
’சட்டி சுட்டதடா கை விட்டதடா’ பாடல் பிறந்த கதை!
ஆலயமணி படத்தில் இடம்பெற்ற சட்டி சுட்டதடா கை விட்டதடா பாடல் உருவான கதை குறித்து இதில் காண்போம். கண்ணதாசன் வார்த்தைகளால் விளையாடியிருப்பார்.
1962 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஆலயமணி. பி. எஸ். வீரப்பா தயாரித்த இப்படத்தை கே. சங்கர் இயக்கினார். இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன், பி. சரோஜாதேவி, சி. ஆர். விஜயகுமாரி மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் 23 நவம்பர் 1962 இல் வெளியிடப்பட்டு, திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடியது.
சட்டி சுட்டதடா கை விட்டதடா பாடல்
திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றனர். இன்று வரை பலரது பிளே லிஸ்டில் இந்த திரைப்படத்தின் பாடல்கள் இருந்து வருகின்றது என கூறினால் அது மிகையாகாது. கண்ணதாசன் வார்த்தைகளால் விளையாடியிருப்பார். இந்த திரைப்படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் எதார்த்தமாக நடித்திருப்பார்கள். சிவாஜி கணேசனை பற்றி சொல்லி தெரிய வேண்டியது இல்லை. கதாபாத்திரத்தை நகல் எடுத்தது போல் நடித்திருப்பார். அப்படி இப்படத்தில் இடம்பெற்ற சட்டி சுட்டதடா கை விட்டதடா பாடல் உருவான கதை குறித்து இதில் காண்போம்.
அப்படி இப்படத்தில் இடம்பெற்ற, ”சட்டி சுட்டதடா கை விட்டதடா
சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
நாலும் நடந்து முடிந்த பின்னே நல்லது கெட்டது தெரிந்ததடா
பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா
மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா
ஆட்டி வைத்த மிருகமின்று அடங்கிவிட்டதடா
ஆட்டி வைத்த மிருகமின்று அடங்கிவிட்டதடா
அமைதி தெய்வம் முழு மனதில் கோயில் கொண்டதடா” இந்த பாடல் எழுத கண்ணதாசன் திணறினாராம். இப்பாடலை கண்ணதாசன் எப்படி எழுதினார் என்பது குறித்து இதில் பார்க்கலாம்.
இயக்குனர் சொன்ன வார்த்தை
இந்த திரைப்படத்திற்கு கண்ணதாசன் தான் அனைத்து பாடல்களையும் எழுதி உள்ளார். ஆனால் ஒரு பாடல் மட்டும் எழுதாமல் அதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொண்டார். அனைத்து பாடல்களையும் விரைவாக எழுதி முடித்த கண்ணதாசன் இந்த பாடலை எழுதாமல் நீண்ட நேரம் நீண்ட நாட்கள் எடுத்துக் கொண்டதால் கண்ணதாசனை நேரில் சந்தித்த இப்படத்தின் இயக்குனர் சங்கர் என்ன கவிஞரே மற்ற பாடல்களை மாதிரி சட்டி சுட்டதடா கை விட்டதடா அப்படின்ற மாதிரி பாடலை சீக்கிரம் எழுதிக் கொடுத்தீர்கள். அதே மாதிரி இப்பாடலையும் எழுதி கொடுக்க வேண்டியது தானே. இதில் ஏன் தாமதம் எனக் கேட்டுள்ளார்.
அவர் சொன்னதை நன்கு கவனித்த கண்ணதாசன் இயக்குனர் சொன்னதையே பாடல் வரியாக மாற்றி விட்டார். இந்த பாடல் இப்படி தான் உருவானது. இப்படி கண்ணதாசன் ஒருவர் சொன்ன வார்த்தை ஒன்றை பிடித்து கொண்டு அற்புதமான பாடலை நமக்கு கொடுத்து இருக்கிறார்.இப்பாடலை டி. எம். சௌந்தரராஜன் தனது அற்புதகுரலால் பாடி அசத்தி இருப்பார்.