
கழுதைப் பால் விற்பனை செய்யும் பெண்
Donkey Milk: கழுதைப் பால் விற்பனை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அந்த தொழிலில் ஈடுபட்டு வருவோரிடம், நமது தமிழ் நியூஸ் டைம்ஸ் எடுத்த நேர்காணல்.
Donkey Milk: ஈரோடு மாவட்டம், கோபி, பெருந்துறை, சத்தியமங்கலம் பகுதிகளில் கழுதைகளை ஓட்டிக்கொண்டு “கழுதை பால் வாங்கலையோ?” எனக் கூவிய படியே வரும் நபர்களை அடிக்கடி பார்க்க முடியும். கழுதை பால் கேட்பவர்களுக்கு 50 மிலி ரூ.200க்கும், 100 மிலி ரூ.400க்கும் ஃபிரஷ்ஷான கழுதை பாலை ஸ்பாட்டிலேயே பீச்சி விற்கிறார்கள்.
மேலும் படிக்க | Fish: மீன் வாங்குறீங்களா? நல்லது.. கெட்டது.. எப்படி பார்த்து வாங்குவது? இதோ எளிய டிப்ஸ்!
காஸ்ட்லியாக விற்கப்படும் கழுதை பாலுக்கு அப்படி என்னதான் மகிமை? தெரிந்து கொள்வதற்காக கழுதை பால் விற்பனை செய்து கொண்டிருந்த ராணியிடம் தமிழ் நியூஸ் டைம் செய்திக்காக பேச்சு கொடுத்தோம். ராணி கூறுவதை கேளுங்கள்:
குடும்பமாக நடக்கும் விற்பனை
Donkey Milk: எனக்கும், எனது கணவருக்கும் சொந்த ஊர் கடலூர் மாவட்டம் திட்டக்குடிக்கு அருகில் உள்ள கிராமங்கள் ஆகும். எங்களிடம் 10 கழுதைகள் உள்ளன. நான், என் கணவர், மாமனார், மாமியார் என ஆளுக்கு 2 முதல் 3 கழுதைகளை ஓட்டிக்கொண்டு கழுதை பால் விற்பனையில் ஈடுபடுவோம். 100 மில்லி ரூ.400க்கும், 50 மில்லி ரூ.200க்கும் விற்பனை செய்கிறோம்.

இயல்பாகவே கழுதை பாலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். கழுதை பாலை குழந்தைகளுக்கு கொடுத்தால் மஞ்சள் காமாலை நோய் குணமாகிவிடும். குழந்தைகள் கல், மண் போன்றவற்றை சாப்பிட்டால் அது செரிக்காமல் வயிற்றிலேயே தங்கி கொண்டு பல்வேறு உடல் நலக் கோளாறுகளையும் பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். இவர்களுக்கு கழுதை பால் கொடுத்தால் உடனடியாக ஜீரணமாகி விடும்.
குறைந்து வருகிறதா இந்த பழக்கம்?
Donkey Milk: இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால் சளி, காய்ச்சல் சீக்கிரம் வராது. மூச்சுத் திணறல், இளைப்பு, ஆஸ்துமா போன்றவற்றிற்கும் நல்லது. பல்வேறு நோய்களுக்கும் நிவாரணியாக கழுதை பால் உள்ளது. முந்தைய காலங்களில் எல்லாம் சர்வ சாதாரணமாக கழுதை பாலை குழந்தைகளுக்கு புகட்டுவார்கள். நாகரிக உலகில் தற்போது கழுதை பால் கொடுப்பது குறைந்து விட்டது.
மேலும் படிக்க | Chicken: சிக்கன் வறுப்பது நல்லதா? கொதிக்க வைப்பது நல்லதா? என்ன வித்தியாசம்?
எப்படி நடக்கிறது இந்த தொழில்?
Donkey Milk: கழுதைகளை நேரடியாக அழைத்துச் சென்று கேட்கும் நபர்களுக்கு உடனுக்குடன் பாலை பீய்ச்சி தருகிறோம். பகல் முழுவதும் கழுதைகளை ஓட்டிச் சென்று பால் விற்பனை செய்துவிட்டு இரவில் எல்லோரும் ஒரே இடத்தில் ஒன்றாக கூடி விடுவோம். ஊர் ஊராகச் சென்று கழுதை பால் விற்பனை செய்யும் எங்களுக்கு இரவு நேரத்தில் தங்குவதற்கு திறந்தவெளியில் உள்ள சந்தை கடை, மேய்ச்சல் நிலம் இருக்கக்கூடிய இடங்களில் கழுதைகளை கட்டிப்போட்டு விட்டு தூங்கி விடுவோம்.

போன் செய்து புக்கிங்
Donkey Milk: கழுதைகளுக்கு உணவாக கோதுமை மாவை கரைத்து குடிக்க வைப்போம். பீட்ரூட், கேரட் போன்ற காய்கறிகளையும் உணவாக கொடுப்போம்.
ஒருநாளுக்கு ஒரு கழுதையிடமிருந்து 350 மிலி.,யில் இருந்து 400 மி.லி. பால் கறக்க முடியும். அதிகமாக கறந்தால் கழுதைக் குட்டிக்கு பால் இல்லாமல் போய்விடும்.
எங்களிடம் செல்போன் இருப்பதால் தேவைப்படுபவர்கள் போன் மூலம் தொடர்பு கொண்டு அவர்களே நேரில் வந்து கழுதை பாலை வாங்கிச் சென்று குழந்தைகளுக்கு கொடுக்கிறார்கள் என்று ராணி கூறினார்.
கழுதை பாலுக்கு இயற்கையிலேயே நோய் எதிர்ப்பு சக்தி அதிகமா? என்பது குறித்து மருத்துவர்கள் தான் விளக்க வேண்டும்.