
குரு பெயர்ச்சி பரிகாரக் கோயில்கள்
Guru: குரு பெயர்ச்சி , பலருக்கு மாற்றங்களையும், திருப்பங்களையும் வழங்கியிருப்பதை நம்மால் காண முடிகிறது. உச்சத்தில் இருந்தவர்கள் அச்சத்திலும், அச்சத்தில் இருந்தவர்கள் உச்சத்திலும் அனுபவங்களை சந்தித்திருக்க வாய்ப்பிருக்கிறது. அப்படி ஒரு சூழலில், என்ன பரிகாரம் பண்ணலாம்? எங்கு பண்ணலாம்? என்கிற கேள்வி பலருக்கு தோன்றியுள்ளது. குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு நகரும் போது, ஏற்படும் மாற்றங்களின் விளைவு தான் அது. இதனை சமாளிக்க பரிகாரமாக சில சிறப்பு கோயில்களுக்கு சென்று வழிபடலாம். இதோ உங்களுக்கான சிறந்த 10 குரு பரிகாரக் கோயில்கள் விபரம்:
மேலும் படிக்க | குரு உதயத்தால் லாபம் கொட்டும்.. எந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பாருங்க.. உங்கள் ராசி லிஸ்ட்டில் இருக்கா?
சிறந்த 10 குரு பரிகாரத் தலங்கள் இதோ
எண் | கோயில் பெயர் | இடம் | சிறப்பு |
---|---|---|---|
1 | ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில் | திருவாரூர் | நவகிரகங்களில் குருவுக்கான பிரதான ஸ்தலம். தட்சிணாமூர்த்தியாக குரு பகவான் காட்சி தருகிறார். |
2 | வசிஷ்டேஸ்வரர் கோயில் | திட்டை, தஞ்சாவூர் | குரு பகவான் ராஜகுருவாக காட்சி தரும் தலம். மங்காம்பிகை சமேதமாக உள்ளார். |
3 | மயூரநாதர் கோயில் | மயிலாடுதுறை | காசிக்கு நிகரான தலமாக கருதப்படுகிறது. குரு தோஷ நிவாரணத்திற்கு சிறந்த இடம். |
4 | பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயில் | சிவகங்கை | கிழக்கு நோக்கி தட்சிணாமூர்த்தி காட்சி தரும் ஒரே கோயில். ஆலமரத்தை வலம் வருவது சிறப்பு. |
5 | வலிதாயநாதர் கோயில் | பாடி, சென்னை | குருபகவான் வழிபட்ட தலம். குரு தோஷ நிவாரணத்திற்கு பரிகார தலம். |
6 | ஸ்ரீவைகுண்டம் ஆழ்வார் திருநகரி | தூத்துக்குடி | நம்மாழ்வார் அவதரித்த தலம். ஆதிநாத பெருமாள் குருவாக காட்சி தருகிறார். |
7 | திருச்செந்தூர் முருகன் கோயில் | தூத்துக்குடி | அறுபடை வீடுகளில் ஒன்று. குரு பகவான் மேதா தட்சிணாமூர்த்தியாக காட்சி தருகிறார். |
8 | வல்லநாடு கைலாசநாதர் கோயில் | தூத்துக்குடி | நவ கைலாயங்களில் ஒன்று. குருவின் அம்சமாக கைலாசநாதர் உள்ளார். |
9 | ஓமாம்புலியூர் துயர் தீர்த்தநாதர் கோயில் | சிதம்பரம் அருகில் | பிரணவ மந்திரத்தை உமாதேவிக்கு உபதேசித்த தலம். |
10 | திருலோக்கி கோயில் | திருப்பனந்தாள் அருகில் | குருபகவான் இறைவனை வழிபட்ட தலம். வாழ்வில் ஏற்றம் தரும் பரிகார தலம். |
இந்த குரு பரிகாரத் தலங்களில், வியாழக் கிழமை தோறும், மஞ்சள் வஸ்திரம், முல்லை மலர், மற்றும் நெய் தீபம் கொண்டு வழிபடுவது குருபெயர்ச்சி கெடுபலன்களுக்கு சிறந்த தீர்வாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. குரு கெடுப்பவர் அல்ல, கொடுப்பவர். கேளுங்கள், கட்டாயம் தருவார்.
மேலும் படிக்க | மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா.. வீட்டில் தப்பி தவறி கூட இந்த 5 படங்களை வைக்க வேண்டாம்.. வீட்டில் பண கஷ்டம் அதிகரிக்குமாம்!
குறிப்பு: மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள், ஜோதிடர்கள் மற்றும் ஆன்மிக நிபுணர்களின் தகவலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை. இதை முழுமையாக நம்புவதற்கு முன், உங்கள் ஜோதிட நிபுணர்களின் கருத்துக்களையும் பெறுங்கள்.