலும் ஓய்வெடுக்க முயற்சிக்கவும்.
மேலும் படிக்க | 8,500 பேர் பலி.. பேரிடர்களால் 7 ஆண்டுகளில் பேரழிவை சந்தித்த ஜார்க்கண்ட்! அதிர்ச்சி அறிக்கை!
போன்ற ஆலோசனைகள் அதில் வழங்கப்பட்டுள்ளது. இது அந்நிறுவன நிறுவனரின் கருத்துக்கு நேர் எதிரான கருத்தாக பார்க்கப்படுகிறது. அப்படியானால், நாராயண மூர்த்தி என்ன சொல்லியிருந்தார்? முன்பு அவர், இளைஞர்கள் வாரத்தில் பேசும் போது, 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். இந்தியா முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில், அவர் அந்த கருத்தையும் பதிவு செய்தார். எனினும், அவர் பின்னர் இது தனது தனிப்பட்ட தேர்வாக இருந்தது என்றும், யாரையும் இப்படிச் செய்ய சொல்ல முடியாது என்றும் விளக்கம் அளித்திருந்தார். இவை நடந்த சில மாதங்களுக்குப் பின், நாராயண சாமியின் இன்போசிஸ் நிறுவனம், நிறுவனரின் கருத்துக்கு எதிரான கொள்கைகளை நடைமுறைப்படுத்துகிறது.