
தேஜஸ் விமானம் (image source: x - id : @Ray70409890 )
இந்திய விமானப்படையில் மார்ச் 2026க்குள் குறைந்தது 6 தேஜஸ் இலகுரக போர் விமானங்கள் சேர்க்கப்பட உள்ளன.
பெங்களூரில் இயங்கி வரும் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துடன் கடந்த
பிப்ரவரி 2021 இல் இந்திய விமானப்படை 83 தேஜஸ் Mk-1A இலகுரக ஜெட் விமானங்களை உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த இலகு ரக விமானத்துக்கு தேவையான இயந்திரங்களை அமெரிக்காவில் இயங்கி வரும் ஜி.இ. ஏரோஸ்பேஸ் நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்வதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக இந்த விமானங்களை தயாரிப்பதில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில் அந்த நிறுவனத்திலிருந்து 6 தேஜஸ் விமானங்களை தயாரிப்பதற்கு தேவையான இயந்திரங்களை கொள்முதல் செய்து வரும் மார்ச் 2026க்குள் இந்திய விமானப்படைக்கு 6 தேஜஸ் இலகு ரக விமானங்களை வழங்கிட ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் உறுதிபூண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்ட எம்.கே.2 இலகு ரக விமானத்தை உற்பத்தி செய்யும் முயற்சியிலும் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
விரைவில் தேஜஸ் Mk2 ரக விமானத்தை இயக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முழுக்க முழுக்க இந்திய விமானப்படையின் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் தேஜஸ் விமானங்கள் இந்தியாவின் “மேக் இன் இந்தியா” முயற்சியின் ஒரு முக்கிய பகுதியாகும், இது உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தியை ஊக்குவிக்கிறது.
இதையும் படிங்க | ITR: வரி அறிக்கையை தாக்கல் செய்யப் போறீங்களா? படிவம் 16 மற்றும் படிவம் 26AS இல் பொருந்தாதை அறிய.. சரிசெய்ய.. தகவல் இதோ!
கூட்டு விமானம்:
ஏரோ இந்தியா 2025 இல் நடந்த ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வில், இந்திய விமானப்படை மற்றும் ராணுவத் தலைவர்கள் ஒரு தேஜஸ் பயிற்சி விமானத்தில் ஒன்றாகப் பறந்தனர், இது ஆயுதப்படைகளின் கூட்டுத்தன்மை மற்றும் விமானத்தின் திறன்களை எடுத்துக்காட்டுகிறது. தேஜாஸ் Mk-1A இஸ்ரேலிய AESA ரேடார் மற்றும் மேம்பட்ட மின்னணு போர் அமைப்புகள் போன்ற மேம்படுத்தல்களைக் கொண்டுள்ளது.