
7,000 அடிகள் நடப்பது கூட புற்றுநோய் அபாயத்தைக் கணிசமாகக் குறைக்குமாம்
புற்றுநோயைத் தடுப்பதில் தினமும் நடக்கும் அடிகளின் எண்ணிக்கை மிக முக்கியமானது என ஆக்ஸ்போர்டு ஆய்வு தெளிவுபடுத்தியுள்ளது.
இன்றைய மாறி வரும் பணி சூழல், உணவு பழக்கங்கள் போன்றவை காரணமாக பலரும் பல வித நோய்கள் இளம் வயதிலேயே தொற்றும் அபாயம் உள்ளது. ஆனால் நம் வாழ்வில் முறையான உடற்பயிற்சி உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்வது பல நோய் வராமல் தடுக்க உதவும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் நமது அன்றாட நடைபயிற்சி மற்றும் வீட்டு வேலை போன்ற லேசான செயல்பாடுகள் கூட புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும் என்று ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.
புற்றுநோயைத் தடுப்பதில் உடற்பயிற்சியின் தீவிரத்தை விட நாம் ஒவ்வொரு நாளும் நடக்கும் அடிகளின் எண்ணிக்கை மிக முக்கியமானது என்பதை ஆக்ஸ்போர்டு ஆய்வு தெளிவுபடுத்தியுள்ளது. புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க கடுமையான பயிற்சிகளைச் செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும், எளிமையான தினசரி அசைவுகள் கூட மிகவும் நன்மை பயக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட ஒரு புதிய ஆய்வின்படி, வழக்கமான நடைபயிற்சி அல்லது வீட்டு வேலை செய்வது போன்ற லேசான செயல்பாடுகள் கூட புற்றுநோயைப் பெறுவதற்கான வாய்ப்புகளை கணிசமாகக் குறைக்கும். வேகத்தைப் பொருட்படுத்தாமல், இங்கு முக்கியமானது ஒவ்வொரு நாளும் எடுக்கப்படும்.
மேலும் படிக்க | 30 நாட்களுக்கு சர்க்கரையை நிறுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா! – இரைப்பை குடல் மருத்துவர் விளக்கம் இதோ
அடிகளின் எண்ணிக்கை வேகத்தை விட தினசரி அடிகள் முக்கியம்!
ஆக்ஸ்போர்ட் சென்டர் ஃபார் எர்லி கேன்சர் டிடெக்ஷன் நடத்திய ஆய்வு ஒன்றில் கேன்சர் தடுப்புக்கு நாம் நடக்கும் அடிகளின் எண்ணிக்கைக்கு, அவற்றின் வேகம் அல்லது தீவிரத்தை விட அதிக தொடர்பு இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். உதாரணமாக, ஒரு நாளைக்கு 7000 அடிகள் நடப்பவர்களுக்கு, 5000 அடிகள் நடப்பவர்களை ஒப்பிடும்போது கேன்சர் அபாயம் 11% குறைவாக உள்ளது. 9000 அடிகள் நடப்பவர்களுக்கு இந்த அபாயம் 16% வரை குறைந்துள்ளது. “எங்கள் ஆராய்ச்சி அனைத்து வகையான இயக்கங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது” என ஆய்வின் முதன்மை ஆசிரியர், ஆக்ஸ்போர்ட் பாப்புலேஷன் ஹெல்த் பயோமெடிக்கல் இன்ஃபர்மேடிக்ஸ் பேராசிரியர் ஐடன் டோஹெர்டி கூறினார்.
மேலும் படிக்க | கோவிட் தடுப்பூசியால் திடீர் மரணங்கள்? அரசு மேற்கோள் காட்டிய மருத்துவ ஆதாரங்கள் என்ன சொல்கின்றன
“தினசரி அடிகளை அதிகரிப்பது, எளிய செயல்களைச் செய்வது அல்லது மிதமான முதல் தீவிரமான உடற்பயிற்சிகள் செய்வது – எந்த அளவிலான உடல் உழைப்பும் கேன்சர் அபாயத்தை குறைக்க உதவும்.” என விளக்கினார்.
எளிய செயல்கள் கேன்சர் அபாயத்தை குறைக்குமா?
இந்த ஆராய்ச்சி ஏற்கனவே உள்ள உடற்பயிற்சி வழிகாட்டுதல்களுக்கு ஆதரவளிக்க உதவுகிறது. மேலும் அவற்றை விரிவுபடுத்துகிறது. வழக்கமாக உடற்பயிற்சி செய்யாதவர்களும் கூட இதன் மூலம் பயன் பெறலாம் என இது குறிப்பிடுகிறது. ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, ஒரு நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பது, அதாவது அதிகம் நடப்பது, வீட்டில் சுற்றித் திரிப்பது அல்லது வேலைகள் செய்வது போன்றவை கூட கேன்சருக்கு எதிராக பாதுகாப்பை அளிக்கின்றன. இந்த ஆய்வுக்கு U.S. நேஷனல் இன்ஸ்டிடியூட்ஸ் ஆஃப் ஹெல்த் (NIH), நேஷனல் கேன்சர் இன்ஸ்டிடியூட் நிபுணர்களும் உதவி செய்தனர். NIH இன் இன்ட்ராமுரல் ரிசர்ச் புரோகிராம், ஆக்ஸ்போர்ட்-கேம்பிரிட்ஜ் ஸ்காலர்ஸ் புரோகிராம் மூலம் இந்த ஆராய்ச்சிக்கு நிதி வழங்கப்பட்டது. எனவே, நீங்கள் ஜிம் செல்வதை நிறுத்தினாலும், வீட்டைச் சுற்றி நடப்பது அல்லது வீட்டைச் சுத்தம் செய்வது போன்றவை கூட உங்கள் நீண்டகால ஆரோக்கியத்திற்கு உதவும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.