
EPS AIADMK
AIADMK: இந்து அறநிலையத்துறை கல்லூரி குறித்து இபிஎஸ்.,யின் பேச்சை தவறாக சித்தரித்தால், வழக்கு தொடரப்படும் என அதிமுக எம்.பி., இன்பதுரை எச்சரித்துள்ளார்.
AIADMK: ‘மக்களைக் காப்போம் தமிழகம் மீட்போம்’ புரட்சித்தமிழரின் எழுச்சிப் பயண பரப்புரையின் போது அதிமுக பொதுச்செயலாளர் பேசும் உரையை திரித்து வெளியிடுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாநிலச் செயலாளர் இன்பதுரை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற நுழைவாயில் அருகே செய்தியாளர்களை சந்தித்த இன்பதுரை பேசுகையில், ‘’அண்மையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி, பரப்புரையின் போது பேசிய சில கருத்துக்களை பிரித்து திரித்து வெளியிடப்படுகிறது. இப்படி உரையைத் திரித்து வெளியிடுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் நிமிர்ந்து நிற்பதாக ஸ்டாலின் சொன்ன மறுநாளே, நாங்குநேரி உள்ளிட்ட நான்கு சுங்கச்சாவடிகளில் உரிய கட்டணம் செலுத்தவில்லை என கூறி தமிழக அரசு பேருந்துகளை அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் படிக்க | Madurai: ‘வரி மோசடி.. பாஸ்வேர்டு மோசடி..’ மதுரை மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் பதவி பறிபோன பின்னணி!
தமிழகமே தலை குனிந்து நிற்கும் அவலம் உருவாகிவிட்டது. இது போன்ற நிலைகளை பார்க்குமபோது தமிழக அரசிடம் நிதி இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.
இதன் அடிப்படையிலே கல்லூரி கட்டுவதற்கு தமிழக அரசிடம் நிதி இல்லாத காரணத்தினால் தான், இந்து அறநிலையத்துறை நிதியை பயன்படுத்தி, தமிழக அரசு கல்லூரியை கட்டுகிறதா என்ற கேள்வியை இபிஎஸ் எழுப்பினார். ஆனால், இதனை திருத்தி சில ஊடகங்கள் பொய் செய்திகளை வெளியிட்டனர். இனி இது போன்ற செய்திகளை வெளியிடுபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றும் அந்த பேட்டியின் போது, இன்பதுரை எச்சரித்தார்.

சுற்றுப் பயணத்தில் விளக்கிய எடப்பாடி பழனிசாமி
AIADMK: ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயணத்தில் திண்டிவனத்தில் நேற்று பேசிய எடப்பாடி பழனிசாமி, தன் மீதான திமுகவின் விமர்சனத்திற்கு பதிலளித்தார். ‘‘நான் நம்பியவர்களை ஏமாற்றினேன் என்கிறார்கள். அதிமுக எம்.எல்.ஏக்கள் என்னைத் தேர்வு செய்தார்கள். சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கச் சொன்னார். வாக்கெடுப்பு நடத்தினோம். திமுக எம்.எல்.ஏக்கள் என் டேபிளில் ஏறி டான்ஸ் ஆடினார்கள். இப்படிப்பட்ட ரவுடி கட்சி தேவையா? அதன் பின் பெரும்பான்மை நிரூபணம் ஆகிவிட்டது. நம்முடைய எட்டப்பர்கள் சிலர் நம்மை எதிர்த்து, திமுகவோடு துணை நின்று எதிர்த்து ஓட்டுப்போட்டனர். அதையும் மீறி எம்ஜிஆர், அம்மா ஆசியுடன் தொடர்ந்து ஆட்சி இருந்தது.
மேலும் படிக்க | AIADMK: ‘எடப்பாடி போடும் கணக்கு.. எழுச்சி பயணத்தில் எழுச்சியா? வீழ்ச்சியா?’ முழுமையான அலசல்!
இதையெல்லாம் பொறுக்க முடியாமல் சட்டையைக் கிழித்து வெளியில் சென்றார். 2026ல் சட்டையும் வேட்டியும் இல்லாமல் கூட போனாலும் போவீர்கள், யார் கண்டது..?
பாஜகவிடமிருந்து கட்சியைக் காப்பாற்றணுமாம், அதிமுகவை எந்தக் கொம்பனாலும் உடைக்க முடியாது. சொந்தக் காலில், சொந்த உழைப்பில் கட்சி நடத்துகிறோம். நீங்கதான் கூட்டணியை நம்பிக்கொண்டு இருக்கீங்க. கூட்டணி இல்லையென்றால் திமுக இல்லை. கூட்டணி இல்லைனாலும் அதிமுக பலமான கட்சி. தேர்தலில் வாக்கு சிந்தாமல் இருப்பதற்கே கூட்டணி. கொள்கை என்பது வேறு, கூட்டணி வேறு.
காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக ஒரே கொள்கையா? வெவ்வேறு கொள்கைதானே? திமுகவுக்கு கூட்டணி கட்சியினர் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டனர். நாங்க அப்படியல்ல தேர்தல் வரைதான் கூட்டணி, தேர்தல் முடிந்து அவரவர் போய்விடுவோம்.
ஸ்டாலின் பேசுகிறார் காலையில் கண் விழித்துப் பார்க்கும்போது திமுகவினர் என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை என்கிறார். உங்க கட்சியை நீங்க காப்பாத்துங்க. நான் முதல்வரான போது என்னென்ன பேசுனீங்க, இபிஎஸ் 10 நாள்தான், ஒரு மாதம்தான் இந்த அரசு இருக்கும் என்றீர்கள். முழுமையாக ஆட்சி நடத்தினோம். உங்க ஆட்சியில் சிறுமி முதல் மூதாட்டி வரை பாதுகாப்பில்லை. மோசமான ஆட்சி. ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசு திமுக அரசுதான்.
கல்லூரி பேச்சுப் பற்றி இபிஎஸ் விளக்கம்
AIADMK: டாஸ்மாக் ஆயிரம் கோடி ஊழல் விரைவில் வெளிச்சத்துக்கு வரும். பாதி மந்திரிகள் அமலாக்கத்துறை வந்து கதவைத் தட்டும் என்று அச்சத்தில் உறைந்துள்ளனர். எங்க கட்சி நல்லாத்தான் இருக்குது. அதனால்தான் இவ்வளவு கூட்டம்.
ஸ்டாலின் வந்த விதம் வேறு, நான் வந்த விதம் வேறு. தொண்டராக இருந்து, தலைமைக்கு விசுவாசமாக இருந்து, ஒன்றியம், எம்.எல்.ஏ, அமைச்சர், முதல்வர் என்று உழைப்பால் உயர்ந்தேன். உங்க அப்பா போர்வையில் நீ முதல்வராகிட்ட, ஒரு தொண்டன் பொதுச் செயலாளராக வருகிறார் என்றால் எந்தளவுக்கு ஜனநாயகம் உள்ளது பாருங்கள்.
மேலும் படிக்க | Dr Ramadoss: காந்திமதியை மேடையில் ஏற்றியது ஏன்? அன்புமணிக்கு எங்கு ‘செக்’ வைக்கிறார் ராமதாஸ்?
துரைமுருகன் அதிக நாள் எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் அவர்தான். அவருக்கு துணை முதல்வர் தலைவர் பதவி கொடுத்தாரா? நீ எங்களைப் பற்றி பேசுவதற்கு தகுதி இருக்கா? மக்கள் சேவை செய்தால் உச்சபட்ச பதவிக்கு வர முடியும் உதாரணம் நான், ச
அறநிலையதுறை சார்பில் திறப்பதற்கு பதில், அரசின் சார்பில் திறங்க என்று சொன்னேன். அறநிலையத்துறை சார்பில் கல்லூரி என்றால் சுயநிதி கல்லூரி ஆகிவிடுகிறது, அரசு கல்லூரி என்றால் ஃபீஸ் குறைவு. கூட்டுறவு பாலிடெக்னிக் கல்லூரியை அரசு கல்லூரியாக்கினோம், பல்கலை உறுப்பு கல்லூரியை அரசு கல்லூரியாக்கினோம். இது என்னங்க தப்பு? அரசு சார்பில் கட்டினா என்ன? உங்க அப்பாவுக்கு பேனா கடலில் வைப்பதற்கு பணம் இருக்கு, அரசு கல்லூரிக்கு பணம் இல்லையா? உதயநிதி நடு டவுனில் கார் ரேஸ் 42 கோடி செலவு செய்து வீணாக்கினீங்களே, அதை வைத்து கல்லூரி கட்டலாமே. ஊதாரித்தனமாக செலவு செய்யும் அரசு திமுக அரசு,’’ என்று இபிஎஸ் பேசியிருந்தார்.