
சுரைக்காய் தோல் சட்னி செய்முறை (Image Source - Canva)
ருசியான சுரைக்காய் தோல் சட்னி செய்ய தேவையான பொருட்களையும் செய்முறையையும் இங்கு பார்க்கலாம். சூடான இட்லி தோசைக்கு சரி காம்பினேஷன்.
நீர்ச்சத்து நிறைந்த சுரைக்காயை நாம் உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. ஆனால் நாம் பொதுவாக சமையலுக்கு சுரைக்காய் பயன்படுத்தும் போது அதன் தோலை எடுத்து விட்டு பயன்படுத்துகிறோம். ஆனால் சுரைக்காய் தோலை வைத்து ருசியான சட்னி செய்ய முடியும் என்றால் நம்ப முடிகிறதா இதன் ருசி அருமையாக இருக்கும். சுரைக்காய் சட்னி செய் தேவையான பொருட்களையும் செய்முறையையும் இங்கு பார்க்கலாம்.
சுரைக்காய் தோல் சட்னி செய்ய தேவையான பொருட்கள்
சுரைக்காய் தோல் – 1 கப்
தக்காளி – 2
எள் – 100 கிராம்
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – சுவைக்கு தேவையான அளவு
சிவப்பு மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
சர்க்கரை – 2 டீஸ்பூன்
பூண்டு பற்கள் – 5
தாளிப்புக்கு தேவையான பொருட்கள்
கடுகு உளுந்து – 1/2 ஸ்பூன்
எண்ணெய் – 2 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 5
கறிவேப்பிலை – ஒரு கொத்து
பெருங்காயம் – 1/2 ஸ்பூன்
சுரைக்காய் தோல் சட்னி செய்யும் முறை
சுரைக்காய் தோலில் இருந்து சட்னி தயாரிக்க, நீங்கள் முதலில் தோல்களை சுத்தமான தண்ணீரில் நன்கு கழுவி 30 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைத்து ஒதுக்கி வைக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு, தோல்களை தண்ணீரில் இருந்து நீக்கி சிறிய துண்டுகளாக வெட்ட வேண்டும்.
மேலும் படிக்க | மணக்க மணக்க நெல்லிக்காய் ரசம் எப்படி செய்வது பாருங்க.. செம டேஸ்ட்டா இருக்கும்.
பின்னர், தக்காளி மற்றும் பூண்டை நன்றாக நறுக்கி ஒதுக்கி வைக்கவும். இப்போது ஒரு கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெயை ஊற்றி குறைந்த தீயில் சூடாக்கவும். எண்ணெய் சூடானதும், நறுக்கிய தக்காளி மற்றும் சுரைக்காய் தோல்களை சேர்த்து 5 நிமிடங்கள் நன்கு வதக்கவும். இதன் பிறகு, எள், மிளகாய் தூள், சர்க்கரை மற்றும் உப்பு ஆகியவற்றை வாணலியில் சேர்த்து 5 நிமிடங்கள் நன்றாக வதக்க வேண்டும். பின்னர் அடுப்பை அணைத்து சட்னி கலவையை நன்றாக ஆற விட வேண்டும். சட்னி கலவை குளிர்ந்துவிட்டதாக உணர்ந்ததும், அதை மிக்ஸியில் போட்டு சட்னி பதத்திற்கு அரைத்து எடுத்து கொள்ள வேண்டும். அவ்வளவு தான் உங்கள் சுவையான மற்றும் ஆரோக்கியமான சுரைக்காய் தோல் சட்னி தயார்.
மேலும் படிக்க | அருமையான ருசியில் கேரட் பாயாசம் எப்படி செய்வது பார்க்கலாமா!
பின்னர் தாளிப்பு கரண்டியில் எண்ணெய் சேர்த்து சூடாக்கி அதில் கடுகு உளுந்து சேர்க்க வேண்டும். கடுகு வெடித்த உடன் சீரகம் மற்றும் கறிவேப்பிலையை சேர்க்க வேண்டும். அதல் சின்ன வெங்காயத்தை நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும். கடைசியாக சிறிதளவு பெருங்காய தூளையும் சேர்த்து அதை சட்னியில் சேர்த்து கலக்க வேண்டும். இந்த சட்னியை சூடான இட்லி தோசையுடன் சாப்பிட ருசி அருமையாக இருக்கும்.