
துபாயில் திருடப்பட்ட ஏர்பாட்களை, பாகிஸ்தானில் மீட்ட யூடியூப்பர்!
Miles Routledge: துபாய் ஓட்டலில் திருடப்பட்ட AirPods, ஓராண்டிற்குப் பின் கிடைத்தது எப்படி? எப்படி இது சாத்தியமானது? கேட்டா, நீங்களே அசந்து போவீங்க!
Miles Routledge: பிரிட்டிஷ் யூடியூப்பர் மைல்ஸ் ரவுட்லெட்ஜ் என்பவர், துபாயில் திருடப்பட்ட தனது AirPods-ஐ கண்டுபிடித்து, அதை மீட்டெடுக்க பாகிஸ்தான் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த சம்பவம், உலகளவில் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்று, ஒரு வருட கால தேடலுக்கு இது முடிவு கட்டியுள்ளது. லார்ட் மைல்ஸ் என்று பிரபலமாக அறியப்படும் 24 வயதான இந்த யூடியூப்பர், ஒரு வருடம் முன்பு துபாயில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில், தன்னுடைய ஏர்பட்ஸ் சாதனத்தை பறிகொடுத்தார். இருப்பினும், தனது சாதனத்தை அவர் இழக்க விரும்புவில்லை. எப்படியாவது அதை தேடி கண்டுபிடிக்க வேண்டும் என்று தொடர்ந்து முயற்சித்தார்.
மேலும் படிக்க | 8,500 பேர் பலி.. பேரிடர்களால் 7 ஆண்டுகளில் பேரழிவை சந்தித்த ஜார்க்கண்ட்! அதிர்ச்சி அறிக்கை!
சமூக வலைதளத்தில் பகிர்ந்தது யூடியூப்பர்
சமீபத்தில் அவர் பாகிஸ்தானில் தனது AirPods இருப்பதை கண்டுபிடித்ததாக பகிர்ந்துள்ளார். “பாகிஸ்தான் ஜெலும் காவல் துறைத் தலைவர், ஆய்வாளர் பொது மேலாளர் மற்றும் லார்ட் மைல்ஸ் ஆகியோர் திருடப்பட்ட என்னுடைய AirPods குறித்து அறிவிப்பு வெளியிட்டனர். ஒரு வருடத்திற்குப் பிறகு எனது AirPods-ஐ மீண்டும் கிடைத்துள்ளது,” என்று அவர் தன்னுடைய X இல் பல பதிவுகளில் எழுதியுள்ளார். அவரது பதிவை இங்கே காண்க:
🚨🚨BREAKING NEWS 🚨🚨
— Lord Miles Official (@real_lord_miles) June 27, 2025
An announcement from the Pakistan Jhelum Police Chief, the Inspector General and Lord Miles regarding the STOLEN AirPods.
I have MY AirPods back after 1 year!
TLDR; it was unknowingly sold to a Pakistani man by an Indian national who’s now been arrested… pic.twitter.com/WR7fP9OYhp
கடந்த மே மாதம், அவர் ஆப்பிளின் ‘Find My’ என்ற வசதி பயன்பாட்டைப் பயன்படுத்தி, பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில், ஜெலும் நகரில் அந்த சாதனம் இருப்பதைக் கண்டுபிடித்ததாக பகிர்ந்துள்ளார். “அவை துபாயில் உள்ள எனது ஹோட்டலில் இருந்து திருடப்பட்டு பாகிஸ்தானுக்கு வந்தன. நான் ‘லாஸ்ட் மோட்’ ஐ இயக்கி, திருடியவர் AirPods-ஐப் பயன்படுத்தும் போது ‘ஃபைண்ட் மீ’ சத்தத்தை தொடர்ந்து ஒலிக்க விட்டேன். நான் ஒரு காவல் அதிகாரியுடன் சென்று அந்தப் பகுதியை சூழ்ந்து, எனது AirPods-ஐ மீட்டு, அதை படமாக்கப் போகிறேன். எனக்கு திருடர்கள் பிடிக்காது,” என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் படிக்க | Narayana Murthy: நாராயண மூர்த்தியின் 70 மணி நேர வேலை திட்டம்: அவரது நிறுவனமே நிராகரித்தது!
குழு அமைத்து உதவிய பாகிஸ்தான் போலீஸ்
அவரது பதிவு வைரலான பிறகு, பாகிஸ்தான் காவல்துறை விசாரணைக்கு ஒரு குழுவை நியமித்தது. துபாயில் இருந்து சமீபத்தில் திரும்பியவர்களை அவர்கள் சோதனை செய்தனர். AirPods-ஐ வைத்திருந்த ஒரு நபரை அவர்கள் கண்டுபிடித்தனர். ஆனால் அவர் துபாயில் ஒரு இந்தியரிடம் இருந்து வாங்கியதாகக் கூறினார். தனது AirPods கண்டுபிடிக்கப்பட்டதாக YouTuber-க்குத் தெரிவிக்கப்பட்ட பிறகு, அவற்றை மீட்டெடுக்க பாகிஸ்தான் வருவதாக அவர் காவல்துறைக்குத் தெரிவித்தார். “அவர்கள் ‘செகண்ட் வைஃப்’ உணவகத்தில் எனக்கு மதிய உணவை வழங்கினர். ஒவ்வொரு பாகிஸ்தான் செய்தி சேனலிலிருந்தும் 20 கேமராமேன்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் என்னை காண வந்தனர். இது தேசிய செய்தியாக மாறியுள்ளது, பாகிஸ்தானின் பாதி மக்களுக்கு இது தெரியும்! தெருவில் ஒரு பாகிஸ்தானியரிடம் கேட்டேன், அவர்களுக்கும் எனது திருடப்பட்ட AirPods பற்றித் தெரிந்திருந்தது. அந்நியர்கள் பலமுறை என்னை அடையாளம் கண்டுள்ளனர்!” என்று அவர் பதிவிட்டுள்ளார்.