
மதுரை மாநகராட்சியில் நடந்த ஊழலின் பகீர் பின்னணி
Madurai: மதுரையில் பல கோடி ரூபாய் வரிவிதிப்பு முறைகேடு தொடர்பாக, மாநகராட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருந்த திமுகவினர் ராஜினாமா செய்ய வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பெண்கள் உட்பட 5 மண்டலத் தலைவர்கள், 2 நிலைக்குழுத் தலைவர்கள் அடக்கம். ஏன் நடந்தது இந்த நடவடிக்கை? முறைகேட்டின் பின்னணி என்ன? என்பதை பார்க்கலாம்.
Madurai: மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட தனியார் வணிக கட்டடங்களுக்கு, 2023-24 ம் ஆண்டுகளில் வரி நிர்ணயம் செய்யப்பட்டது. அதில், பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அன்றைய மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் விசாரணை நடத்தி, அதற்கு காரணமாக கூறப்பட்ட பில் கலெக்டர்கள் 5 பேரை பணியிடை நீக்கம் செய்தார்.
ஆணையர் பாஸ்வேர்டு திருட்டு..
Madurai: மேலும் இந்த முறைகேட்டில், மாநகராட்சி ஆணையர் மற்றும் துணை ஆணையரின் கணினி பாஸ்வேர்டு தவறாக பயன்படுத்தப்பட்டதாகவும் புகார் எழுந்து, அது தொடர்பாக சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையின் முடிவில், மதுரை மாநகராட்சி மண்டலம் 3 அலுவலகத்தில் வைத்து, முன்னாள் உதவி ஆணையாளர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் படிக்க | Dr Ramadoss: காந்திமதியை மேடையில் ஏற்றியது ஏன்? அன்புமணிக்கு எங்கு ‘செக்’ வைக்கிறார் ராமதாஸ்?
அது தொடர்பாக நகரமைப்பு குழுத் தலைவர் மூவேந்திரன், வரிவிதிப்புக் குழு தலைவர் விஜயலட்சுமி மற்றும் மண்டலத் தலைவர்கள் 5 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. விவகாரம் அடுத்தடுத்து பூதாகரமாக மாற, சம்மந்தப்பட்ட துறையின் அமைச்சர் கே.என்.நேரு, ஜூலை 7 ம் தேதி மதுரை மாநகராட்சியின் மண்டலத் தலைவர்களான சரவண புவனேஸ்வரி, பாண்டிச் செல்வி, முகேஷ் சர்மா, கவிதா ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.
நேரு கொடுத்த ரிப்போர்ட்.. ஸ்டாலின் எடுத்த ஆக்ஷன்
Madurai: அதில், குற்றச்சாட்டுகளின் உண்மை பின்னணியில் அவர்கள் இருந்தது உறுதி செய்யப்பட்டதால், அவர்களிடமிருந்து ராஜினாமா கடிதங்களை பெற்றுக் கொண்டார் கே.என்.நேரு. அதே போல, நிலைக் குழுத் தலைவர்கள் மூவேந்திரன், விஜய லட்சுமியிடமும் ராஜினாமா கடிதம் பெறப்பட்டது. இந்த விவகாரம் முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, உடனே அவர்கள் அனைவரும் ராஜினாமா செய்ய உத்தரவிடப்பட்டது.
இந்த விசாரணையில், மண்டலம் 1ன் தலைவர் வாசுகி மட்டும், ராஜினாமா கடிதம் தர மறுத்திருந்தார். திமுக தரப்பில் அவருக்கு அழுத்தம் தரப்பட்ட நிலையில், அவரும் நேற்று ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார். அனைத்து ராஜினாமா கடிதங்களும், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியிடம் ஒப்படைக்கப்பட்டு, அவற்றை மேயரும் ஏற்றுக் கொண்டதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து, சம்மந்தப்பட்ட 7 பேரின் பதவிகளும் நேற்றோடு காலியானது. இருப்பினும், அவர்களின் கவுன்சிலர் பதவி தொடரும்.
மேலும் படிக்க | 100 ஆண்டுகளாக நிலைத்து நிற்கும் டான் பிராட்மேனின் 4 உலக சாதனைகளை முறியடிப்பாரா கில்?
முறைகேடு உறுதியானதால் தான் சம்மந்தப்பட்டவர்களின் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன. இது நிர்வாக ரீதியான நடவடிக்கை என்றாலும், பின்னணியில் குற்ற நடவடிக்கை இருப்பதால், சம்மந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட வேண்டும். அப்போது தான், இந்த விவகாரத்தில் சரியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்கிற நம்பிக்கை, மக்களுக்கு வரும். மேலும், மதுரை மாநகராட்சியில் தொடர்ந்து இது போன்ற முறைகேடுகள் நடக்க, நீண்ட நாட்கள் பணிபுரியும் அதிகாரிகளும் பின்னணியில் இருக்கின்றனர். எனவே அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுப்பது, பணிமாறுதல் செய்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு முன்வர வேண்டும்.