
செம டேஸ்டான மொறு மொறு பேபிகார்ன் ஃபரை
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பேபிகானில் எப்படி ஃபரை செய்வது என்பது குறித்து இதில் பார்க்கலாம். இது மிகவும் சுவையாக இருக்கும். சிற்றுண்டிக்கு ஏற்ற உணவாக இந்த பேபி கார்ன் வறுவல் இருக்கும்.
பேபிகார்ன் ஃபரை செய்ய தேவையான பொருட்கள்
- பேபி கார்ன் -200 கிராம்
- இஞ்சி பூண்டு விழுது -1 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் – ½ டீஸ்பூன்
- கருப்பு மிளகு தூள் – 1 டீஸ்பூன்
- உப்பு
- அரிசி மாவு – 2 டீஸ்பூன்
- சோள மாவு – 2 டீஸ்பூன்
- கறிவேப்பிலை
- பொரிப்பதற்கு எண்ணெய்
பேபிகார்ன் ஃபரை செய்வது எப்படி
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பேபிகானில் எப்படி மிளகு வறுவல் செய்வது என்பது குறித்து இதில் பார்க்கலாம். இது மிகவும் சுவையாக இருக்கும். சிற்றுண்டிக்கு ஏற்ற உணவாக இந்த பேபி கார்ன் வறுவல் இருக்கும்.
முதலில் பேபிகார்ன் எடுத்து சுத்தம் செய்து விட்டு சிறு சிறு துண்டுகாளாக நறுக்கவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து நறுக்கி வைத்த பேபிகார்ன் போடவும்.
50 சதவீதம் வெந்ததும் இறக்கி விடுங்கள். நன்றாக வேக வைக்க வேண்டாம். பின்னர் வேக வைத்த பேபிகார்ன் எடுத்து அதில் இஞ்சி பூண்டு விழுது,மஞ்சள் தூள்,கருப்பு மிளகு தூள்,உப்பு,அரிசி மாவு,சோள மாவு,கறிவேப்பிலை சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் மிக்ஸ் செய்து வைத்த பேபிகார்னை போட்டு பொறித்து எடுக்கவும். இப்போது சுவையான பேபிகார்ன் மிளகு வறுவல் ரெடி. இதனை வீட்டில் செய்து பாருங்கள். அருமையாக இருக்கும். செய்வதும் மிகவும் ஈஸி.
குழந்தைகளும் இந்த வருவலை விரும்பி சாப்பிடுவார்கள். சாப்பிடுவதற்கு மொறு மொறுவென்று சுவையாக இருக்கும். பேபி கான் என்றாலே குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். அதில் இந்த மாதிரி மிளகு வறுவல் செய்து கொடுத்தால் காரம் சாப்பிடாத குழந்தைகளும் காரம் சாப்பிட ஆரம்பிப்பார்கள். எனவே இந்த வருவலை நீங்கள் செய்து கொடுங்கள். பின்பு திரும்பத் திரும்ப கேட்பார்கள்.