
9 ந்துகளில் 5 சிக்சருடன் 37 ரன்கள் குவித்த டெனோவன் பெரேரா
அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த தொடரில் இன்று நடந்த போட்டியில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்தது. அந்த அணியின் டெனோவான் பெராரியா 9 பந்துகளில் 37 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார்.
மேஜர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 23-வது லீக் ஆட்டம் லாடர்ஹில்லில் நடைபெற்றது. டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் – வாஷிங்டன் ப்ரீடம் அணிகள் மோதிய இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட்டதால், 5 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது. இந்த போட்டியில், முதலில் பேட் செய்த டெக்ஸாஸ் அணியில் கேப்டன் ஸ்டொயினிஸ் 2, டேரில் மீச்செல் 6 ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஆனால் 3-வது விக்கெட்டுக்கு இணைந்த சுபம் ரஞ்சனே – டெனோவான் பெராரியா ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
கேப்டன் மாற்றம்
குறிப்பாக டெனோவான் பெராரியா 9 பந்துகளை மட்டுமே சந்தித்து 5 சிக்சருடன் 37 ரன்கள் எடுத்து அசத்தினார். சுபம் ரஞ்சனே 14 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிக்சருடன் 39 ரன்கள் குவித்தார். இதனால் 5 ஓவர்கள் முடிவில் டெக்ஸாஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் எடுத்தது. இந்த ஸ்கோர் 5 ஓவர் ஆட்டத்தில் அடிக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். 30 பந்துகளில் 88 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வாஷிங்டன் அணி 44 ரன்கள் மட்டுமே எடுத்தது,
மேலும் படிக்க | Donovan Ferreira: திடீரென டிரெண்ட் ஆகும் டொனோவன் பெரேரா.. இவர் பற்றி தெரியுமா?
இதன் மூலம் 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம், டெக்ஸாஸ் அணி புள்ளிப்பட்டியலில், 2-வது இடத்திற்கு முன்னேறியது. இதனால் முதல் மூன்று அணிகளும் தலா 12 புள்ளிகளுடன், இன்னும் இரண்டு ஆட்டங்கள் மீதமிருக்க, ஒரு பரபரப்பான நிலையை உருவாக்கியுள்ளது. இந்த போட்டியில் டெக்ஸாஸ் அணியின் கேப்டன் பாப் டூபிளசிஸ் காயம் காரணமாக விளையாடாதததால், அவருக்கு பதிலாக மார்கஸ் ஸ்டொயினிஸ் கேப்டனாக களமிறங்கினார்.
தொடக்கத்தில் சிரமப்பட்ட டெக்ஸாஸ் அணி
டேரில் மீச்செலுடன் தொடக்க வீரராக களமிறங்கிய ஸ்டொயினிஸ், தனது இரண்டாவது பந்தில் விக்கெட் கீப்பரிடம் எட்ஜ் ஆகி வெளியேறினார். முதல் ஓவரில் வெறும் ஐந்து ரன்கள் மட்டுமே சேர்த்தது அணி. சுபம் ரஞ்சனே அடுத்த ஓவரில் இரண்டு சிக்ஸர்களை அடித்தார், ஆனால் மிட்செல் ரன்கள் எடுக்க சிரமப்பட்டார், மேலும் மூன்றாவது ஓவர் முடிவில் டெக்ஸாஸ் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 34 ரன்கள் எடுத்த நிலையில், மீச்செல் ரிட்டையர் ஹிட் மூலம் வெளியேறினார். அவரின் இந்த செயல் ஒரு மாஸ்டர்ஸ்ட்ரோக்காக நிரூபிக்கப்பட்டது, ஏனெனில் அடுத்து களமிங்கிய டெனோவான் பெராரியா மற்றும் ரஞ்சனே இருவரும் ஒரு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்த, கடைசி 12 பந்துகளில் டெக்ஸாஸ் அணி 53 ரன்கள் குவித்தது.
மேலும் படிக்க | MLC 2025: சம்பவம் செய்த ஹெட்மியர்.. சந்தில் சிந்து பாடிய சியாட்டில் ஓர்காஸ் அணி!
ரஞ்சனே, முந்தைய ஓவரில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடித்தார், அதில் பெராரியாவும் ஒருமுறை சிக்ஸர் அடித்தார். ஆனால் இறுதி ஓவரில் தான் தென் ஆப்பிரிக்க வீரரான பெராரியா, ஹாட்ரிக் சிக்சர் அடித்தததுடன் 4வது மற்றும் 5-வது பந்தில் தலா 2 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் மற்றொரு சிக்சருடன் இன்னிங்சை முடித்து வைத்தார். வெறும் 9 பந்துகளில் 37* ரன்கள் குவித்து அசத்தினார். ரன் சேஸில் வாஷிங்டன் அணியில், ரச்சின் ரவீந்திரா ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸருடன் துவங்கிய போதிலும், நான்ட்ரே பர்கர் பந்துவீச்சில், ரவீந்திரா மற்றும் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் அடுத்தடுத்த பந்துகளில் அவுட் ஆகினர்.
அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்ந்ததால், இலக்கை எட்டும் பணி மிகவும் கடினமாக மாறியது. டெக்ஸாஸ் அணியின் அகீல் ஹொசைன் ஒரு அற்புதமான ஓவரை வீசினார், அந்த ஓவர் ஒரு சிக்ஸருடன் துவங்கினாலும், இறுதியில் ஒரு விக்கெட் உட்பட ஐந்து டாட் பந்துகளுடன் முடிந்தது. பின்னர் நூர் அகமது மற்றும் ஹொசைன் இருவரும் துல்லியமான ஓவர்களை வீசி ஆட்டத்தை முடித்தனர், வாஷிங்டன் அணி டெக்ஸாஸ் அணி எடுத்த ரன்களில் பாதியை மட்டுமே எடுக்க முடிந்தது.