
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், ஆகாஷ் தீப் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்
Ind vs Eng 2nd Test Results: ஆகாஷ் தீப்பின் அபார பந்துவீச்சு மற்றும் சுப்மன் கில்லின் தரமான பேட்டிங் காரணமாக, இங்கிலாந்து அணியை இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது இந்திய அணி.
இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
Ind vs Eng 2nd Test Results: இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி, டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கி நடந்து வந்தது. இதில் முதல் இன்னிங்ஸில் அபாரமாக ஆடி, இரண்டாவது இன்னிங்ஸில் பெரிய முன்னிலையுடன், இங்கிலாந்து அணிக்கு மெகா இலக்கு நிர்ணயித்த இந்திய அணி, இன்று 5வது நாளில் இங்கிலாந்தின் விக்கெட்டுகளை வீழ்த்தி, இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியில், இந்தியஅணியின் பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சிராஜ், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

இந்தியா- இங்கிலாந்து தொடரின் முன்னோட்டம்
Ind vs Eng 2nd Test Results: இந்திய அணி ஞாயிற்றுக்கிழமை அன்டர்சன்-தெண்டுல்கர் கோப்பைக்கான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை 336 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற இந்தப் போட்டியில், இந்தியா இங்கிலாந்துக்கு 608 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 271 ரன்களுக்கு சுருண்டது. இந்த வெற்றியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-1 என சமநிலையை அடைந்துள்ளது.
லீட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணிக்கு அதிகபட்சமாக ஜேமி ஸ்மித் ரன்கள் எடுத்தார். இந்தியாவுக்காக ஆகாஷ் தீப் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். எட்ஜ்பாஸ்டனில் இந்தியாவின் முதல் வெற்றி இந்திய அணி எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் முதல் முறையாக வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முன்பு எட்டு போட்டிகளில் விளையாடி ஏழு போட்டிகளில் தோல்வியும் ஒரு போட்டி டிராவாகவும் முடிந்தது.

கடந்த 2022 ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராக இந்த மைதானத்தில் இந்தியா ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதற்கு முன்பு எட்ஜ்பாஸ்டனில் 56 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் 29 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது. 12 போட்டிகளில் பந்துவீச்சு செய்த அணி வெற்றி பெற்றுள்ளது. 15 போட்டிகள் டிராவாக முடிந்துள்ளன. கில்லின் இரட்டை சதம், சிராஜின் சிக்ஸர் பர்மிங்காமில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்ஸில் 587 ரன்கள் எடுத்தது.
இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் இரட்டை சதம் (269) அடித்தார். யஸ்வி ஜெய்ஸ்வால் (87) மற்றும் ரவீந்திர ஜடேஜா (89) ஆகியோரும் முக்கிய பங்களிப்பை அளித்தனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டர் சரிந்தது. ஆனால் ஹாரி புரூக் மற்றும் ஜேமி ஸ்மித் இடையேயான 303 ரன்கள் கூட்டணி காரணமாக முதல் இன்னிங்ஸில் 407 ரன்கள் எடுத்தது. இந்த இன்னிங்ஸில் இங்கிலாந்தின் 6 பேட்ஸ்மேன்கள் கணக்கைத் திறக்கவில்லை. இந்தியாவுக்காக சிராஜ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஆகாஷ் தீப் ஜொலித்தார்
Ind vs Eng 2nd Test Results: இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் கேப்டன் சுப்மன் கில்லின் 161 ரன்கள், கே.எல்.ராகுல், பண்ட் மற்றும் ஜடேஜாவின் அரைசதங்கள் மூலம் 6 விக்கெட்டுகளுக்கு 427 ரன்கள் எடுத்து இன்னிங்ஸை டிக்ளேர் செய்து இங்கிலாந்துக்கு 608 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது. 608 ரன்கள் இலக்கை துரத்திய இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டர் மீண்டும் ஏமாற்றமளித்தது.

100 ரன்களுக்குள் அரை அணி பவிலியன் திரும்பியது. ஜேமி ஸ்மித் (88) ஐ ஆகாஷ் தீப் ஆட்டமிழக்கச் செய்து ஐந்து விக்கெட்எடுத்தார். பிரைடன் கார்ஸை ஆட்டமிழக்கச் செய்து இங்கிலாந்து இன்னிங்ஸை முடிவுக்கு கொண்டு வந்தார். ஆகாஷ் தீப் இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி மொத்தமாக 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இங்கிலாந்து அணிக்கு ஜேமி ஸ்மித் அதிகபட்சமாக 88 ரன்கள் எடுத்தார். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜூலை 10 ஆம் தேதி லார்ட்ஸில் நடைபெறும்.