
ஹெல்த் மிக்ஸ்
வீட்டிலேயே ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஹெல்த் மிக்ஸ் செய்ய தேவையான பொருட்களையும் செய்முறையையும் இங்கு பார்க்கலாம்.
எல்லா காலங்களிலும் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் தேடுகிற ஒன்று தான் ஆரோக்கியம். நாம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க பல முயற்சிகளை செய்கிறோம். அதில் ஒன்றுதான் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஹெல்த் மிக்ஸ் பவுடர் என்று சொல்லலாம். ஆனால் நோய் வாய்பட்ட காலங்களில் மட்டுமே பலரும் இதை தேடுகிறீர்கள். டயட் கன்ட்ரோலில் இருக்கும் போது பலரும் எடுத்து கொள்ளும் உணவாக உள்ளது. ஆனால் நமது உடலுக்கு தேவையான அனைத்து சத்துகளும் சீராக சமமான விகிதத்தில் கிடைக்க எல்லோரும் இந்த ஹெல்த் மிக்ஸ் எடுத்து கொள்ளலாம். இந்த ஹெல்த் மிக்ஸ் நுகர்வு வியாபார சந்தையில் பல பெயர்களில் விற்பனை செய்யப்படுகின்றது. அது நீண்ட நாட்கள் கெட்டு விடாமல் இருக்க பல ப்ரிசர்வேடிவ்கள் பயன்படுத்தப்படுகிறது. இது நமது உடலுக்கு சில நேரங்களில் பிரச்சனைகளை தரலாம். ஆனால் நீங்கள் எந்த கலப்படமும் இல்லாமல் உங்கள் வீட்டிலேயே மிகவும் எளிதாக இந்த ஹெல்த் மிக்ஸ் பவுடரை செய்து விட முடியும். அதை தயாரிக்கும் முறையை பார்க்கலாமா.
தேவையான பொருட்கள்..
உளுத்தம்பருப்பு,
பாசிப்பருப்பு,
திணை,
சாமை,
கேழ்வரகு,
சோளம்,
கருப்பு சுண்டல் ,
மக்காச் சோளம் ,
சிகப்பு அரிசி,
கம்பு,
வரகு,
நிலக்கடலை,
முந்திரிப் பருப்பு,
பாதாம்,
பிஸ்தா,
சம்பா கோதுமை ,
எள்
தேவையான பொருட்கள் அனைத்தையும் நூறு கிராம் அளவில் எடுத்துக் கொண்டு அனைத்தையும் தனித்தனியாக வெயிலில் காய வைத்து எடுத்து கொள்ள வேண்டும். இப்போது அனைத்து பொருட்களையிம் தனித்தனியாக கடாயில் வறுத்து எடுக்கவும் . ஒவ்வொரு பொருளும் வறுபட வெவ்வேறு வகையான நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதால் தனித்தனியாக பிரித்து வறுத்து எடுக்க வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்துக்கொள்ள வேண்டும். வறுத்த பொருட்கள் சூடு குறைந்த பிறகு அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் சேர்த்து பவுடராக அரைத்து கொள்ள வேண்டும். இதை ஈரம் இல்லாத டப்பாவில் சேமித்து வைக்க வேண்டும். தேவையான போது காய்ச்சிய பாலில் 2 ஸ்பூன் அரைத்த பொடி மற்றும் சிறிது வெல்லம் சேர்த்து கலந்து குடிக்கலாம்.
மேலும் படிக்க | என்னது தூங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பே சாப்பிட வேண்டுமா.. இதய நோய் நிபுணரின் விளக்கம் இதோ!
இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எடுத்து கொள்ளலாம். உடலுக்கு தேவையான அனைத்து சத்துகளும் சீராக சமமான விகிதத்தில் கிடைக்க உதவுகிறது. இதை எடுத்து கொள்ளும் போது உடலுக்கு தேவையான நார்ச்சத்து புரதச்சத்து கார்போஹைட்ரேட் விட்டமின்களும் கிடைப்பதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதை பிரிட்ஜில் வைத்து குடிக்கும் போது கூடுதல் சுவையாக இருக்கும்.
மேலும் படிக்க | சுரைக்காய் தோலை வைத்து ருசியான சட்னி செய்வது எப்படி தெரியுமா.. இந்த மாதிரி செய்து பாருங்க!
இவ்வாறு வீட்டில் செய்து வீட்டில் எல்லோருக்கும் தரும் போது ஆரோக்கியம் மேம்படும். கடைகளில் தேடி வாங்கும் சத்து மாவு களை விடவும் நாம் வீட்டில் தயாரித்து கொடுப்பதால் பணமும் மிச்சமாகிறது. வீட்டில் உள்ள நபர்களின் எண்ணிக்கை அடிப்படையில் நாம் தயாரித்து கொடுப்பதால் பிரஷ்ஷாக இருக்கும். இந்த பவுடரை காற்று புகாத டப்பாவில் போட்டு வைப்பது நல்லது.