Coffee: ஆடுகள் கண்டுபிடித்த காபி.. இந்த வரலாறு தெரிந்தால் ஆச்சரியம் தான்! நாம் தினமும் ரசித்து குடிக்கும் காபியை கண்டுபிடித்தது ஆடுகள் என்றால் நம்ப முடிகிறதா? ஆம், சுவாரஸ்யமான அந்த பின்னணியை நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்.
Coffee: ஆடுகள் கண்டுபிடித்த காபி.. இந்த வரலாறு தெரிந்தால் ஆச்சரியம் தான்! உலகளாவிய உற்சாக பானமான காபியின் வரலாற்றை கூறுவது தான் இந்த செய்தி தொகுப்பின் நோக்கம்Coffee: கால்டி என்கிற ஆடிமேய்க்கும் தொழிலாளி, தன்னுடைய ஆடுகள் வழக்கத்திற்கு மாறாக உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பதை கவனித்தார். அதை நோட்டமிடவும் செய்தார்.Coffee: ஒருநாள் ஆடுகளின் அன்றாட பணிகளை அவர் கூர்ந்து கவனித்தார். அப்போது, ஆடுகள் ஒரு தாவரத்தின் பழங்களை உண்பதையும், அதன் பின் ஆடுகள் உற்சாகம் ஆவதையும் அவர் கவனித்தார்.Coffee: அதன் பின், அந்த தாவரத்தின் பழங்களை சேகரித்த அந்த ஆடு மேய்ப்பவர், அதன் கொட்டைகளிலிருந்து பானம் தயாரித்தார். அதன் பின், அது ஒரு தூக்கம் போக்கி சுறுசுறுப்பு தரும் பானமாக மாறியதுCoffee: இரவில் பணியாற்றும் துறவிகளுக்கு, அந்த பானத்தை வழங்கத் தொடங்கினர். பின்னர் அது அரபு நாடுகளுக்கும் பரவத் தொடங்கியது. 17 ம் நூற்றாண்டில் ஐரோப்பியாவை அடைந்த காபி, முதலில் ‘சாத்தானின் பானம்’ என்று பார்க்கப்பட்டது.Coffee: பாபா புத்தான் என்று சூஃபி துறவி தான், முதன் முதலாக இந்தியாவிற்கு காபியை கொண்டு வந்தார். ஏமனில் இருந்து கடத்தி வரப்பட்ட காபி விதைகளை, முதன் முறையாக கர்நாடக மாநிலம் சிக்கமகளூரில் அவர் பயிரிட்டார்.Coffee: காபி இன்று தவிர்க்க முடியாத காலை மற்றும் மாலை பானமாக மாறிவிட்டது. இன்ஸ்டண்ட், பில்டர், எஸ்பிரஸோ, லாட்டே என பல வகைகளில் காபி உலகம் முழுவதும் பரவலாகிவிட்டது.