
ஆடி அமாவாசையான இன்று இதை செய்யுங்கள்
காகத்திற்கு அமாவாசை தினத்தில் கட்டாயம் உணவு கொடுக்க வேண்டும். அது முன்னோர்கள் நேரடியாக வந்து உண்பதற்குச் சமம் எனச் சாஸ்திரம் கூறுகிறது.
ஆடி அமாவாசை முன்னோர்களுக்காக ஒதுக்கப்பட்ட நாள். இந்நாள் அவர்களுக்காகவே தர்ப்பணம் கொடுப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் முடிய முன்னோர்கள் பார்ப்பதற்காக உலகத்திற்கு வருகின்றனர் எனக் கூறப்படுகிறது. பித்ரு லோகத்தில் இருந்து முன்னோர்கள் புறப்படும் நாள் தான் ஆடி அமாவாசை. அவர்களை நாம் நினைவில் வைத்திருக்கிறோம் என்பதைத் தெரிவிப்பதற்காகவும் பூமியில் அவர்களுக்கு வரவேற்பு கொடுக்கப்படுகிறது. இதுவே ஆடி அமாவாசை தினத்தன்று கொடுக்கப்படும் தர்ப்பணம் ஆகும். இந்நாளில் செய்ய வேண்டியவை செய்யக்கூடாதவை என்ன என்பது குறித்து இங்கே காணலாம்.
ஆடி அமாவாசை அன்று செய்யக்கூடாதவை
வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தால் எப்படி சுத்தம் செய்து வைத்திருப்போமோ, அப்படி அமாவாசை தினத்தில் வீட்டைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அமாவாசை நாளில் தெரியாமல் கூட வாசலில் கோலம் போடக்கூடாது. அசைவப் பிரியர்களாக இருந்தாலும் சரி அமாவாசை தினத்தில் அசைவம் சமைக்கக் கூடாது.
ஆடி அமாவாசை அன்று செய்ய வேண்டியவை
காகத்திற்கு அமாவாசை தினத்தில் கட்டாயம் உணவு கொடுக்க வேண்டும். அது முன்னோர்கள் நேரடியாக வந்து உண்பதற்குச் சமம் எனச் சாஸ்திரம் கூறுகிறது.
எள் என்பது விஷ்ணு பகவானின் அம்சமாகக் கருதப்படுகிறது. இந்த எள்ளைத் தானமாகக் கொடுத்தால் வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து பாவங்களும் நீங்கிவிடும் எனக் கூறப்படுகிறது
குழந்தை பாக்கியம், ஆயுள் விருத்தி
இந்த ஆடி அமாவாசை திருநாளில் மற்றவர்களுக்கு உடைகளைத் தானமாகக் கொடுத்தால் பல்வேறு பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. ஆடைகளைத் தானமாகக் கொடுத்தால் குழந்தை பாக்கியம், ஆயுள் விருத்தி, கண்டாதி தோஷம் உள்ளிட்டவை விலகும் எனக் கூறப்படுகிறது.
அமாவாசை தினத்தில் பசுவைத் தானமாகக் கொடுத்தால் முன்னோர்களின் ஆசீர்வாதம் முழுமையாகக் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. ஈரேழு ஜென்மத்தில் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும் எனக் கூறப்படுகிறது.
அன்னதானம் அனைத்து கடவுள்களுக்கும் மிகவும் பிரியமான தானங்களில் ஒன்றாகும். சுத்தமான நெய்யை வைத்து மற்றவர்களுக்கு தானம் செய்தால் சகல வியாதிகளும் விலகும் எனக் கூறப்படுகிறது. உணவின்றி தவிக்கக் கூடிய ஏழை எளிய மக்களுக்குத் தேடிச்சென்று உணவைத் தானமாகக் கொடுத்தால் முன்னோர்களின் ஆசி முழுவதும் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.