
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் வெற்றியை நோக்கி இந்திய அணி
Ind vs Eng: இங்கிலாந்துக்கு எதிரான 3வது லாட்ஸ் டெஸ்ட் போட்டியில், வெற்றிக்கான வாய்ப்பை உறுதி செய்திருக்கிறது இந்திய அணி. இருப்பினும் இது சாத்தியமா?
இங்கிலாந்து விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியா
Ind vs Eng: இந்தியா- இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி செம மொமண்டில் வந்துள்ளது. டாஸ் ஜெயித்த இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 387 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இரண்டாவதாக பேட்டிங் செய்த இந்தியாவும் 387. ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. எனவே இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து ஆடக்கூடிய ஆட்டம் மிகவும் முக்கியத்துவம் பெற்றது. கடந்த இரண்டு போட்டிகளிலும் இரண்டாவது இன்னிங்ஸில் ஆடிய இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் சவாலான இலக்குகளை நிர்ணயித்தன.

அதேபோன்று இந்த போட்டியிலும் இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது இன்னிங்சில் பெரும் சவாலான இலக்கை நிர்ணயிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய அணியின் சூப்பர் பந்துவீச்சு இங்கிலாந்தை நிலைகுலைய வைத்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் மட்டும் 40 ரன்களை எடுத்தார். மற்ற யாரும் எதிர்பார்த்த அளவில் சோபிக்கவில்லை. இதனால் இங்கிலாந்து 192 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
மேலும் படிக்க | அதிர்ச்சி! வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 3வது டெஸ்ட்.. ஆஸ்திரேலிய அணியில் இருந்து நாதன் லயன் நீக்கம்

வெற்றி வாய்ப்புடன் இந்திய அணி
Ind vs Eng: கடந்த இன்னிங்ஸ்களில் இந்திய அணிக்கு பெரும் சவாலாக விளங்கிய ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜே.எல். ஸ்மித் ஆகிய மூன்று விக்கெட்டுகளை மிக எளிதாக கைப்பற்றிய வாஷிங்டன் சுந்தர் இறுதியாக பஷீரின் விக்கெட்டையும் வீழ்த்தி இந்தியாவுக்கு எளிதான இலக்கை நிர்ணயிக்க காரணமாக இருந்தார். தற்போது இந்தியா அணி 193 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி தன்னுடைய இரண்டாவது இனிசை தொடர்ந்து ஆடி வருகிறது. இந்திய அணி தற்போதைய நிலவரப்படி, 3 விக்கெட்டுகளை இழந்து, 57 ரன்கள் எடுத்துள்ளது. ஜெய்ஸ்வால் மற்றும் கருண் நாயர், ஷூப்மன் கில் ஆட்டமிழந்த நிலையில், ஆகாஷ் தீப் 1 ரன் உடனும், கே.எல்.ராகுல் 29 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
மேலும் படிக்க | அயர்லாந்து பந்துவீச்சாளர் 5 பந்துகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை!
எனவே, இந்தியா 193 ரன்கள் எடுத்தால் 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெறும் என்ற நிலையில் இந்த போட்டியில் 193 ரன்களை இந்தியா எடுக்க வேண்டும் என்ற நிலையில் தொடர்ந்து ஆடி வருகிறது. இப்போது வரை இந்தியாவுக்கு சாதகமான சூழல் மட்டுமே நிலவும் நிலையில், பந்து வீச்சில் மாயம் செய்தால் போட்டி இங்கிலாந்து வசம் மாறலாம். இருப்பினும் நாளை ஒரு நாள் மட்டுமே, போட்டிக்கான நாள் எஞ்சியுள்ளது. இலக்கும் குறைவு, தற்போது எடுத்துள்ள ரன்களும் ஓகே என்கிற முறையில், இந்தியாவுக்கான வாய்ப்பு தான் அதிகம் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.