
வாழைப்பூ பிரியாணி
Recipe: வாழைப்பூவில் பிரியாணி சாப்பிட்டு இருக்கிறீர்களா? சாப்பிட்டதில்லை என்றால் இனி இந்த மாதிரி வாழைப்பூ பிரியாணி செய்து சாப்பிட்டு பாருங்கள். அவ்வளவு ருசியாக இருக்கும்.
Recipe: அனைவரும் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, மீன் பிரியாணி, பிரான் பிரியாணி,காளான் பிரியாணி, வெஜ் பிரியாணி, முட்டை பிரியாணி என பலவிதமான பிரியாணியை சாப்பிட்டு இருப்பீர்கள். வாழைப்பூ பிரியாணி சாப்பிட்டு இருக்கிறீர்களா? இப்போது வாழைப்பூ பிரியாணி எப்படி செய்வது என்பது குறித்து பார்க்கலாம். வாழைப்பூவில் பிரியாணியா? என பலருக்கும் வித்தியாசமாக தோன்றலாம். ஆனால் வாழைப்பூ பிரியாணி ஒரு முறை சாப்பிட்டு பாருங்கள். மீண்டும் மீண்டும் கேட்பீர்கள் அவ்வளவு ருசியாக இருக்கும்.
வாழைப்பூ பிரியாணிக்கு தேவையான பொருட்கள்
- வாழைப்பூ
- தயிர்
- வெங்காயம்
- தக்காளி
- துருவிய தேங்காய்
- உப்பு
- கொத்தமல்லி இலைகள்
- ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள்
- ஒரு டீஸ்பூன் கொத்தமல்லித்தூள்
- கால் டீஸ்பூன் மஞ்சத்தூள்
- ஒரு ஸ்பூன் நெய்
- இஞ்சி, பூண்டு பேஸ்ட்
வாழைப்பூ பிரியாணி எப்படி செய்வது
Recipe: வாழைப்பூ பிரியாணி எப்படி செய்வது என்பது குறித்து பார்க்கலாம். முதலில் வாழைப்பூவை எடுத்து சுத்தம் செய்து வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதிலுள்ள நரம்புகளை நன்றாக அகற்றி விடுங்கள். பின்னர் அந்த வாழைப்பூவை தயிரில் போட்டு ஊற வைக்கவும். ஏனென்றால் தயிரில் போட்டால் வாழைப்பூ கருக்காது அதேசமயம் துவக்கவும் செய்யாது. அதனால் தயிரில் போடுவது நல்லது.
இப்போது ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றிக் கொள்ளுங்கள் அதன் பிரியாணிக்கு தேவையான அனைத்து பொருட்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் நறுக்கி வைத்த வெங்காயம், இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள்.
பின்னர் அதில் நறுக்கி வைத்த தக்காளி சேர்த்து, தோலை உரித்த பலாக்கொட்டை சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது அதில் ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள், ஒரு டீஸ்பூன் கொத்தமல்லித்தூள், கால் டீஸ்பூன் மஞ்சத்தூள், ஒரு ஸ்பூன் உப்பு, மல்லி தலை சேர்த்து வதக்கி விட்டு மூடி வைத்து விடுங்கள். இப்போது அந்த பலாக்கொட்டை நன்கு வேகம் அளவிற்கு அடுப்பை சிம்மில் வைத்து நன்கு வேக விடுங்கள்.
பலாக்கொட்டை நன்கு வெந்தயம் நாம் சுத்தம் செய்து நறுக்கி வைத்து தயிரில் ஊற வைத்த வாழைப்பூவை எடுத்து இதில் சேர்த்துக் கொள்ளுங்கள். வாழைப்பூவை சேர்த்தவுடன் ஒரு கப் பாஸ்மதி ரைஸ் 10 நிமிடம் ஊற வைத்து சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு கப் அரிசிக்கு இரண்டே கால் கப் தண்ணீர் ஊற்றி மூடி வைத்து மேலே ஒரு வெயிட்டான பொருளை வைக்கவும். அடுப்பை சிம்மில் வைத்து வேக விடுங்கள்.
வாழைப்பூயில் ரைத்தா எப்படி செய்வது
Recipe: இப்போது பிரியாணிக்கு ரைத்தா எப்படி செய்வது என்பது குறித்து பார்க்கலாம். நாம் எப்பொழுதும் வாழைப்பூவை சுத்தம் செய்யும் பொழுது கடைசியாக இருக்கும் குட்டி பூவை தூக்கி எறிவது உண்டு. ஆனால் அந்த பூவை வைத்து நீங்கள் ரைத்தா செய்யலாம்.
வாழைப்பூவை எடுத்து குட்டி குட்டியாக நறுக்கிக் கொள்ளுங்கள். பின்னர் அதில் தயிர் வெங்காயம், துருவிய தேங்காய், உப்பு, மாதுளை, கொத்தமல்லி இலை சேர்த்து ரைத்தாவை தயார் செய்யுங்கள். இதனை பிரியாணி உடன் வைத்து சாப்பிடும்போது அருமையாக இருக்கும்.