
இந்தியாவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியை அறிவித்தது இங்கிலாந்து. அச்சுறத்தும் பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர், 4 ஆண்டுகளுக்குப் பிறகு அணிக்கு திரும்பியுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் திரும்பியுள்ளார். இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டிக்கான அணியில் அவருக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஜோப்ரா ஆர்ச்சர் மீண்டும் இணைந்துள்ளார்.
முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்த நிலையில், இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் ஜூலை 2-ம் தேதி தொடங்குகிறது. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, தனது முதல் சிவப்பு பந்து போட்டியை இந்த வார தொடக்கத்தில் ஆர்ச்சர் விளையாடினார். செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் டர்ஹாமுக்கு எதிரான நான்கு நாள் போட்டியில் அவர் சசெக்ஸ் அணிக்காக இறங்கினார். அதில் அவருடைய சிறந்த செயல்திறவை நிரூபித்தார். அதில் 31 ரன்கள் எடுத்த ஆர்ச்சர், 18 ஓவர்களில் 32 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
இந்தியாவுக்கு எதிரான ஆண்டர்சன்-டெண்டுல்கர் தொடரின் முதல் டெஸ்டில், ஆர்ச்சர் மற்றும் மார்க் வுட் இல்லாமல் இங்கிலாந்தின் பந்துவீச்சு தாக்குதல், பலவீனமாக இருந்தது. ஐபிஎல் 2025 இல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய ஆர்ச்சர், காயம் காரணமாக நான்கு ஆண்டுகளாக முதல் தர கிரிக்கெட்டில் விளையாடவில்லை. ஆர்ச்சர் 2021 முதல் இங்கிலாந்துக்காக வெள்ளை பந்து வடிவத்தில் மட்டுமே விளையாடி வருகிறார். இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இந்த மாத தொடக்கத்தில் ஆர்ச்சர் சிவப்பு பந்து கிரிக்கெட்டுக்கு திரும்ப விரும்புவதாக கூறியிருந்தார். இந்நிலையில் தான், இரண்டாவது அணியில் அவர் இடம் பெற்றுள்ளார்.
இந்தியாவும் இங்கிலாந்தும் தங்கள் புதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியை ஜூன் 20 அன்று லீட்ஸில் தொடங்கின. இருப்பினும், முதல் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது. இந்த போட்டியில் மொத்தம் 7 சதங்கள் இருந்தன, அதில் ஐந்து சதங்கள் இந்திய பேட்ஸ்மேன்கள் அடித்தவை. இங்கிலாந்து டெஸ்ட் அணி: பென் ஸ்டோக்ஸ், சோயிப் பஷீர், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், சாம் குக், ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், ஒல்லி போப், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஜோஷ் நாங், கிறிஸ் வோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர்.