
அயலி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
அயலி சீரியலில் நேற்றைய எபிசோடில் அயலி வர்மாவை தேடி வந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பதை குறித்து பார்க்கலாம்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அயலி. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் அயலி வர்மாவை தேடி வந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பதை குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது கபிலன் ரித்திகா மற்றும் தங்கைகளுடன் பாருக்கு வருகிறான். அங்கே சரக்கு ஆர்டர் செய்துவிட்டு திரும்பிப் பார்க்க வர்மா நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறான். நீங்க ஆரம்பியுங்க வந்துடறேன் என்று சொல்லி அங்கு இருந்து நழுவும் கபிலன் மேலே சென்று வருமாவை பார்க்கிறான்.
கடுப்பாகும் கபிலன்
வர்மா உன்னால எனக்கு எவ்வளவு லாஸ் தெரியுமா என்று இந்திராணி குறித்து பேச கபிலன் கடுப்பாகிறான். பிறகு வர்மா ஒரு பாக்ஸை கொடுத்து அதை டெலிவரி செய்ய சொல்லி கட்டாயப்படுத்துகிறான். கபிலனும் அதை வேண்டா எதிர்பார்க்க வாங்கி கொண்டு கீழே வருகிறான். இதைத்தொடர்ந்து அயலி மற்றும் சிவா இருவரும் பம்புக்குள் நுழைய பின் தொடர்ந்து வந்த செல்லா புடவையில் இருந்ததால் உள்ளே விட மறுக்கின்றனர். டிக்கெட் விலை 15 ஆயிரம் ரூபாய் என்று சொல்ல செல்லா 350 ரூபாய் வேணா தரேன் என்று பேசி பல்பு வாங்குகிறாள்.
பாருக்குள் அயலி
மேலும் அயலி மாறுவேடத்தில் வந்து குடிக்க சென்று இருப்பதாக தவறாக புரிந்து கொள்கிறாள். உள்ளே ரித்திகாவை ஒருவன் கிண்டல் அடித்து பேச அவள் அவனை அடித்து விட பிறகு கபிலன் அங்கு வர கபிலனுக்கும் அந்த நபருக்கும் இடையே சண்டை உருவாகிறது. இதற்கு இடையில் வர்மா சிவா துப்பாக்கி மறைத்து வைத்திருப்பதை பார்த்துவிட்டு அங்கிருந்து தப்பிக்க முயல அயலி அவனை பார்த்து விடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து இன்றைய அயலி சீரியலில் பார்க்கலாம்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.