
மார்க்கெட்டில் நடக்கும் மீன் விற்பனை
Fish: மீன் வாங்குவதில் குழப்பம் இருக்கிறதா? எது நல்லது? எது கெட்டது? என்பதை கண்டறிவதில் பிரச்னையா? இதோ இந்த தகவல்கள் உங்களுக்கு உதவும்.
Fish: மீன் சமைப்பதை விட, சாப்பிடுவதை விட சிரமமானது, அதை வாங்குவது தான். பெரும்பாலும் கடல் மீன்கள், பதப்பட்ட நிலையில் தான் விற்பனைக்கு வருகின்றன. அவ்வாறு வரும் மீன்களை, நல்ல மீன், கெட்ட மீன் என்று தரம் பிரித்து வாங்குவதில் நமக்கு இன்னும் குழப்பம் இருக்கிறது. விற்பனையாளர் சொல்லும் சத்தியத்தை மட்டுமே நம்பி, மீன்களை வாங்கிக் கொண்டிருக்கிறோம். அவர், வியாபாரத்திற்காக அப்படி சொல்ல நேரிடும். அப்படியானால், நாம் வாங்கும் மீனுக்கு , நான் தானே பொறுப்பு. அப்போ, நாம் தானே மீனை பார்த்த வாங்க வேண்டும்? இதோ உங்களுக்காக, மீன் வாங்கும் போது நாம் செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள்.
மேலும் படிக்க | Chicken: சிக்கன் வறுப்பது நல்லதா? கொதிக்க வைப்பது நல்லதா? என்ன வித்தியாசம்?
Fish: நல்ல மீனின் அடையாளங்கள் சில இதோ
அடையாளம் | விளக்கம் |
---|---|
மூக்கு வாசனை | கடல் அல்லது நதியின் இயற்கையான வாசனை. துர்நாற்றம் இருக்கக்கூடாது. |
கண் | தெளிவானது, பளிச்சென்றது, புழுதி இல்லாதது. |
எலும்பு மற்றும் தோல் | இறுக்கமாக, ஒட்டியிருக்கும் தோல். பளபளப்பாக இருக்கும். |
மீன் இறைச்சி | உறுதியானது, அழுத்தினால் மெதுவாகவும் சாய்வாகவும் இருக்கக்கூடாது. |
எலும்பு அருகில் நிறம் | வெண்மை அல்லது இளஞ்சிவப்பு. சிவப்பு அல்லது பழுப்பு நிறம் இல்லை. |
கிழல்கள் | சிவப்பாகவும் ஈரமாகவும் இருக்கும். துர்நாற்றம் இல்லாமல் இருக்க வேண்டும். |

Fish: கொட்டுப் போன மீனின் அடையாளங்கள் சில இதோ
அடையாளம் | விளக்கம் |
---|---|
மூக்கு வாசனை | அமோனியா அல்லது சளைக்காற்று போன்ற துர்நாற்றம். |
கண் | குழிந்தது, மேகமூட்டம் போல, கருப்பு புள்ளி தெளிவில்லாமல் இருக்கும். |
தோல் | சாய்ந்திருக்கும் தோல், பளபளப்பில்லாமல், சில நேரங்களில் பச்சை அல்லது மஞ்சள் புள்ளிகள். |
மீன் இறைச்சி | மெதுவாகவும், சாய்வாகவும் இருக்கும். அழுத்தினால் தடம் விடும். |
கிழல்கள் | பழுப்பு அல்லது கருப்பு நிறம், ஒட்டும் சளி, துர்நாற்றம். |
நீர் வெளியேறும் | பழைய மீனில் அதிக ஈரப்பதம் அல்லது ஒட்டும் நீர் இருக்கும். |

மேலும் படிக்க | இது தெரியுமா உங்களுக்கு?வாழைப்பூவில் பிரியாணி செய்யலாம்.. இதோ எப்படினு பாருங்க!
Fish: மீன் வாங்க சிறந்த நடைமுறை
- வாங்கும் இடம்: நம்பகமான மீன் சந்தை அல்லது குளிரூட்டப்பட்ட சூழலை உறுதி செய்யுங்கள்
- சமையலுக்கு முன் வாசனை பார்க்கவும்: சந்தேகம் இருந்தால், சமைக்க வேண்டாம், தவிர்ப்பது நல்லது.
- கொதிக்க வைத்து சமைத்தல்: கெட்டுப் போனதாக இருந்தால் கொதிக்க வைத்தாலும் பாதுகாப்பாக இருக்காது.
Fish: மீன் தேர்வு.. அரசின் விளக்க வீடியோ இதோ:
எனவே மீன் வாங்கும் போதும், அதை சமையலுக்கு தயார் படுத்தும் போதும், கண்டிப்பாக மேலே சொன்ன விசயங்களை கருத்தில் கொள்ளுங்கள். அது உங்களை மட்டுமல்லாமல், உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கும். மேலும் விட்டமின்கள் நிறைந்த மீன்களை, நீங்கள் எந்த நோக்கத்திற்காக வாங்குகிறீர்களோ, அந்த நோக்கமும் நிறைவேறும். எனவே மீன் வாங்கும் போது, கவனமாக தேர்வு செய்யவும்.