
கடந்த ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்தின் 2வது இன்னிங்ஸின் ஆறாவது ஓவரில், சிராஜ் தொடக்க ஆட்டக்காரரான பென்டக்கெட் ஆட்டமிழப்பைக் கொண்டாடியபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டின் 4வது நாளில் பென் டக்கெட்டின் விக்கெட்டை வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், அவருக்கு முன்னால் சென்று அதிகப்படியான சத்தத்துடன் கத்திக் கொண்டாடியபடி பென் டெக்கெட்டை நோக்கி ஏதோ கூறியுள்ளார்.
சிராஜுக்கு 15 சதவீதம்
இதனைக் கண்ட அம்பயர்கள் குழு சிராஜ்க்கு போட்டி கட்டணத்தில் 15 சதவீதம் அபராதம் மற்றும் ஒரு தகுதி இழப்பு புள்ளியும் விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளனர். இது ஐசிசி நடத்தை விதிகளின் லெவல் 1 மீறல் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்தின் 2வது இன்னிங்ஸின் ஆறாவது ஓவரில், சிராஜ் தொடக்க ஆட்டக்காரரான பென்டக்கெட் ஆட்டமிழப்பைக் கொண்டாடியபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.
மேலும் படிக்க | அதிர்ச்சி! வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 3வது டெஸ்ட்.. ஆஸ்திரேலிய அணியில் இருந்து நாதன் லயன் நீக்கம்
இது குறித்து ஐசிசி தரப்பில் கூறுகையில், “வெளியேற்றப்பட்ட பேட்டர் அருகில் அதிகப்படியான கொண்டாட்டம்” என்று விளக்கம் அளித்துள்ளது. இது ஐசிசி பிரிவு 2.5 இன் கீழ் விதிமீறலாகும்.
இது கடந்த 24 மாதத்தில் சிராஜின் 2வது தகுதி இழப்பு புள்ளியாகும். இது அவரது எண்ணிக்கையை இரண்டாக உயர்த்தியது. டிசம்பர் 7, 2024 அன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடிலெய்டு டெஸ்டின் போது அவரது முந்தைய தகுதி இழப்பு புள்ளி வந்தது. 24 மாத காலத்திற்குள் 4 அல்லது அதற்கு மேற்பட்ட தகுதி இழப்பு புள்ளிகளை பெறும் பட்சத்தில் அந்த வீரர் இடைநீக்கத்திற்கு உட்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | Ind vs Eng: வெற்றியை நோக்கி இந்திய அணி.. லாட்ஸில் சாதிக்க வாய்ப்பு என்ன?
சிராஜ் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன் போட்டி நடுவர் ரிச்சி ரிச்சர்ட்சன் முன்மொழிந்த தண்டனையை ஏற்றுக்கொண்டார், இதனால் முறையான விசாரணைக்கான தேவை இல்லாமல் போனது. இதற்கான குற்றச்சாட்டு அவர் களத்தில் இருந்த போதே எழுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.