
திருப்பதி கோயில்
திருப்பதி கோயிலில் 1 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் இலவசமாக தரிசனம் செய்ய சிறப்பு வாய்ப்பை TTD வழங்கி உள்ளது.
திருமலை திருப்பதி எப்போதும் பக்தர்களால் நிரம்பி வழிகிறது. இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வெங்கடேஸ்வரரை தரிசனம் செய்ய வருகிறார்கள். சர்வ தரிசனம், திவ்ய தரிசனம், ஸ்ரீவாணி டிரஸ்ட் தரிசனம், விஐபி பிரேக் தரிசனம், ரூ.300 சிறப்பு நுழைவு தரிசனம், சுபத தரிசனம் போன்ற பல்வேறு தரிசனங்கள், பக்தர்களுக்கு டிடிடியால் வழங்கப்படுகிறது. வெங்கடேஸ்வரரை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு இலவச தரிசனம், அன்ன பிரசாதம் மற்றும் குடிநீர் வழங்கப்படுகிறது.
தரிசனத்திற்கு முன்னுரிமை
முதியவர்கள், உடல் மற்றும் மன குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள், ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்ட பெற்றோர்கள், பகவானின் தரிசனத்திற்காக வரும் போது மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியிருந்தால் பல சிரமங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். அவர்களின் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, தேவஸ்தானம் சார்பாக, தரிசனத்திற்கு முன்னுரிமை அளிக்கிறது.
நேரடி தரிசனம் செல்ல என்ன வழி
ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோருக்கு இலவச தரிசனம் வழங்கப்படுகிறது. இதன் மூலம், ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்ட பெற்றோர்கள் பகவானின் தரிசனத்திற்காக பெட்டிகளில் காத்திருக்க வேண்டியதில்லை. அவர்கள் நேரடியாக தரிசனத்திற்காக அனுப்பப்படுகிறார்கள்.
இந்த தரிசனத்திற்கு என்று சில விதிகள் உள்ளன. அவை…
ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் இலவசமாக சுவாமி தரிசனம் செய்யச் செல்லும் போது, குழந்தையின் அசல் பிறப்புச் சான்றிதழைக் கொண்டு வர வேண்டும். பிறப்புச் சான்றிதழ் இல்லையென்றால், மருத்துவமனையில் இருந்து குழந்தையின் வெளியேற்றச் சான்றிதழை வழங்க வேண்டும். அசல் சான்றிதழ்களைக் கொண்டு வர வேண்டும். மேலும், பெற்றோரின் அடையாள அட்டைகளை (ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, பான் போன்றவை) கொண்டு வர வேண்டும்.
கட்டணம் இல்லை
இந்த சிறப்பு தரிசனத்திற்கு, ஒரு வருடத்திற்குள் குழந்தையுடன் பெற்றோருக்கு அனுமதி வழங்கப்படுகிறது. மேலும், அவர்களுடன், 12 வயதுக்குட்பட்ட பெண் அல்லது ஆண் குழந்தையும் அனுமதிக்கப்படுகிறது. பக்தர்கள் இந்த தரிசனத்திற்கு முன்கூட்டியே முன்பதிவு செய்ய வேண்டியதில்லை. கட்டணம் எதுவும் செலுத்த வேண்டிய அவசியமில்லை. இந்த தரிசனத்தை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை சுபதம் என்ற நுழைவாயில் வழியாக நேரடியாக செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.
சுபதம் வழித்தடத்திற்கு அருகில் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் மற்றும் பெற்றோரின் அடையாளச் சான்றுகளை TTD ஊழியர்கள் சரிபார்த்து, பின்னர் அவர்களை நேரடியாக தரிசனத்திற்குச் செல்ல அனுமதிப்பார்கள். இந்த தரிசனம் மூலம் சென்றால் குறைந்தது 1 முதல் 2 மணி நேரதிற்குள் தரிசனத்தை முடித்து விட்டு வரலாம். சுபதம் மூலம் சென்றால் இரண்டு லட்டை இலவசமாக பெற்று கொள்ளலாம்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.