
போருக்கு பின் ஈரான் தலைவர் காமேனி வெளியிட்ட அறிக்கை
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே 12 நாட்கள் நடந்த போருக்குப் பிறகு, அமெரிக்கா இரு தரப்பினரின் சார்பாகவும் போர் நிறுத்தத்தை அறிவித்தது. இதற்கு முன், அமெரிக்கா இந்தப் போரில் பங்கேற்கு, ஜூன் 22 அன்று ஈரானின் மூன்று அணுசக்தி தளங்கள் மீது 30,000 பவுண்டுகள் எடையுள்ள கனரக குண்டுகளை வீசியது.
உலகம் உற்று நோக்கிய இஸ்ரேல்-ஈரான் போர் முடிந்த பிறகு, வியாழக்கிழமையான இன்று ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி தனது முதல் பொது அறிக்கையை வெளியிட்டார், அந்த அறிக்கையில், ஈரான், இஸ்ரேலை வென்றதாகக் அவர் கூறியுள்ளார். இஸ்ரேலிய இராணுவம் தெஹ்ரானில் குண்டுவீசிய பின்னர் 12 நாள் போரின் போது கமேனி ஒரு ரகசிய இடத்தில் தஞ்சம் புகுந்திருந்தார். போருக்கு பிறகான இன்றைய தனது உரையில், மூன்று ஈரானிய அணுசக்தி தளங்கள் மீதான அமெரிக்க வான்வழித் தாக்குதல்கள் நடத்தியது குறித்து அவர் பேசினார்.
மேலும் படிக்க | ITR: வரி அறிக்கையை தாக்கல் செய்யப் போறீங்களா? படிவம் 16 மற்றும் படிவம் 26AS இல் பொருந்தாதை அறிய.. சரிசெய்ய.. தகவல் இதோ!
அமெரிக்கா முகத்தில் அறைந்தோம்
அமெரிக்கத் தாக்குதல்கள் நமது அணுசக்தி தளங்களுக்கு அதிக சேதத்தை ஏற்படுத்த முடியாது, ஆனால் அமெரிக்க இராணுவத் தளங்களை தாக்கியதன் மூலம், நாம் அதன் முகத்தில் அறைந்துள்ளோம் என்று காமேனி கூறினார். போர்நிறுத்தத்திற்குப் பிறகு தனது முதல் வீடியோ செய்தியில், தனது நாடு அமெரிக்காவின் முகத்தில் அறைந்து போலவே, இஸ்ரேலையும் வென்றதாகக் காமேனி கூறினார். இந்த மோதலின் போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது பாசாங்குத்தனமான அணுகுமுறையைக் காட்டினார் என்றும், அதே நேரத்தில் அதை மேம்படுத்த வேண்டும் என்றும் காமேனி கூறினார்.
ஜூன் 22 அன்று, அமெரிக்கா 12 நாட்களாக நடந்து வந்த இஸ்ரேல்-ஈரான் போரில் குதித்து, ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹானில் உள்ள இஸ்லாமியக் குடியரசின் முக்கிய அணுசக்தி தளங்களைத் தாக்கியது. மறுநாளே, கத்தார் மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைகளால் தாக்கியது.
போரினால் எதுவும் பெறவில்லை
கமெனியின் X கணக்கில் இருந்து ஒரு பதிவு வெளியிடப்பட்டது. அதில், “அமெரிக்க ஆட்சியை வென்றதற்காக நமது அன்பான ஈரானுக்கு வாழ்த்துக்கள். அவ்வாறு செய்யாவிட்டால், சியோனிச ஆட்சி முற்றிலுமாக அழிக்கப்படும் என்று உணர்ந்ததால் அமெரிக்க ஆட்சி நேரடியாகப் போரில் நுழைந்தது. இருப்பினும், இந்தப் போரினால் அது எதையும் பெறவில்லை. இங்கும், இஸ்லாமிய குடியரசு வெற்றி பெற்றது, அதற்கு ஈடாக, அமெரிக்கா முகத்தில் பலத்த அடி வாங்கியது.” இருப்பினும், அமெரிக்கா “இந்தப் போரினால் எதையும் பெறவில்லை” என்று அந்த பதிவில் அவர் கூறியுள்ளார். காமெனி இந்த புதிய அறிக்கையை ,சமூக ஊடகங்களில் பதிவிட்ட சில நாட்களுக்குப் பிறகு வருகிறது, அதில் “ஈரான் எந்த சூழ்நிலையிலும் யாரிடமிருந்தும் எந்த வகையான ஒடுக்குமுறையையும் ஏற்றுக்கொள்ளாது, யாருக்கும் தலைவணங்காது” என்று அவர் கூறியுள்ளார்.