
கொங்கு நாட்டு ஸ்டைல் பச்சை பயறு கடையல்
கொங்கு நாட்டு ஸ்டைலில் ருசியான பாசிப்பயிறு கடையல் செய்ய தேவையான பொருட்களையும் செய்முறையையும் இங்கு பார்க்கலாம்.
பாசிப்பயிறு உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதில் புரதச்சத்து அதிக அளவில் உள்ளது. இங்கு கொங்கு நாட்டு ஸ்டைலில் ருசியான பாசிப்பயிறு கடையல் எப்படி செய்வது என்பதை பார்க்கலாமா
தேவையான பொருட்கள்
பச்சை பயறு – 1 கப்
சின்ன வெங்காயம் – 100 கிராம்
தக்காளி – 1
பூண்டு – 10 பற்கள்
பச்சை மிளகாய் – 3
சீரகம் – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி விதை – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மிளகாய் வத்தல் -1
பெருங்காயம் – 1/2 ஸ்பூன்
விளக்கு எண்ணெய் – 1 ஸ்பூன்
கடலெண்ணெய் – 3 ஸ்பூன்
கடுகு உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
பாசிப்பயிறு கடையல் செய்முறை
ஒரு கப் பச்சை பயிறை கடாயில் சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். பயிர் நிறம் மாறி வாசம் வரும் போது அதை தனியாக எடுத்து கழுவி குக்கரில் சேர்த்து கொள்ள வேண்டும். அதில் மஞ்சள் தூள், ஒரு தக்காளி மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து வேண்டும். அதில் ஒரு ஸ்பூன் விளக்கு எண்ணெய்யை சேர்க்க வேண்டும். 3 கப் அளவு தண்ணீர் சேர்த்து 3 முதல் 5 விசில் வரை வைத்து எடுத்து கொள்ள வேண்டும்.
ஒரு இடிகல்லில் சீரகம் மற்றும் கொத்த மல்லி விதையை சேர்த்து நன்றாக இடித்து எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் பூண்டையும் ஒன்றிரண்டாக தட்டி எடுத்து கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க : சண்டே ஸ்பெஷல் கமகமக்கும் மட்டன் பிரியாணி எப்படி செய்வது பாருங்க.. ருசி அட்டகாசம் தா!
குக்கரில் வேக வைத்த பச்சை பயிறை ஒன்றிரண்டாக மசித்து எடுத்து கொள்ள வேண்டும். அதில் தேவையான அளவு உப்பையும் சேர்த்து கொள்ள வேண்டும்.
இப்போது ஒரு கடாயில் கடலெண்ணெய் விட்டு சூடாக்க வேண்டும். அதில் கடுகு உளுந்தம் பருப்பை சேர்த்து தாளிக்க வேண்டும். கடுகு வெடித்த பிறகு அதில் இடித்து எடுத்த மல்லிவிதை மற்றும் சீரகத்தை சேர்க்க வேண்டும். ஒரு மிளகாய் வத்தலையும் சேர்க்க வேண்டும். வேண்டும்.
மேலும் படிக்க : ருசியான பனீர் புர்ஜி.. சூடான சப்பாத்தி ரொட்டியுடன் சாப்பிட சரி காம்பினேஷன்.. நீங்களும் ட்ரை பண்ணுங்க!
பின்னர் அதில் இடித்த பூண்டையும் சேர்க்க வேண்டும். அதில் 100 கிராம் அளவு சின்ன வெங்காயத்தை சேர்க்க வேண்டும். ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்க்க வேண்டும். மேலும் சின்ன வெங்காயத்தையும் சேர்த்து வதக்க வேண்டும். அதில் பெருங்காய தூளையும் சேர்த்து கலந்து விட வேண்டும். பின்னர் மசித்து எடுத்த பச்சை பயிறையும் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
தேவையென்றால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். அதில் சிறிதளவு மல்லி இலையை நறுக்கி சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். தேவையென்றால் மேலும் ஒரு முறை பாசிபயிற நன்றாக கடைந்து விட வேண்டும். அவ்வளவுதான் ருசியான பாசிப்பயிறு கடையல் ரெடி.. சூடான சாதத்துடன் நல்லெண்ணெய் அல்லது நெய் விட்டு பாசிப்பயிறை சேர்த்து சாப்பிட்டு பாருங்கள். ருசி அட்டகாசமாக இருக்கும். மேலும் சூடான இட்லி தோசை சப்பாத்தியுடனும் சாப்பிடலாம்.