
கர்டிஸ் கேம்பர், நார்த் வெஸ்ட் வாரியர்ஸ் அணிக்கு எதிராக 5 பந்துகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்தார். ஆண்கள் தொழில்முறை கிரிக்கெட்டில் இந்த சாதனையை நிகழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
அயர்லாந்து ஆல்ரவுண்டர் கர்டிஸ் கேம்பர் 5 பந்துகளில் தொடர்ச்சியாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆண்கள் கிரிக்கெட்டில் வரலாறு படைத்தார். ஆண்கள் கிரிக்கெட்டில் இத்தகைய சாதனையை நிகழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை கர்டிஸ் கேம்பர் பெற்றுள்ளார். மாகாணங்களுக்கு இடையிலான டி 20 டிராபியில் நார்த்-வெஸ்ட் வாரியர்ஸுக்கு எதிராக மன்ஸ்டர் ரெட்ஸ் அணிக்காக விளையாடியபோது அவர் இந்த உலக சாதனையை செய்தார். அவர் 2.3 ஓவர்களில் 16 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒரு கட்டத்தில் நார்த் வெஸ்ட் வாரியர்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் எடுத்தது. கர்டிஸ் கேம்பரின் அபாயகரமான பந்துவீச்சுக்கு முன்னால் அந்த அணி 88 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
மன்ஸ்டர் ரெட்ஸ் கேப்டன் கேம்பர்
மன்ஸ்டர் ரெட்ஸ் கேப்டன் கேம்பர் தனது இரண்டாவது மற்றும் மூன்றாவது ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நார்த் வெஸ்ட் வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 12-வது ஓவரின் 5-வது பந்தில் கேம்பர் தனது முதல் விக்கெட்டை வீழ்த்தினார்.
அவர் ஜாரெட் வில்சனை காலி செய்தார், அடுத்த பந்தில் கிரஹாம் ஹியூம் பேக்ஃபுட்டில் எல்பிடபிள்யூ ஆனார். இதையடுத்து 14-வது ஓவரில் பந்துவீச வந்த கேம்பர், தனது முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார். இந்த நேரத்தில், அவர் ஆண்டி மெக்பிரைனை டீப் மிட்விக்கெட்டில் தனது பலிகடாவாக ஆக்கினார்.
இதையும் படிங்க | 100 ஆண்டுகளாக நிலைத்து நிற்கும் டான் பிராட்மேனின் 4 உலக சாதனைகளை முறியடிப்பாரா கில்?
இதையடுத்து 10-வது இடத்தில் வந்த ராபி மில்லரையும், 11-வது இடத்தில் வந்த ஜோஷ் வில்சனையும் வீழ்த்தினார். இரண்டு ஓவர்களில் தொடர்ச்சியாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியபோது, இந்த சாதனை பற்றி தனக்கு தெரியாது என்று கேம்பர் போட்டிக்குப் பிறகு கூறினார். “என்ன நடக்கிறது என்று எனக்கு உண்மையில் புரியவில்லை” என்று அவர் கிரிக்கெட் அயர்லாந்திடம் கூறினார். நான் என் பாயிண்டில் இருந்தேன்.மிகவும் எளிமையாக வைத்திருந்தேன், அதிர்ஷ்டவசமாக அது வேலை செய்தது. முன்னதாக 2021 டி20 உலகக் கோப்பையில் நெதர்லாந்துக்கு எதிராக கேம்பர் நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.