
பூ வரையும் பூங்கொடியே பாடல் உருவான கதை
இதயத்தில் நீ படத்தில் இடம்பெற்ற பூ வரையும் பூங்கொடியே பாடல் உருவான கதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம்.
முக்தா சீனிவாசன் இயக்கத்தில் 1963 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் இதயத்தில் நீ. இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், தேவிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படத்தில் இடம்பெற்ற பூ வரையும் பூங்கொடியே பாடல் உருவான கதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம்.
வாலி சொன்ன விஷயம்
எம்எஸ்வி இசையில் வாலி வரிகள் எழுத பி.பி.சீனிவாஸ் இனிமையான குரலில் அமைந்த அற்புதபாடல் தான் இது. இந்த பாடல் உருவான விதம் குறித்து வாலி ஒரு நேர்காணலில் கூறியிருப்பார். அதில், “என்னை மாறன் என்ற கதையாசிரியர் தான் முதலில் முக்தா சீனிவாசனிடம் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது இதயத்தில் நீ படபிடிப்பு நடந்து கொண்டு இருந்தது. இப்படத்திற்கு எம் எஸ் விஸ்வநாதன் இசையமைப்பாளர். அவரிடம் சீனிவாசன் எனக்கு தெரிந்த வாலி என்ற ஒரு பையன் இருக்கான் அவனுக்கு ஒரு பாடல் கொடுக்கலாம் என கேட்டுள்ளார்.
இதற்கு எம்எஸ்வி நாம் ஏற்கனவே பிஸியா இருக்கோம் புது ஆள் போட்டு பாடல் தாமதம் ஆனால் பிரச்சனை ஆகிவிடும் என்று சொல்லிவிட்டார். பின்னர் திடீர்னு என்ன நினைத்தாரோ தெரியவில்லை என்னை நாளைக்கு வர சொல்லிவிட்டார். அடுத்த நாள் கார் என்னை அழைத்து செல்ல வீட்டுக்கு வந்தது.
பாடலின் கதை
பின்னர் ஸ்டுடியோ சென்று சீனிவாசனை சந்திக்கிறேன். அவர் எனக்கு இப்படத்தில் நாயகி எம்ராய்டிங் போட்டுக் கொண்டு இருக்கிறார். அவரை பார்த்து நாயகன் பாடல் பாடுகிறார் இதுதான் காட்சி. இது ஒரு காதல் பாடல். இதற்கு நீ நாளை பல்லவி எழுதி கொண்டுவா எம்எஸ்வியிடம் காட்டுவோம் அவர் ஓகே சொல்லிவிட்டார் என்றால் வைத்துக்கொள்ளலாம் இல்லை என்றால் ஒன்னும் பண்ண முடியாது என்று சொல்லிவிட்டார். நீ என் சொந்தகாரன் என சொல்லி அவரிடம் பேசி பார்க்கிறேன் என அவர் சொன்னார். நான் அதற்கு மறுத்துவிட்டேன். என் பாடலை பார்த்து அவர் ஒகே சொல்லட்டும், சொந்தகாரன் என்ற கட்டாயத்தால் ஒகே சொல்லக்கூடாது என சொல்லிவிட்டேன்.
அடுத்தநாள் நான ”பூ வரையும் பூங்கொடியே
பூ மாலை போடவா
பொன் மகளே வாழ்கவென்று
பாமாலை பாடவா
பாமாலை பாடவா
பூ வரையும் பூங்கொடியே
பூ மாலை போடவா
பொன் மகளே வாழ்கவென்று
பாமாலை பாடவா
பாமாலை பாடவா
நீ வரையும் ஓவியத்தை
கைகளினால் வரைந்தாயே
நீ வரையும் ஓவியத்தை
கைகளினால் வரைந்தாயே
நான் வரைந்த ஓவியத்தை
கண்களினால் வரைந்தேனே
நான் வரைந்த ஓவியத்தை
கண்களினால் வரைந்தேனே
வடிவங்கள் மறைந்து விடும்
வண்ணங்கள் மறையாதே” பாடல் எழுதி அவரிடம் காட்டினேன் அவர் பார்த்து பிரமித்துவிட்டார். அதில் பூவைக்கு பதில் பூங்கொடி சேர்த்து கொள்ளலாம் என சொன்னார் நானும் சரி மாற்றிக்கொள்ளலாம் என சொன்னேன். பின்னர் அவர் நான் டியூன் போடுவேன் அந்த டியூனுக்கு தான் நீ சரணம் எழுத வேண்டும் என சொன்னார். நான் அவர் அந்த ஹார்மோனியத்தில் விரல்களை வைத்து இசைக்கும் முன்பே எழுதிவிட்டேன். அவர் பார்த்து வியந்துவிட்டார்.பின்னர் அடுத்த பாடலையும் என்னையே எழுத சொல்லிவிட்டார்” எனக் கூறினார்.