
நடிகர் கமல்ஹாசன் (image source: x)
உலகமொழி திரையுலகின் கௌரவமாக கருதப்படுவது ஆஸ்கர் விருது. இந்திய திரை உலகில் நாயகன், குருதிப்புனல், தேவர் மகன் போன்ற கமல் ஹாசன் நடித்த தமிழ் திரைப்படங்கள் ஆஸ்கர் விருது பெறுவதற்கான போட்டியில் இந்தியாவில் இருந்து தேர்வு செய்து அனுப்பப்பட்டது.
பலமுறை ஆஸ்கர் விருதுக்காக கதவைத் தட்டியும் கிடைக்காத நிலையில் தற்போது நடிகரும் ராஜ்யசபா எம்.பி.யுமான கமல்ஹாசன் ஆஸ்கர் விருது தேர்வுக்குழுவில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசன் மற்றும் ஆயுஷ்மான் குரானா ஆகியோருக்கு, ஆஸ்கார் விருதுகளை வழங்கும் அகாடமியில் உறுப்பினராக சேர அழைப்பு வந்துள்ளது.
ஆஸ்கர் விருதுக்கான அகாடமியில் இடம் பெற்றுள்ள 534 பேர் பட்டியலில் இவர்கள் இருவரும் இடம்பெற்றுள்ளனர். இந்த அழைப்பு, ஆஸ்கார் விருது வழங்கும் அகாடமியின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பல்வேறு நாடுகளில் இருந்து திறமையானவர்களை இந்த அமைப்புக்குள் கொண்டு வருவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. கமல்ஹாசன், ஆயுஷ்மான் குரானா இருவரும், இந்திய சினிமாவின் முக்கிய பிரதிநிதிகளாக இந்த அமைப்புக்குள் இணைக்கப்பட்டுள்ளனர்.
ரசிகர்கள் மகிழ்ச்சி
இந்தியாவில் எத்தனையோ திரையுலக ஜாம்பவான்கள் இருக்கும் பொழுது கமலஹாசனுக்கு இந்த கௌரவம் கிடைத்திருப்பது தமிழர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு அமைச்சர் டிஆர்பி ராஜாவும் கமல்ஹாசனை வாழ்த்தியுள்ளார்.
Congratulations to the #OSCARs
— Dr. T R B Rajaa (@TRBRajaa) June 27, 2025
on receiving the #KamalHaasan𓃵 trophy. pic.twitter.com/MiD8cJWquY
மேலும் படிக்க | 5 நாளில் மாஸ் காட்டிய வசூல்.. 100 கோடி கிளப்பில் இணைந்த தனுஷின் குபேரா..
முன்னதாக, மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி ஹீரோவாக அறிமுகமாகிறார். இவர் பீனிக்ஸ் என்ற ஆக்ஷன் த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பீனிக்ஸ் படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஜூலை 4-ம் தேதி வெளியாகவுள்ளது. போர் 2 படம்… பீனிக்ஸ் படத்தை ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்குகிறார். இந்த படத்தின் மூலம் அனல் அரசு இயக்குனராக அறிமுகமாகிறார்.
தமிழ் மட்டுமல்லாமல், ஜவான், மகேஷ் பாபுவின் ஸ்ரீமந்துடு, என்.ஜி.ஆர் ஜெய் லவ குசா, ஜனதா கேரேஜ் உள்ளிட்ட பல தென்னிந்திய மற்றும் பாலிவுட் சூப்பர் ஹிட் படங்களுக்கு ஃபைட் மாஸ்டராக பணியாற்றியவர் அனல் அரசு. இவர் தற்போது ‘வார் 2’ படத்தில் ஆக் ஷன் நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார். ஆக்ஷன் மற்றும் எமோஷன்களின் கலவையாக பீனிக்ஸ் படம் இருக்கும் என்று கூறப்படுகிறது. சூர்யா சேதுபதிக்கு இது சரியான அறிமுக படமாக இருக்கும். புஷ்பா 2 புகழ்… புஷ்பா 2 படத்திற்கு இசையமைத்த சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார், பிரவீன் கே.எல் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.
சூர்யா சேதுபதி பீனிக்ஸ் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். கடந்த காலங்களில், சூர்யா சேதுபதி தனது தந்தை விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நானும் ரவுடி தான், சிந்த்பாட் போன்ற படங்களில் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார். பீனிக்ஸ் படத்தில் அபினக்ஷ்ட்ராவும், வர்ஷாவும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். வரலட்சுமி சரத்குமார், சம்பத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்.. ஃபீனிக்ஸ் திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் “இந்தா வாங்கிகோ” வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.