
கண்ணப்பாவை பற்றி எதுவும் தெரியாது!- இயக்குநர் ஷாக்
கண்ணப்பா படம் எடுக்கும் முன் அந்த சிவபக்தர் பற்றிய எந்தத் தகவலும் எனக்கு தெரியாது. இந்தப் படத்திற்காக நிறைய ஆராய்ச்சிகள் எல்லாம் செய்தேன் என கண்ணப்பா பட இயக்குநர் முகேஷ் சிங் கூறியுள்ளார்.
மஞ்சு விஷ்ணு நடித்து, தயாரிக்கும் கண்ணப்பா திரைப்படம் இந்த வாரம் வெள்ளிக்கிழமை (ஜூன் 27) திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் பிரமோஷன் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது படக்குழு. இந்த நிலையில், இயக்குநர் முகேஷ் குமார் சிங் ஒரு சமீபத்திய நேர்காணலில், தனக்கு முதலில் கண்ணப்பா பற்றி எதுவும் தெரியாது என்று கூறியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கண்ணப்பா பற்றி எதுவும் தெரியாது
கண்ணப்பா படத்தின் இயக்குநரான முகேஷ், தனக்கு முன்பு அந்த சிவபக்தர் பற்றி எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார். இதுபற்றி பேசிய அவர், “இல்லை, எனக்கு கண்ணப்பா பற்றி ஒண்ணுமே தெரியாது. நான் ஆந்திராவில் ஒரு ஆன்மீக பயணம் செய்து, அதிக தகவல்களை சேகரித்து விஷ்ணுவிடம் திரும்பினேன். அவர் என்னை மிகவும் ஈர்த்தார். அப்படித்தான் இந்த திட்டம் முடிவு செய்யப்பட்டது. நான் இயக்குநராக உறுதி செய்யப்பட்டேன்.” என்று முகேஷ் கூறியுள்ளார்.
கண்ணப்பாவிற்காக ஆராய்ச்சி…
அவர் கண்ணப்பா பற்றி தெரிந்து கொள்ள அதிக ஆராய்ச்சி செய்ததாகவும் கூறியுள்ளார். “நான் திருப்பதி, ஸ்ரீகாலஹஸ்தி ஆகிய இடங்களில் உள்ள பல கோவில்களை பல முறை பார்வையிட்டேன். பல பூசாரிகளுடன் பேசி, கண்ணப்பா யார், அவரது வரலாறு என்ன என்பதை புரிந்து கொண்டேன். விஷ்ணு கதை எழுதினார். அவருக்கு ஏற்கனவே பல தகவல்கள் இருந்தன, அது படத்தை இயக்க எனக்கு உதவியது.” என்று முகேஷ் தெரிவித்துள்ளார்.
நட்சத்திர பட்டாளம்
முகேஷ் குமார் சிங் முன்னர் மகாபாரத தொடரை இயக்கியுள்ளார். அதைப் பார்த்த மஞ்சு விஷ்ணு, மோகன் பாபு அவர்களுக்கு இந்தப் படத்தை இயக்க வாய்ப்பு கொடுத்ததாக முகேஷ் கூறியுள்ளார். கண்ணப்பா படத்தில் மஞ்சு விஷ்ணுவுடன் சேர்த்து பிரபாஸ், மோகன்லால், மோகன் பாபு போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அவர்களை இயக்குவது பற்றி முகேஷ் தனது விளக்கத்தை அளித்துள்ளார். உண்மையில் பெரிய நட்சத்திரங்களை இயக்குவது எளிது என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.
கையாள்வது எளிது
“அவர்கள் முழுமையாக தொழில்முறை நபர்கள். தெளிவான சிந்தனையுடன் வந்தார்கள். தேவையானதை செய்தார்கள். இந்த பெரிய நட்சத்திரங்களை கையாள்வது தொலைக்காட்சி நட்சத்திரங்களை கையாள்வதை விட எளிது என்று சொல்ல முடியும். மோகன் பாபு எனக்கு முழு ஆதரவு அளித்தார். பிரபாஸ் மிக நல்ல மனிதர். இந்த பெரிய நட்சத்திரங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அவர்களின் விருந்தினர் வேடங்கள் அவர்களின் அபிமானிகளை மிகவும் ஈர்க்கும்.” என்று முகேஷ் கூறியுள்ளார்.
விஎஃப்எக்ஸ் பணிகள்
கண்ணப்பா படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்டது. ஆனால், தாமதம் காரணமாக விஎஃப்எக்ஸ் பணிகள் ஒத்திவைக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இப்படம் ஜூன் 27-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு மட்டுமின்றி இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
கண்ணப்பா கதாப்பாத்திரங்கள்
இப்படத்தை முகேஷ் குமார் சிங் இயக்குகிறார். கண்ணப்பா படத்தில் பிரபாஸும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார். ருத்ரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். பிரபாஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகிவிட்டது. மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிவபெருமானாக பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரும், பார்வதி தேவியாக காஜல் அகர்வாலும் நடித்துள்ளனர். மஞ்சு மோகன் பாபு, சரத்குமார் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முகேஷ் ரிஷி, மது, ரகுபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
100 கோடி பட்ஜெட்
கண்ணப்பா படத்திற்கு ஸ்டீவன் தேவசி இசையமைக்கிறார். இப்படத்தை 24 பிரேம்ஸ் ஃபேக்டரி மற்றும் ஏவிஏ என்டர்டெயின்மென்ட் சார்பில் மஞ்சு மோகன் பாபு தயாரிக்கிறார். இப்படத்தின் பட்ஜெட் ரூ.100 கோடிக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கண்ணப்பா படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு நியூசிலாந்தில் நடந்தது. இந்த படத்தில் காட்சிகள் அற்புதமாக இருக்கும் என்று மஞ்சு விஷ்ணு சில காலமாக கூறி வருகிறார்.