
பந்தை ஓங்கி அடிக்க முயன்று பேட்டை பறக்கப்பட்ட ரிஷப் பண்ட்
Rishabh Pant: வெளிநாட்டில் அதிக சிக்சர்கள் அடித்த சாதனையில் ரிஷப் பண்ட் புதிய உச்சம் தொட்டுள்ளார். இங்கிலாந்தில் 23 சிக்சர்களை அடித்து பென் ஸ்டோக்ஸின் சாதனையை அவர் முறியடித்தார்.
Rishabh Pant: ரிஷப் பண்ட் களத்தில் இருந்தாலே, அங்கு எப்போதும் அமைதி இருக்காது. பேட்டிங், விக்கெட் கீப்பிங் அல்லது கிரிக்கெட் மைதானத்திற்கு வெளியே நகைச்சுவையாக எது நடந்தாலும், அதில் ரிஷப் பண்ட் முக்கிய நபராக இருந்து, கவனத்தை ஈர்ப்பார். இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளில், ரிஷப் பண்ட் ஒரு உலக சாதனையை படைத்துள்ளார். அதுவும் போகிற போக்கில் அதை செய்து முடித்தார். வெளிநாட்டில் அதிக சிக்சர்கள் அடித்த சாதனையை பண்ட் தற்போது தன்வசமாக்கியுள்ளார்.

இறங்கியது முதல் ஏறுமுகம்
Rishabh Pant: இங்கிலாந்தில், இன்றைய போட்டியின் நான்காவது நாள் மதிய உணவு வரை அவர் 23 சிக்சர்களை விளாசியுள்ளார். இதற்கு முன் இந்த சாதனை படைத்த பென் ஸ்டோக்ஸை விட, இது இரண்டு அதிகம் ஆகும். ஸ்டோக்ஸ் தென்னாப்பிரிக்காவில் 21 சிக்சர்களை அடித்துள்ளார். கே.எல்.ராகுலின் விக்கெட்டை ஜாஷ் டங் அசத்தலாக வீழ்த்திய பின்னர் 5வது இடத்தில் பண்ட் களமிறங்கினார். தொடர்ந்து 140 கிமீ வேகத்தில் பந்துவீசும் அவரை, அனாயசமாக எதிர்கொண்டார் பண்ட்.
மேலும் படிக்க | India’s tour of Bangladesh: ஒத்திவைக்கப்படும் இந்திய அணியின் வங்கதேச பயணம்.. காரணம் என்ன?
Typical, #RishabhPant! 🔥
— Star Sports (@StarSportsIndia) July 5, 2025
Just his 4th ball in the innings and Pant dances down the track to score a SIX! 💪🏻
Will his approach of counter-attack guide #TeamIndia to a big lead? 👀#ENGvIND 👉 2nd TEST, Day 4 | LIVE NOW on JioHotstar ➡ https://t.co/2wT1UwEcdi pic.twitter.com/paBL5tyaGT
களத்தில் இறங்கியதுமே, ஆக்ரோஷத்தை வெளிப்படுத்திய பண்ட், பந்துகளை பறக்கவிட ஆரம்பித்தார். இங்கிலாந்தில் அவரது 22வது சிக்சர், வெளிநாட்டில் எந்த பேட்ஸ்மேனும் அடித்த அதிகபட்ச சிக்சர்களுக்கான ஸ்டோக்ஸின் சாதனையை முறியடித்தது. பண்ட் ஒரு கொடுத்த ஒரு வாய்ப்பை இங்கிலாந்து தவற விட, தன்னுடைய வழக்கமான அதிரடியை தொடர்ந்து கொண்டிருந்தார் பண்ட்.
பேட்டை பறக்கவிட்ட ரிஷப் பண்ட்
Rishabh Pant: ஸ்வீப் ஷாட்டுகளால், இங்கிலாந்து பவுலர்களை புரட்டிக் கொண்டிருந்த பண்ட், சத்தமில்லாமல் சாதனையை படைத்தார். இந்த சாதனை மகிழ்ச்சிக்கு இடையே, 34வது ஓவரின் நான்காவது பந்தில், மற்றொரு அற்புதமான விஷயம் நடந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் அடித்த சிக்சரை மீண்டும் அடிக்க முயற்சிக்கும்போது, பண்ட் தனது பேட்டை கைதவறி பறக்கவிட்டார்.
It's a bird… It's a plane… No! It's @RishabhPant17's BAT! 😂
— Star Sports (@StarSportsIndia) July 5, 2025
Never change, Rishabh! 😎#ENGvIND 👉 2nd TEST, Day 4 | LIVE NOW on JioHotstar ➡ https://t.co/2wT1UwEcdi pic.twitter.com/CboSDVZ3Jl
அவர் மிகவும் கடுமையாக அடித்த முற்பட்டு பேட்டை வீசியதால், அவரது கையிலிருந்து வெளியேறி ஸ்கொயர் லெக் அருகே விழுந்தது. அதைப் பார்த்து, எட்ஜ்பாஸ்டனில் உள்ள கிட்டத்தட்ட அனைவரையும் சிரிக்க ஆரம்பித்தனர். டிரஸ்ஸிங் ரூமில் இருந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஜஸ்பிரித் பும்ரா, விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினார்.
மேலும் படிக்க | Donovan Ferreira: திடீரென டிரெண்ட் ஆகும் டொனோவன் பெரேரா.. இவர் பற்றி தெரியுமா?
அவருடன் சேர்ந்து முகமது சிராஜும், சிரிப்பதை காண முடிந்தது. 42வது ஓவரில் இந்திய அணி 3 விக்கெட்டுகளுக்கு 212 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் ஷூப்மன் கில் 51 ரன்கள், துணை கேப்டன் ரிஷப் பண்ட் 48 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.