
கெட்டிமேளம் இன்றைய எபிசோட் அப்டேட்
கெட்டிமேளம் இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் துளசி ஆட்டோவில் ஸ்டேஷனுக்கு வந்த நிலையில் இன்று நடக்கபோவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
தமிழ் சின்னத்திரையில் ஜி தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒருமணி நேர மெகாத்தொடர் கெட்டிமேளம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் துளசி ஆட்டோவில் ஸ்டேஷனுக்கு வந்த நிலையில் இன்று நடக்கபோவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
சந்தோஷத்தில் வெற்றி
அதாவது வெற்றிக்கு ஆதரவாக பேசி அவனை வெளியே எடுக்கிறாள் துளசி, பிறகு வெற்றியை கைத்தாங்கலாக ஆட்டோவில் ஏற்றி வீட்டிற்கு அழைத்து வருகிறாள். வெற்றியின் வீட்டில் எல்லாரும் இவர்களை கண்டு கொள்ளாமல் இருக்கே வெற்றியே வீட்டிற்குள் சென்று ஆரத்தி கரைத்து எடுத்து வந்து துளசி மற்றும் தியாவை ஆரத்தி எடுத்து அழைத்து செல்கிறான்.
வெற்றியின் அம்மா நீயே பிள்ளை இல்லனு தலை மூழ்கிட்டேன், இவ யாருடா இந்த வீட்டிற்குள் வர என்று ஆவேசப்படுகிறாள். அடுத்து ஈஸ்வரமூர்த்தி உனக்கு நம்பிக்கை துரோகம் பண்ணினவை நம்பி இந்த வீட்டிற்கு வந்து இருக்கியே மா என்று கேட்கிறார். துளசி அவர் தப்பு பண்ணிட்டாரு தான்.. அதுக்காக அவர் கட்டின தாலி இல்லனு ஆகிடுமா என்று கேட்கிறாள். வெற்றி நடப்பதையெல்லாம் பார்த்து சந்தோஷப்படுகிறான். தியாவை ரூமுக்கு அழைத்து சென்று ஹெட் செட்டில் பாட்டு போட்டு விடுகிறான்.
வெற்றியை விளாசும் துளசி
இதையடுத்து உள்ளே வந்த துளசி என் அம்மா அப்பாவுக்காக தான் இந்த வீட்டிற்கு வந்தேன்.வெளியுலகத்துக்கு தான் நாம புருஷன் பொண்டாட்டி.. இந்த ரூமில் நீ யாரோ நான் யாரோ என்று ஆவேசப்படுகிறாள். வெற்றி துளசி திட்ட திட்ட தியாவுக்கு எதுவும் தெரிய கூடாது என்பதால் சிரித்தபடி மேனேஜ் செய்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து இன்றைய கெட்டிமேளம் சீரியலை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.