
குண்டு குண்டு குலாப் ஜாமூன் செய்யலாமா? இப்படி செய்து பாருங்க.. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க!
நீங்களே மிக்ஸ் செய்து குண்டு குண்டு குலோப் ஜாமூனை குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள். இதோ எப்படி செய்வது என்பது குறித்து பார்க்கலாம்
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஸ்வீட் என்றால் அது குலாப் ஜாமூன் தான். இந்த குலோப் ஜாமுனை வீட்டிலேயே நீங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம். அது எப்படி செய்வது என்பது குறித்து இதில் பார்க்கலாம்.
நீங்கள் கடைகளில் ரெடிமேடாக வாங்கி செய்து சாப்பிடுவதை விட வீட்டிலேயே இந்த மாதிரி பொருட்களை வைத்து குலோப் ஜாமூன் மாவை தயாரித்து செய்து சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும். எனவே இனி குலாப் ஜாமூன் மிக்ஸ் வாங்க தேவையில்லை. இப்படி நீங்களே மிக்ஸ் செய்து குண்டு குண்டு குலோப் ஜாமூனை குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள். இதோ எப்படி செய்வது என்பது குறித்து பார்க்கலாம்
குலாப் ஜாமூன் செய்ய தேவையான பொருட்கள்
ஜாமுன் மாவுக்கு
இனிப்பு குறைவான கோயா 500 கிராம் (பால் பொருள்)
மைதா 150 கிராம்
சோள மாவு 100 கிராம்
எண்ணெய் 2 டீஸ்பூன்
தேவையான அளவு தண்ணீர் (மென்மையான சப்பாத்தி மாவு நிலைத்தன்மை)
ஏலக்காய் தூள் 2 சிட்டிகை
பொரிப்பதற்கு எண்ணெய்
சிரப்புக்கு
சர்க்கரை 500 கிராம்
தண்ணீர் 500 மி.லி
ஏலக்காய் தூள் சிட்டிகை
ரோஸ் வாட்டர் 1 டீஸ்பூன்
குலாப் ஜாமூன் செய்வது எப்படி
முதலில் அரைக்கிலோ கோயா எடுத்துக்கொள்ளுங்கள். அதில் மைதா 150 கிராம்,சோள மாவு 100 கிராம்,எண்ணெய் 2 டீஸ்பூன்,தேவையான அளவு தண்ணீர் ஏலக்காய் தூள் 2 சிட்டிகை சேர்த்து மென்மையான பதத்திற்கு வரும் வரை நன்கு மிக்ஸ் செய்யவும்.
பின்னர் அதனை சிறு சிறு உருண்டையாக உருட்டிக்கொள்ளுங்கள். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி உருண்டையை அதில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். இப்போது சிரப்புக்கு அதாவது பாகு செய்வதற்கு சர்க்கரை 500 கிராம், தண்ணீர் 500 மி.லி, ஏலக்காய் தூள் சிட்டிகை, ரோஸ் வாட்டர் 1 டீஸ்பூன் சேர்த்து பாகு பதத்திற்கு காய்ச்சவும்.
நன்கு காய்ச்சிய பிறகு அடுப்பை சிம்மில் வைத்து பொறித்து வைத்த உருண்டைய போட்டு ஊறவைக்கவும். பின்னர் 1 மணி நேரம் ஊறவைத்து பின்னர் எடுத்து சாப்பிட்டு பாருங்கள் அவ்வளவு அருமையாக இருக்கும்.