
டெஸ்டில் ஸ்டாப் க்ளாக் நடைமுறையை அறிமுகம் செய்த ஐசிசி
மெதுவான ஓவர் ரேட்டை சமாளிக்க, 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்றிலிருந்து ஐசிசி டெஸ்ட் போட்டிகளில் ஸ்டாப் கிளாக்கை அறிமுகப்படுத்தியுள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில், ஐசிசி.,யை புதிய நடைமுறையை அமல்படுத்தியுள்ளது. வெள்ளை பந்து கிரிக்கெட்டில் ஸ்டாப் கிளாக்கை அறிமுகப்படுத்திய ஓராண்டிற்கு பின், தாமதமான ஓவர் ரேட் பிரச்சினையைத் தீர்க்கும் நோக்கில், ஐசிசி, டெஸ்ட் போட்டிகளுக்கும் இந்த நடவடிக்கையை நீட்டித்துள்ளது. 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்றுடன் இந்த விதி ஏற்கனவே அமலுக்கு வந்துள்ளது. இது ஜூன் 17 அன்று தொடங்கிய இலங்கைக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டித் தொடருடன் தொடங்கியுள்ளது.
மேலும் படிக்க | புதிய அணியை அறிவித்தது இங்கிலாந்து.. மீண்டும் வரும் ஆர்ச்சர்.. சூடுபிடிக்கும் 2வது டெஸ்ட்!
‘ஸ்டாப் கிளாக்’ முறை என்றால் என்ன?
இந்த முறையில், மூன்றாவது நடுவரால் இயக்கப்படும் ஒரு மின்னணு கடிகாரம் பயன்படுத்தப்படுகிறது. அந்த கடிகாரம், ஓவர் இடையே 0 முதல் 60 வினாடிகள் வரை கணக்கிடும். அடுத்த ஓவரை வீச, அந்த நேர வரம்பிற்குள் பீல்டிங் அணி தயாராக இருக்க வேண்டும். அவர்கள் அதை தவறினால், முதலில் இரண்டு எச்சரிக்கைகள் வழங்கப்படும். மூன்றாவது முறையாக, பந்து வீச்சாளர்களுக்கு ஐந்து ரன் அபராதம் விதிக்கப்படும். லிமிடெட் ஓவர் போட்டிகளில் ஸ்டாப் கிளாக்கைப் பயன்படுத்துவதால் நல்ல பலன்கள் கிடைத்ததைத் தொடர்ந்து, டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஐசிசியின் தலைமை நிர்வாக அதிகாரிகள் குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்ட முடிவுகளின் படி, ஸ்டாப் கிளாக்குகள் ஒவ்வொரு ஒருநாள் போட்டியிலும் சுமார் 20 நிமிடங்களை மிச்சப்படுத்தியது தெரியவந்தது. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்ட இந்த முறை, 2024 ஆண்கள் டி20 உலகக் கோப்பை போட்டியின் விளையாட்டு விதிகளிலும் இடம்பெற்றுள்ளது. இதன் வெற்றியைத் தொடர்ந்து, ஐசிசி டெஸ்ட் போட்டிகளிலும் கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளது. ஸ்டாப் கிளாக்கோடு கூடுதலாக, ஐசிசி பல புதிய விதி மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | கவாஜா எதிர்ப்பு.. ஆஸ்திரேலிய வானொலியில் பேட்டி கொடுக்க மறுத்தது ஏன்?
மேலும் புதிய நடைமுறைகள்
முடிவு மறுஆய்வு அமைப்பு எனப்படும் டிஆர்எஸ் நடைமுறைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன, மேலும் டெஸ்ட் போட்டிகளில் ஓவர் ரேட் அபராதங்கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன. மற்றொரு முக்கிய மாற்றமாக, பந்து மீது உமிழ்நீர் இருந்தால், நடுவர்கள் உடனடியாக பந்தை மாற்ற வேண்டிய அவசியமில்லை. பந்தின் நிலை மிகவும் மோசமாக மாறியிருந்தால் மட்டுமே அதாவது, அதிக ஈரப்பதமாகவோ அல்லது பளபளப்பாகவோ இருந்தால் மட்டுமே பந்தை மாற்றுவார்கள். மேலும், புதிய விதியில், ஒரு புதிய அபராதமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நன்மை அடைய வேண்டுமென்ற நோக்கில் ஒரு பேட்ஸ்மேன் வேண்டுமென்றே ஷார்ட் ரன்களை எடுத்தால், எந்த பேட்ஸ்மேன் ஸ்ட்ரைக் செய்ய வேண்டும் என்று பீல்டிங் அணிக்கு நடுவர்கள் கேட்பார்கள். கூடுதலாக, பேட்டிங் அணிக்கு ஐந்து ரன்கள் கழிக்கப்படும் என்று அந்த புதிய விதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.