
குற்றம் குறித்த தாக்குதலை சித்தரிக்கும் கோப்பு புகைப்படம்
Crime: ஒடிசாவில், தன் முன்னாள் மனைவி மற்றும் அவளது காதலன் மீது கொடுமையான தாக்குதலை நடத்திய மாஜி கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.
Crime: ஒடிசாவில் இருந்து அதிர்ச்சியூட்டும் ஒரு சம்பவம் வெளிவந்துள்ளது. தனது முன்னாள் மனைவி மற்றும் அவரது காதலன் மீது ஒரு நபர் கொடூரமான தாக்குதல் நடத்தியுள்ளார். தற்போது, போலீசார் அந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். மேலும் வழக்கு பதிவு செய்து, சம்மந்தப்பட்ட குற்றவாளியை தேடி வருகின்றனர். அந்த பெண்மணியின் கழுத்து அறுக்கப்பட்டுள்ளது, மேலும் அவரது காதலனின் பிறப்புறுப்பு வெட்டப்பட்டுள்ளது. ஏன் நடந்தது இந்த சம்பவம்?
மேலும் படிக்க | Madurai: ‘வரி மோசடி.. பாஸ்வேர்டு மோசடி..’ மதுரை மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் பதவி பறிபோன பின்னணி!
இந்த சம்பவம் ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டம், மாலாஹாத் கிராமத்தில் நிகழ்ந்துள்ளது. போலீஸ் தகவலின்படி, குற்றவாளியின் பெயர் மனோஜ் குமார் மொஹந்தி என அடையாளம் காணப்பட்டுள்ளது. ஜரதா கிராமத்தைச் சேர்ந்த மனோஜ், தனது முன்னாள் மனைவி மற்றும் அவரது காதலன் பிரசாந்த் நாத் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் இருவருக்கும் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன. போலீசார் கூறுகையில், பெண்மணியின் கழுத்து அறுக்கப்பட்டுள்ளது. அத்தோடு நிற்காமல், அவரது காதலனின் பிறப்புறுப்பில் கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால், அவருடைய பிறப்பு உறுப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தின் பின்னணி என்ன தெரியுமா?
Crime: ஒரு வருடத்திற்கு முன்பு, கணவனின் கொடுமையால் வீட்டை விட்டு வெளியேறி மனைவி, பிரசாந்த் என்பவருடன் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்ததாக அந்த பெண்மணி கூறியுள்ளார். இதனால் அவரது முன்னாள் கணவன் குடும்பத்தினருடன் , அவளுக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. கணவன் அடிக்கடி அடித்ததால் வீட்டை விட்டு ஓடி வந்ததாகவும், சமரசம் பேசுவதாக கூறி அழைத்து வந்து தாக்கியதாகவும் அந்த பெண்மணி குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் படிக்க | நீங்கள் உடனடி தனிநபர் கடன் செயலிகளைப் பயன்படுத்தலாமா? நன்மைகள், அபாயங்கள் விளக்கம்
இதற்கிடையில் தன் முன்னாள் மனைவியிடம், மாலாஹாத் அருகே சந்திப்பதாக கூறி அழைத்து வந்த மாஜி கணவன், அவரை சராமரியாக தாக்கியுள்ளார். போதாக்குறைக்கு, அந்த பெண்ணின் தந்தை மற்றும் தாயையும் கட்டிப் போட்டு தாக்கியுள்ளார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவர்களை காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள மனோஜ்குமாரை தேடி வருகின்றனர்.