
சுப்மன் கில் (image source: x)
Shubman Gill: சிராஜ், இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸில் ஜேக் கிரவ்லி, ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் ஆகிய மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து அணியை கட்டுப்படுத்தினார்.
Cricket News in Tamil: இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா- இங்கிலாந்து இடையிலான 5 டெஸ்ட் போட்டி தொடரில் முதல் மேட்ச்சில் அபாரமாக பேட்டிங் செய்தும் 2வது இன்னிங்ஸில் பந்துவீச்சில் சொதப்பிய இந்திய அணியால் வெற்றி பெற முடியாமல் போனது.
பும்ரா இல்லாத நிலையில் 2 வது போட்டியில் இந்தியா வெற்றி பெறுமா? என்ற சந்தேகம் இந்திய ரசிகர்களுக்கு இருந்தது. 2வது டெஸ்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து, இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தது. முதல் இன்னிங்சில் இந்திய கிரிக்கெட் இளவரசர் சுப்மன் கில் 269 ரன், 2வது இன்னிங்சில் 161 ரன்களையும் குவிக்க இங்கிலாந்துக்கு இலக்கு 608 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
முதல் இன்னிங்ஸில் இந்தியா 587 ரன்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 427/6 ரன்களை எடுத்து டிக்ளர் செய்தது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்தின் 6 விக்கெட்டுகளை சிராஜும், 4 விக்கெட்டுகளை ஆகாஷ் தீப்பும் வீழ்த்தி முன்னிலை பெற்றுக் கொடுத்தனர். அதிலும் இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த டக்கெட், ஒல்லி போப் ஆகியோரை டக் அவுட் ஆக்கி அவர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் ஆகாஷ் தீப்.
இதையும் படிங்க | Ind vs Eng 2nd Test Results: 58 ஆண்டுகளுக்குப் பின் பர்மிங்காமில் இந்தியா அபார வெற்றி.. 6 விக்கெட் வீழ்த்தி ஆகாஷ் தீப் அசத்தல்!
இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸில்..
இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸில் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜெமிஸ்மித் ஆகிய 5 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி சாதித்துள்ளார் ஆகாஷ் தீப். சிராஜ், இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸில் ஜேக் கிரவ்லி, ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் ஆகிய மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து அணியை கட்டுப்படுத்தினார்.
மொத்தத்தில் சுப்மன் கில், ஆகாஷ் தீப், சிராஜ் அடங்கிய புதிய கூட்டணி இங்கிலாந்தில் சாதித்துள்ளது. வரும் போட்டிகளிலும் இந்த வெற்றி தொடர வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
இதையும் படிங்க | Akash Deep: 49 வருடங்களில் எந்த பந்துவீச்சாளரும் நெருங்காத சாதனை! அக்ரம், மெக்ராத், வார்ன் செய்யாததை முடித்த ஆகாஷ் தீப்!
ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜுக்குப் பிறகு, அல்லது லீட்ஸ் டெஸ்டில் பிரசித் கிருஷ்ணாவிற்குப் பிறகு மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராகவே ஆகாஷ் இருக்கிறார். அவர்களில் ஒருவர் ஓய்வெடுத்தாலோ அல்லது இடைவெளி எடுத்தாலோ, இந்தியா மூன்று முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களைத் தேர்ந்தெடுத்தால், அப்போதுதான் ஆகாஷ் அணியில் இடம் பெறுவார். ஆனால், எட்ஜ்பாஸ்டன் டெஸ்டின் 5வது நாளில் இங்கிலாந்துக்கு எதிரான அவரது முதல் ஐந்து விக்கெட் சாதனையின் போது அவர் படைத்த வரலாற்றுச் சாதனையைக் கருத்தில் கொண்டு, அவரை இந்தியாவின் ப்ளேயிங் 11-ல் இருந்து எப்படி விலக்க முடியும்?